Showing posts with label இந்துத்துவ. Show all posts
Showing posts with label இந்துத்துவ. Show all posts
Thursday, April 10, 2014
Friday, August 30, 2013
Tuesday, July 24, 2012
Tuesday, March 6, 2012
எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!
6 Mar 2012
பெங்களூர்:அரசு
நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர்
பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா
நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று
தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளது.
Saturday, March 3, 2012
‘உஸாமா’ திரைப்படத்தின் சூட்டிங்கை தடுத்த வி.ஹெச்.பி குண்டர்கள்!
3 Mar 2012
சட்டீஷ்கர்:அமெரிக்காவால் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு பிரபல ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் காதரின் பிகாலோ(Kathryn Bigelow) இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங்கை வி.ஹெச்.பி குண்டர்கள் தடுத்தனர். காமராக்களை எடுத்து மாற்றினர்.
மனிமஜ்ரா நகரத்தில் காதரின் பிகாலோவின் இயக்கத்தில் ‘உஸாமா’வின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தின் சூட்டிங் நடந்துக்கொண்டிருந்தது. சூட்டிங்கின் போது ஒரு காட்சியாக பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த வி.ஹெச்.பி குண்டர்கள் உருதுவில் எழுதப்பட்ட தட்டிகளை நீக்கம் செய்தனர். வி.ஹெச்.பி குண்டர்கள் ஒளிப்பதிவாளரை பிடித்து தள்ளியதாக திரைப்பட குழுவை சார்ந்த ஒருவர் கூறினார்.
உஸாமா பின் லேடன் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் அபோட்டாபாத் போல் அரங்கு அமைத்து சூட்டிங் நடந்தது. சட்டீஷ்கரை பாகிஸ்தானைப் போல் காண்பித்து திரைப்படத்தின் காட்சிகள் பதிவாக்கப்பட்டன. இவ்வாறு சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குற்றம் சாட்டி விஜய் சிங் பரத்வாஜின் தலைமையிலான வி.ஹெச்.பி குண்டர்கள் சூட்டிங்கை தடுத்துள்ளனர். ஆனால், ஷூட்டிங் நடந்த இடத்தில் பாக்.கொடி இல்லை என்று பிகாலோ கூறுகிறார்.
திரைப்படத்தின் பெயரை வெளியிட வில்லை.ஆனால், ‘Zero Dark Thirty’ அல்லது ‘ZD 30′ என்ற பெயர் இடப்பட்டுள்ளதாக ஊகமான செய்தி கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன்
நன்றி தூது ஆன்லைன்
Thursday, February 23, 2012
ஹரியானா குண்டுவெடிப்பு: கண்காணிப்பில் 2 சன்னியாசி ஆசிரமங்கள்!
23 Feb 2012
புதுடெல்லி:ஹரியானா மாநிலம் ஜிந்தில் முஸ்லிம்களை கூட்டாக படுகொலைச் செய்யும் சதித் திட்டத்துடன் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஆஸாத் சங்காடன் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலை கைது செய்ததன் பின்னணியில் மேவாத் நூஹ் மெஹ்ஸில் ஆசிரமத்தை நடத்திவரும் சுவாமி தயானந்தை போலீஸ் கண்காணித்து வருகிறது.
முஸ்லிம் மஸ்ஜிதுகளிலும், மத்ரஸாக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த தங்களுக்கு பணத்தை அளித்து தூண்டியது தயானந்தா என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் இந்த ஆசிரமத்தை கண்காணித்து வருகின்றனர். அத்துடன் ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தயானந்தாவின் ஆசிரமத்துடன் ஜிந்தில் உள்ள உச்சனாவில் சுவாமி கோரக்ஷானந்தின் ஆசிரமத்தையும் போலீஸ் கண்காணித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கோரக்ஷானாந்தின் ஆசிரமத்தில் நிரந்தரமாக சென்றுவந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.
சாகர்,காலா என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆஸாத் என்பவன் தான் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தலைவன் ஆவான். பிரவீன் சர்மா, ராம்நிவாஸ், குர்ணாம்சிங், ராகேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடர்கள் என சந்தேகித்து இவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. இவர்களை தவிர கிஸ்மத் சுரேந்தர், அஜய், பவன், ஸோனு ஆகியோருக்கும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத குழுவுடன் தொடர்பிருப்பதாக போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
Wednesday, February 22, 2012
சம்ஜோதா:டெட்டனேட்டர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது – சாட்சி வாக்குமூலம்
22 Feb 2012
புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.
தேவேந்தர் குப்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். ராம்ஜி கல்சங்க்ராவை என்.ஐ.ஏ தேடி வருகிறது.
ரோஹித் ஜா அளித்த வாக்குமூலம்:
2003 டிசம்பர் மாதம் தும்காவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமில் வைத்து தேவேந்தர் குப்தாவை முதன்முறையாக கண்டேன். மிஹிஜாம் அலுவலகத்தில் ராம்ஜி கல்சங்க்ராவும், குப்தாவும் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் பழைய நாளிதழ் பேப்பரில் பொதிந்த நிலையில் டெட்டனேட்டர் காணப்பட்டது. அதில் எலக்ட்ரிக் வயர் மூலம் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.
“நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்” என்று குப்தாவிடம் வினவியபொழுது, அவர் புன்னகைக்க மட்டுமே செய்தார். ராஞ்சியில் மனோஜ் என்பவரை சந்தித்துவிட்டு இருவரும் வந்தது எனக்கு பின்னர் புரிந்தது. மனோஜ் ராஞ்சியில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆவார்.
நான் கட்டிலுக்கு அடியில் டெட்டனேட்டரை பார்த்ததும், குப்தா அதனை ஒரு பையில் திணித்து அலுவலகத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் கொண்டு வைத்தார். அமித் சவுகானும், ராஜேந்திர பஹல்வானும் என்னுடன் வசித்து வந்தனர். (இருவரையும் என்.ஐ.ஏ தேடிவருகிறது)அங்கு வைத்து அமித் சவுகான் வெடிக்குண்டில் நிரப்புவதற்கு சைக்கிளில் உபயோகிக்கும் பெல்லட்ஸ்(குறுணைகள்)வாங்கினார். இவற்றை வாங்க செல்லும்போது என்னை உடன் அழைத்துச் செல்லவில்லை. அமீத் சவுகானின் வசம் இருபது அல்லது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் இருந்தது. செலவுகளை அவர் கவனித்துக்கொண்டார். அத்துடன் தான்பாதில் ஒரு மஸ்ஜிதுக்கும் அமீத் சவுகான் சென்றார். அங்கிருந்து சில உருது மொழியிலான புத்தகங்களையும், காலண்டர்களையும் வாங்கிக்கொண்டார்.
2008 அக்டோபர் மாதம் பிரக்யாசிங் தாக்கூரும் இதர நபர்களும் கைதானதை தொடர்ந்து நான் குப்தாவிடமிருந்து பிரிந்துவிட்டேன். இவ்வாறு ரோஹித் ஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமீத் சவுகானை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸில் இருந்து கண்டெடுத்த டெட்டனேட்டரின் ஃபோட்டோவை காண்பித்த பொழுது, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதே போன்றதொரு டெட்டனேட்டரை கண்டதாக ஜா கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்
Tuesday, February 21, 2012
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.
”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன.
ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார்.
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.
மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.
இடுகையிட்டது POPULARFRONTNELLAI நேரம் 11:47 PM
Sunday, February 19, 2012
குஜராத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு
19 Feb 2012
அஹ்மதாபாத்:குஜராத்தில் சில
பகுதிகளில் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பதை தடுப்பதற்கு சங்க்பரிவார
தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவுடன் தனியாக ஒரு அமைப்பு செயல்பட்டு
வருகிறது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச்
செய்யப்பட்ட இனப் படுகொலைக்கு பிறகு ‘சேதுபந்த் மித்ரா மண்டல்’ என்ற
அமைப்பை ஆர்.எஸ்.எஸ் துவக்கியது. ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகளில்
முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய
நோக்கமாகும். எவரேனும் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்க முயன்றால் அதனை
முடக்க எந்த வழியிலும் இந்த அமைப்பு முயலும்.
Monday, February 13, 2012
மோடி அரசு குற்றவாளியா.. இல்லையா? நீதிமன்றங்களின் முரண்பட்ட தீர்ப்புகள்!
ஒரு பக்கம் கண்டனம்… இன்னொரு பக்கம் ஆதாரமில்லை என அறிக்கை: மோடி விவகாரத்தில் முரண்படும் நீதித்துறை
ஆமதாபாத்: குஜராத் கலவரத்தை அடக்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அலட்சியம் காட்டியது என்று மாநில உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த முரண்பட்ட நிலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் கலவரத்தை வேண்டுமென்றே நரேந்திர மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டது என குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் சேதம் அடைந்த 500-க்கும் மேற்பட்ட மதவழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுக்கு எதிராக ஒரு உயர்நீதிமன்றம் இத்தனை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது இதுவே முதல்முறை. எனவே இது மோடிக்கு ஒரு ‘கறுப்பு புதன்கிழமை’ என வர்ணித்தனர் அரசியல் பார்வையாளர்கள்.
மோடி அரசுக்கு கண்டனம்
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இதில் உயிரிழந்தனர்.
இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி (பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்கள். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு, கோத்ரா ரெயில் எரிப்புக்குப்பின் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிவிட்டதாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அந்தத் தீர்ப்பில், “கலவரத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல்பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மத வழிபாட்டு தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது.
அவற்றை பழுதுபார்த்து தேவையான நஷ்டஈடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் வழிபாட்டு தலங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று நஷ்ட ஈட்டுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்துக்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
முன்னதாக, மாநில அரசு சார்பில் வாதாடிய வக்கீல், கலவரத்தின்போது அழிக்கப்பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டு தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும், இந்த மனு அரசியல் சட்ட 27-வது பிரிவுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார். இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஹக்கிம், “வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறி வரவேற்றுள்ளார்.
“குஜராத் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததற்கு மாநில அரசே பொறுப்பு என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதும் இதுவே முதன் முறையாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மோடிக்கு எதிராக ஆதாரமில்லை- சிறப்பு புலனாய்வு குழு
இதற்கிடையே, இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் “கலவரத்தை தடுக்க முதல்வர் நரேந்திரமோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை” என்று கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தை அடக்க மோடி அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பாரா மோடி… அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவுப் படி நிரபராதி எனக் கூறிக் கொண்டு அந்தத் தீர்ப்பை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவாரா? பார்க்கலாம்!
-என்வழி செய்திகள்
Wednesday, February 8, 2012
குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி – உயர்நீதிமன்றம்
8 Feb 2012
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியை தழுவியதாக குஜராத் மாநில உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
மாநில அரசின் மெளனமும்,புறக்கணிப்பும் மாநிலம் முழுவதும் கலவரம் பரவ காரணமானது என ஆக்டிங் முதன்மை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் சுட்டிக்காட்டியது.
கலவரத்தில் மத ஸ்தாபனங்கள் அதிகமாக அழிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 600 மத ஸ்தாபனங்களை மீண்டும் கட்டுவதற்கு நிதியை அளிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இனப் படுகொலையின் வேளையில் தகர்க்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபாரா ஸ்தாபனங்களை புதுப்பிக்க பணம் அளித்த அரசு மத ஸ்தாபனங்களின் மராமத்துப் பணிகளுக்காக நிதி அளிக்கும் பொறுப்பு உள்ளது. மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டம் பிரிவு 27-இன் படி சட்ட மீறல் என அரசு வாதிட்டது.
இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத் என்ற அமைப்பு அளித்த மனுவில் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தது.
முதன் முறையாக குஜராத் இனப்படுகொலை வழக்கில் ஒரு நீதிமன்றம் மோடி அரசை நேரடியாக குற்றம் சாட்டுகிறது என இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் எம்.டி.எம்.ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
நன்றி தூது ஆன்லைன்
பா.ஜ.க ஆட்சிக்காலத்தின் 2 ஜி ஆவணங்கள் மாயம்!
8 Feb 2012
புதுடெல்லி:பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது தனியார் நிறுவனங்களுடன் டெலிகாம் துறை நடத்திய 2ஜி லைசன்ஸ் ஒப்பந்த ஆவணங்களை காணவில்லை. பா.ஜ.க அரசு நடத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையை சி.பி.ஐ தீவிரப்படுத்தியுள்ள சூழலில் லைசன்ஸ் ஒப்பந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளன.
ஒரேயடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும், கோப்புகளை பரிசோதித்து வருவதாகவும், காலம் தாழ்த்தாமல் அளிக்கப்படும் என்றும் தொடர்புடைய அலுவலகத்தின் அண்டர் செகரட்டரி சி.பி.ஐ டி. எஸ்.பிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2001-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனியார் நிறுவனங்களுடன் டெலிகாம் துறை செய்த லைசன்ஸ் ஒப்பந்தம் பரிசோதனைக்காக அளிக்கவேண்டும் என சி.பி.ஐ கோரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் பாரதி டெலிநெட், ஏர்செல் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஹட்ச், ஸ்டெர்லிங் செல்லுலார், பி.பி.எல், ஐடியா ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய லைசன்ஸ் ஒப்பந்தங்கள் காணாமல் போயுள்ளன ஸ்டெர்லிங் செல்லுலார் தற்பொழுது வோடாஃபோன் – எஸ்ஸார் மொபைல் என அழைக்கப்படுகிறது.
ஐ.மு அரசின் நம்பிக்கையை தகர்த்த 2ஜி முறைகேடு பா.ஜ.கவையும் வேட்டையாடும் என்ற அறிகுறி சி.பி.ஐ வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. மறைந்த பிரமோத் மகாஜன், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியில் டெலிகாம் அமைச்சராக பதவி வகித்தார்.
2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளில் ஸ்பெட்க்ட்ரம் ஒதுக்கீடு மூலமாக அரசு கருவூலத்திற்கு 508 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐயின் ஆரம்ப கட்ட அறிக்கை கூறுகிறது. மரணமடைந்துவிட்டதால் பிரமோத் மகாஜனை வழக்கில் சேர்க்கவில்லை என்றாலும், அக்காலக்கட்டத்தில் டெலிகாம் செயலாளர் ஷியாம்லால் கோஷ், துணை இயக்குநர் ஜெனரல் ஜே.கே.குப்தா, டெலிகாம் சேவை நிறுவனங்களான ஏர்செல், வோடாஃபோன் ஆகியோர் மீது முறைகேடு தொடர்பான வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அவசரமாக அதிகமான ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் அனுமதி வழங்கியதில் மகாஜன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ குற்றம் சாட்டுகிறது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின் படி 2ஜி வழக்கில் விசாரணையை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்க சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பிரதீப் குமாரை சந்தித்து பேசினார்.
தொடர் விசாரணை விஜிலென்ஸ் கமிஷனரின் கண்காணிப்பில் நடைபெறவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
Monday, February 6, 2012
ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுதலை
ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்
சென்னை: சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.
Tuesday, January 24, 2012
மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி
24 Jan 2012
பலியா(உ.பி):2008 மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதியான முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய்(வயது 60) உ.பி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலம், மலேகான் 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய் (60) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்போது மகாராஷ்டிரத்தின் ராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
ரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன் விஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்து மகா சபா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு சார்பாக அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
Sunday, January 22, 2012
சுனில்ஜோஷி படுகொலை: பிரக்யாசிங்கின் மனு தள்ளுபடி
22 Jan 2012
மும்பை:ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியை கொலை செய்த வழக்கில் விசாரணைச்செய்ய தன்னை விமானம் அல்லது ரெயிலில் குளிரூட்டப்பட்ட கம்பார்ட்மெண்டிலோ போபாலுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதி பிரக்யாசிங்கின் மனுவை நீதிமன்றம் தள்ளபடிச் செய்தது.
Saturday, January 21, 2012
மதுரை: மசூதி சுவரில் மலம் பூச்சு!- கொச்சை வாசகங்கள்!!
துரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு மசூதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை உள்பட 5 வேளை தொழுகை நடந்து வருகிறது. 17.01.2012 அன்று சில சமூக விரோதிகள் மசூதியின் வெளிப்புற சுவரில் மனித மலத்தைப் பூசி, அதில் முஸ்லிம்களை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதிகாலை தொழுகைக்காக முஸ்லிம்கள் மசூதிக்கு வந்தபோது சுவற்றில் கொச்சையாக மனித மலத்தால் எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை மசூதி வாசலில் போட்டு உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழமாத்தூர் முஸ்லிம்களும், ஜமாத்தார்களும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் நேற்று காலை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தனர் . ஏற்கனவே, மதுரை காஜிமார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பன்றி தலையை மசூதியில் வைத்ததோடு மனித கழிவை மசூதி சுவற்றில் பூசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மறுப்பு
காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!
பெங்களூர்: சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.
Wednesday, January 11, 2012
பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
11 Jan 2012
பிஜாப்பூர்:கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவேண்டும் என கர்நாடாகா மாநிலத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)
.jpg)


