Saturday, March 3, 2012

‘உஸாமா’ திரைப்படத்தின் சூட்டிங்கை தடுத்த வி.ஹெச்.பி குண்டர்கள்!

Osama bin Laden film shoot sparks Hindu protests
சட்டீஷ்கர்:அமெரிக்காவால் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு பிரபல ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் காதரின் பிகாலோ(Kathryn Bigelow) இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங்கை வி.ஹெச்.பி குண்டர்கள் தடுத்தனர். காமராக்களை எடுத்து மாற்றினர்.
மனிமஜ்ரா நகரத்தில் காதரின் பிகாலோவின் இயக்கத்தில் ‘உஸாமா’வின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தின் சூட்டிங் நடந்துக்கொண்டிருந்தது. சூட்டிங்கின் போது ஒரு காட்சியாக பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த வி.ஹெச்.பி குண்டர்கள் உருதுவில் எழுதப்பட்ட தட்டிகளை நீக்கம் செய்தனர். வி.ஹெச்.பி குண்டர்கள் ஒளிப்பதிவாளரை பிடித்து தள்ளியதாக திரைப்பட குழுவை சார்ந்த ஒருவர் கூறினார்.
உஸாமா பின் லேடன் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் அபோட்டாபாத் போல் அரங்கு அமைத்து சூட்டிங் நடந்தது. சட்டீஷ்கரை பாகிஸ்தானைப் போல் காண்பித்து திரைப்படத்தின் காட்சிகள் பதிவாக்கப்பட்டன. இவ்வாறு சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குற்றம் சாட்டி விஜய் சிங் பரத்வாஜின் தலைமையிலான வி.ஹெச்.பி குண்டர்கள் சூட்டிங்கை தடுத்துள்ளனர். ஆனால், ஷூட்டிங் நடந்த இடத்தில் பாக்.கொடி இல்லை என்று பிகாலோ கூறுகிறார்.
திரைப்படத்தின் பெயரை வெளியிட வில்லை.ஆனால், ‘Zero Dark Thirty’  அல்லது ‘ZD 30′ என்ற பெயர் இடப்பட்டுள்ளதாக ஊகமான செய்தி கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment