Wednesday, April 20, 2022

பாவடி (பாவோடி)

பாவடி என்றவுடன் நமது ஊர் பெரியவர்கள் பசங்கள் எங்கே என்று கேட்டால்  பாவடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். 

 நாம் என்றாவது  பாவடி என்றால் என்ன கேள்வி கேட்டது உண்டா. அதற்கு பின்னாடி ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.  1900  காலகட்டத்திற்க்கு முன் அனைத்து  வியாபார தொழிலில்களையும் முஸ்லிம்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் நெசவுத்தொழில்.  இன்று பனியன்  ஆடை தொழிலை உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் அதன் முன்னோடிகள் முஸ்லிம்கள்தான். அவர்கள்தான் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வரவைத்து நவீன முறையில் நெசவு தொழிலை செய்து கொண்டிருப்பது  அனைவரும்  அறிந்த உண்மை.

 எழுத்தாளர் டாக்டர் S.M. கமால் எழுதிய  முஸ்லிம்களும் தமிழகமும் என்ற நூலில் நமது ஊர் போகலூர் இல் 50 தறிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நமது ஊர் முஸ்லிம்கள் நெசவுத் தொழிலை செய்தார்கள் என்ற குறிப்புகளை அடிக்கோடிட்டு எழுதியுள்ளார். அதில் எந்த ஊர்களில் பாவடி என்ற தெரு இருக்கிறதோ அந்த ஊரில் நெசவுத்தொழில் இருந்தது என்று ஆதாரமாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பாவடி என்கின்ற தெருதான்.   

 பாவடி என்றால்  நூலுக்கு சாயம் இட்டு  காயவைக்கும் இடம். அந்த இடம் அகலமாகவும் ரொம்ப நீளமாகவும் இருக்கும். நாம் எமனேஸ்வரம் ஊர் சென்று இருந்தால் அங்கே சாயமிடும் காட்சிகளே நாம் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.  நெசவு பணியில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  அதில் ஒன்றுதான் நாம் புதிய பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி உள்ள தெரு அகலமாகவும் நீளமாகவும் உள்ளது அதற்கே தான் பாவடி தெரு நமது சிறுவயதிலிருந்து நம்முடன் தொடர்புடைய இந்த பாவடி தெருவை நாம் அதன் பழமை மாறாமல்  பாதுகாப்பது நமது கடமை.


நமது நிருபர் 

சாமானியன்

போகலூர்

நமது பள்ளிக்கூடம்

 நமது பள்ளிக்கூடம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி. சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் கல்வியின் மீது பற்றும் சமுதாயம் நலன் கொண்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு நினைவாக அவர்கள் பெயரான நூருல்லா என்ற பெயரை நமது பள்ளிக்கு நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

 நமது பள்ளிக்கூடத்து பின் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.  ராமநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யதம்மாள் உயர்நிலைப்பள்ளி  1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹைரத்துல்  ஜமாலியா உயர்நிலைப்பள்ளி பரமக்குடி 1981 துவங்கப்பட்டது.

 நமது பள்ளிக்கூடம் ஆரம்பகாலத்தில் மண் சுவர்   கட்டடத்தில் இயங்கியது. மக்களின் தொடர் முயற்சியாலும் கடும் உழைப்பாலும் செங்கல் கற்களால்  கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள ஓட்டு கட்டடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. நமது நூருல்லா முஸ்லிம் பள்ளிக்கூடம்  மக்களின்  தொடர் முயற்சியால் காங்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளது.

 நமது பள்ளிக்கூடத்தின் படித்த பல நூறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். குறிப்பாக டாக்டர்,  இன்ஜினியர், அரசுத் துறைகள் மற்றும் பல துறைகளில் தங்களை பங்களிப்பை சிறப்பாக ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்கள்  உருவாக காரணமாக இருந்தது நமது நூருல்லா முஸ்லிம்  தொடக்கப்பள்ளி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு இனிமையான காலம் அதில் ஆரம்பப்பள்ளி என்பது தனிச்சிறப்பு அப்படிப்பட்ட சிறப்பு சொந்தமான இருக்கக்கூடிய நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன். நாம் இன்று இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கு அடிப்படை காரணமாக இருந்த நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு நாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்க  கடமைப்பட்டுள்ளோம்.

2013 ஆம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த ஆண்டே நாம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பவள விழா  கொண்டாடி இருக்க  வேண்டும். என்ன காரணங்கள் நம்மை பவள விழா கொண்டாடுவதை தடுத்தது என்று ஆயிரம் கேள்விகள் எழும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உறுதியேற்போம்.


  நமது வீட்டை நாம் எப்படி பராமரிப்போம் அதே போன்று நமக்கு கல்வி தந்த நமது பள்ளிக்கூடத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அங்கு படித்த ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும்  கடமை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை நம் கண்முன் நிறுத்தி  பார்க்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இது எனது பள்ளி எனது கடமை என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒவ்வொரு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கடமையாகும்.

ஆரம்பம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ஒருவரின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்வி தந்த நூருல்லா தொடக்கப் பள்ளிக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் .


நமதுநிருபர்

சாமானியன்

போகலூர்

போகலூர்

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் போகலூர். இதன் பெயர் புகலூர் என்ற பெயரிலிருந்து மருவி போகலூர் ஆகியது. 

தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.

சேதுபதி மன்னர்கள்  கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள்  போகலூரை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.இன்றும் சேதுபதி மன்னர்  அரண்மனையின் சிதிலமடைந்த சுவர்கள்  போகலூரில் காணப்படுகின்றன. 

போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

போகலூர் கிராமம் என்ற முறையில் இருந்தாலும் இன்று 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

அரசு சித்த மருத்துவமையம், 

அரசு கால்நடை மருந்தகம், 


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 

நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி


அரசு அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

கிராம அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகங்கள்,

நூலகம் போன்றவை இந்த ஊரின் சிறப்புகளை பறைசாற்றுகின்றன.

இந்திய தேசம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி இருப்பது என்றால் அது நமது போகலூரில் உள்ள சுங்கச்சாவடி தான் இந்த சிறப்பு அமையும்.

இவ்வளவு  வரலாற்றுக்கு சொந்தமான நமது போகலூர் கூடிய விரைவில் பேரூராட்சி அந்தஸ்தை பெறும் என்பதை நாம் அனைவரும்  எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மக்கள்  நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இதில் விதிவிலக்காக நமது போகலூர் மற்ற கிராமங்களைப் போலில்லாமல்    மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது ஊரில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வாகனம் வழியாக பேருந்து வழியாக எந்த நேரத்திலும்  செல்ல முடியும். கிராமம் என்ற முறையில் இருந்தாலும் போக்குவரத்து முறையில் மற்ற நகரங்களுக்கு சமமாக போக்குவரத்து வசதி பெற்றுள்ளது.


நமது ஊரில் சேதுபதி மன்னரின் நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் ஆவலாக உள்ளது.

நமது கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்.

Tuesday, March 22, 2022

நமது சமூகத்தின் முன்னேற்றம்

 நமது ஊரில் 1980 களுக்கு முன் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. 1980களில் நமது மக்களின் கல்வி  என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இதற்கு இடைப்பட்ட பகுதியில் இடைநிறுத்தம் ஆக இருந்தது.  ஒரு சிலரே மட்டுமே  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை பட்டம் கல்வி பயின்றார்கள் .  இன்றைக்கு வெளிநாட்டு வேலை என்றால் நமது நினைவுக்கு வருவது துபாய் தான்.  அதேபோன்று அந்த காலகட்டத்தில் கல்வியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்று மளிகைக்கடையில் வேலை செய்தார்கள்.

1990 பின் கல்வியில் இடைநிறுத்த செய்யப்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் கடைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். 1990களில் படித்த மாணவர்கள்  டிப்ளோமா,  ஐடிஐ போன்ற தொழில் கல்வி பயின்றார்கள்.  தொழில் கல்வியின்  பயனாக வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  

சமூகத்தில் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம் 2000 பின்  மாணவர்களின் கல்வித்தரம் டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தது. என்னதான் இளநிலை பட்டம் படித்தாலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. தற்போது நமது ஊர் இளைஞர்கள் அரசு வேலையில் பணிபுரிய தூங்கி விட்டார்கள். குறிப்பாக காவல் துறை மற்றும் அரசு துறைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதைத் தவிர்த்து விட்டு வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும் துபாய், சவுதி போன்ற நாடுகளில் ஏதாவது  உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் நமக்கு வேலை இழக்க நேரிடும் இங்கே வந்து நாம் வேலையை தேடுவோம் என்றால் நமக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காது. இந்த  சூழ்நிலை வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஏற்படாமல் இருக்க  நமது பிள்ளைகளுக்கு குறைந்தது டிகிரி முடித்தபின் இரண்டு ஆண்டுகளாவது அரசு வேலைக்கு முயற்சி செய்ய உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும்.

 மாற்றம் ஒன்றே மாறாதது அது நமக்காக இருக்கட்டும். நமது சமூகத்தின் முன்னேற்றம் ஒரு பகுதியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளது.  அதனை செயல்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.


                   நமது நிருபர்

                   சாமானியன்

                   போகலூர்

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்

Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, October 18, 2019

சாமானியனின் பதில்கள்


மனைவி : மச்சான் மல்லிகை கடைக்கு போனைங்களே  
கணவன் : கடையை மூடி பல வாரங்கள் ஆச்சாம்
மனைவி : என்ன மச்சான் சொல்லுரிக்க
கணவன் : நாடு போர போக்க பாத்தா பிச்சை கூட எடுக்க முடியாது                 போல
மனைவி : அப்படியா மச்சான்
கணவன் : ரேசன் கார்டு, ஆதர் கார்டு, ஒட்டைடி பத்திரமாக இருக்கா
மனைவி : மச்சான் எல்லாம் அடகுகடையில் இருக்கே
கணவன் : போச்சே நம்மை இந்தியன் இல்லைனு சொல்லிடுவன்களே
மனைவி : நல்லவேளை எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.                           இல்லேன்னா  என்னை வெளிநாட்டுகாரினு சொல்லி                     இருப்பாங்க
கணவன் : அடியே இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளிநாட்டு                     காரர்கலாம்
மனைவி : நம்ம தலைவர் எங்கே சென்றலும் தமிழில் யாதும் ஊரே                 யாவரும் கேளிர் எல்லாமே சொல்லுறாரு
கணவன் : அவர் எல்லா ஊரையும் சுத்திபார்க்க வரேன்னு தமிழில்                   சொல்லுறாரு
மனைவி : தமிழ்நாடு அவ்வளவுதானா மச்சான்
கணவன் : தமிழ்நாட்டை அடகுவச்சி பல வருடங்கள் ஆய்விட்டது.
-    சாமானியன் போகலூர்

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ?


    இந்தியா நாடு தற்போது பொருளாதர சரிவில் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையின்மை கடுமையான அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்தியா சந்தித்துவரும் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் வேலைவயிப்பு அலுவலகத்தில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பதிந்துவைதுள்ளனர். சமிபத்தில் டி.என்.பி.எஸ்.சி 9351 இடங்களுக்கான நடத்திய குரூப் 4 தேர்வில்  20 இலட்சத்து அதிகமானோர் வின்னப்வித்திருந்தனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம்பேர் கல்வியை முடித்து வெளிவருகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு  வேலையின்மைனரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது .
     டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் தமிழ்தாள் (மொழியறிவு) மற்றும் ஆங்கலம்தாள் (மொழியறிவு) கேள்விகளை நீக்கிவிட்டு தமிழ் சமுகத்தின் வரலாறு, அகல்வரயிச்சிகளின் கண்டுபிடிப்பு, சங்ககாலம் வரையிலான தமிழ் இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, மொழித்தாள் நீக்கப்படுள்ளத்தால் தேர்வில் வினாக்கள் பொதுஅறிவு வகையில் கேள்விகள் கேட்கப்படும் வயிப்புள்ளது. அணைத்து வினாக்களும் தமிழ் மற்றும் ஆங்கலத்தில் இருக்கும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் படி உள்ள அணைத்து கேள்விகுக்கும் ஆங்கிலத்தில் படித்து தேர்ச்சிபெறலாம். தமிழ்தாள் இருந்த மொழியறிவு மற்றும் இலக்கணம் சார்ந்தவை. தமிழ் இலக்கணத்தில் கேட்கப்படும் கேள்விகவிகளுக்கு    தமிழை தாய் மொழியாக கொண்டவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும் மாறாக தற்போது அறிப்பானது வெளிமாநில சார்ந்த நபர்களை தமிழக அரசு வேலைக்கு அமர்த்த வழிவகைக்கும் அதற்க்கு முன்னோட்டமாக தமிழக அதிமுக அரசால் 2016 ஆண்டு தமிழ்நட்டை சாராத நபர்கள் தமிழக அரசு வேளைகளில் சேரலாம் என்று அறிவித்தது. 2016 ஆண்டிற்கு முன் தமிழக அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்று இருந்ததை தமிழக அதிமுக அரசு ரத்து செய்து. வெளிமாநில சார்ந்த நபர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் தேர்வு எழுத வகை செய்யப்பட்டது.
2014 இல் மத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜா.க. தமிழகத்தை மற்றான்தாய் மனப்பன்பையுடன் நடத்தி வாருகிறது. ஒரு மாநிலம் சார்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாயிப்பில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு அதிக முன்னுரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால்  மோடி தலைமையில் ஆனால் மத்திய அரசு அமைந்தலிருந்து மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் இதனால் தமிழகத்தில் மத்திய அரசு வேளைகளில் வடமநிலத்வர்கள் அதிகள் சேர்கிறார்கள்.
தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள தபால்துறை, ரயில்வே துறை, வங்கிகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமுக செயல்பட்டார்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்திய அரசின் தமிழகதிற்கு எதிரான நிலைபாட்டை எதிர்த்து போரடிகொண்டிருக்கிரர்கள். ஆனால் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய மோடி அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் தனது ஆதரவை வளங்கிகொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு. நீட் தேர்வு, 8 வழிசளைகயாக இருக்கட்டும், புதிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு போன்ற திட்டங்களை எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் செயல்படுத்துகிறது அதிமுக அரசு.
    1965 இல் மத்திய அரசு தமிழத்தில் இந்தி மொழியை திணிக்க முனைந்தார்கள் முடையவிலை. பல வழிகளிலும் இந்தியை திணிக்க முனைந்தார்கள் தமிழகத்தில் எதிர்த்தது. புதிய யுக்திகை பயன் படுத்தி தமிழ் மொழியை அழிக்க முயல்கிறார்கள். தமிழை வளர்க்கிறோம் என்பது, எங்கு சென்றலும் திருக்குறள் குறுவது அனால் தமிழ் மக்களுக்கு எதிரான  மக்கள் திட்டங்களை கொண்டுவருவது, ஒரு மொழியின்  இலக்கணம்(மொழியறிவு) இருக்கும்வரை அந்த மொழியை அழிக்க முடியாது. இந்தியாவில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்களின் முன்னோடி தமிழகம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோளாக உள்ளது.
  
                                                                                                                           -  சாமானியன்
                                                                                                                                  போகலூர் 

Friday, October 12, 2018

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.
'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.
'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

ஹெச்.ஆர். (HR) அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.
'மேய் ஐ கம் இன் சார்...'
'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

'தேங்க்யூ சார்...'
'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.
'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

'தேங்க்யூ சார்...'
'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி *தாடி வைக்கக் கூடாது.* தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.
'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'
'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.

'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.
'இல்லை சார்.. அப்படி இல்லை..'
'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'

'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'
'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கன்னமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால் தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள் தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும் தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு வாரத்தில் வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.
இரண்டு வாரங்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது. 
- onthisday

Friday, March 6, 2015

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண்

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண். இந்த சிறகு முளை
த்த பெண்ணை வாழ்த்துவோம்...
பர்தா எங்கள் உடலுக்கு தான் சிந்தனைக்கு அல்ல என்பதை நிருபித்த சகோதரி செயிதா பாத்திமாவை வாழ்த்துவோம்.







Tuesday, November 11, 2014

மவுலானா எனும் மகத்தான இந்தியர்

4

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).

Thursday, April 10, 2014

ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி !

 10.4.2014 dinamani

மோடி அலைக்கு இனி வேகமிருக்காது

10.4.2014 dianamani


முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்

dinamani 10.4.2014


முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்  

தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் 

ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி !

மௌனம் ஏன், ஆங் சான் சூ கீ ?

 மோடி அலைக்கு இனி வேகமிருக்காது 

Thursday, March 20, 2014

அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?


    2014இல்   இந்தயாவின் 16வது பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பார்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார் என்று ?

   கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தங்களுக்கு எதிரியான் பா.ஜ.க வந்துவிட கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் 1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் பாபரி மஸ்ஜிட்தை இடிப்பதிலிருந்து தடுத்திருக்கலாம். இடிக்கப்பட்ட பின் பாபரி மஸ்ஜித் பள்ளியை கட்டித்தருவதாக வாக்களித்து இதுவரைக்கும் தனது வாக்குறுதியை நிலைநாட்டவில்லை .

      முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு  போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த  பரிந்துரைகளில்  முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான  பரிந்துரைகளை  பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
     
      இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே குறிக்கோளாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவை பொறுத்தவரை தனது முதல் தேர்தலில் 1980 ல்  ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் கூட வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் முறையே 2,85,120,161,182,144,116 இடங்களை பிடித்தது. 1998,1999 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றியது. 2000 த்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள். பல ஆயிரம் கோடி மதிபிப்லான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டனர்.
    
     இதனை தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் குற்றவாளிகள் தங்கள் வாயினாலே உண்மையை கூறிய வீடியோ வெளியிட்டும், அவர்கள் சுதந்திரமாக உலாவிகொண்டிருக்கிறர்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட முஸ்லிம் சமுகம் தனது வரலாறு தெரியாமல் சிறுமையடைந்தது .                                                                                                                                                          
   வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பர்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார்? என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது இஸ்லாமிய சமுகத்தின் நிலைமையை சற்று பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விகிதாச்சாரத்தில் தலித்களை விட பின்தங்கியுள்ளதாக நீதியரசர் சச்சார் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 1,2  பாராளுமன்ற  உறுப்பினர்கள் தான் முஸ்லிம் உறுப்பினர் உள்ளனர். அதற்கு மேல் முஸ்லிம் பெயர் தாங்கீகலாகத்தான்  உள்ளனர்.

       இந்திய மக்கள் தொகையில் 13% அரசு கணக்கின் படி மொத்தம் உள்ள 543 முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரம்  71 பாராளுமன்ற  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க மக்கள் செறிவு மற்றும் தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுடன் 120  பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியும். மேற்கு வங்கத்தில் 25%, உ.பி 18%, அஸ்ஸாம்  30%, லச்சதிவு  95%, கேரளத்தில் 24%, பீகார் 16% போன்ற மாநிலங்களில் ஆட்சியை கூட பிடிக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமுகம் தனது பலம் தெரியாமல் சிறுபான்மை என்ற எண் ணத்துடன் சிருமையடைந்துள்ளது.

        1998 பா.ஜ.க  அதிமுக  கட்சி 18 பாராளுமன்ற  உறுப்பினர் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. 13 நாட்களே ஆன நிலையில்   அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கியது.  இதனால் பா.ஜ.க ஆட்சி இழந்தது. 2004,2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து முறையே 16,18 இடங்களை பெற்ற திமுக கட்சி தனக்கு தேவையான துறைகளை மந்தரிகளாக தனது பாராளுமன்ற  உறுப்பினர் இடம் பெற செய்தது. 


      இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் 71க்கும் மேற்பட்ட பாராளுமன்ற  உறுப்பினர் முஸ்லிம்கள் பெற்றால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைபெறும் அனிதிகளை தடுப்பது மட்டுமல்லாமல் அன்னத்து மக்களுக்கும் சமநீதியை பெற்று தரமுடியும்.  

   காந்தியடிகள் இந்தியாவில் உமர்(ரலி) போன்று ஆட்சியாலார்த்தான் தேவை என்று கூறியுள்ளார். உமர்(ரலி) போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றால் உமர்(ரலி) போன்று இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை செய்யமுடியும். 

    முஸ்லிம் சமுகம் தனது சக்தியை உணர்ந்து செயல்படும் காலகட்டத்தில் உள்ளது. 
                                                                                                                                                                                                                                                                          - சாமானியன்