Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Tuesday, March 22, 2022

நமது சமூகத்தின் முன்னேற்றம்

 நமது ஊரில் 1980 களுக்கு முன் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. 1980களில் நமது மக்களின் கல்வி  என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இதற்கு இடைப்பட்ட பகுதியில் இடைநிறுத்தம் ஆக இருந்தது.  ஒரு சிலரே மட்டுமே  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை பட்டம் கல்வி பயின்றார்கள் .  இன்றைக்கு வெளிநாட்டு வேலை என்றால் நமது நினைவுக்கு வருவது துபாய் தான்.  அதேபோன்று அந்த காலகட்டத்தில் கல்வியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்று மளிகைக்கடையில் வேலை செய்தார்கள்.

1990 பின் கல்வியில் இடைநிறுத்த செய்யப்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் கடைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். 1990களில் படித்த மாணவர்கள்  டிப்ளோமா,  ஐடிஐ போன்ற தொழில் கல்வி பயின்றார்கள்.  தொழில் கல்வியின்  பயனாக வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  

சமூகத்தில் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம் 2000 பின்  மாணவர்களின் கல்வித்தரம் டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தது. என்னதான் இளநிலை பட்டம் படித்தாலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. தற்போது நமது ஊர் இளைஞர்கள் அரசு வேலையில் பணிபுரிய தூங்கி விட்டார்கள். குறிப்பாக காவல் துறை மற்றும் அரசு துறைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதைத் தவிர்த்து விட்டு வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும் துபாய், சவுதி போன்ற நாடுகளில் ஏதாவது  உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் நமக்கு வேலை இழக்க நேரிடும் இங்கே வந்து நாம் வேலையை தேடுவோம் என்றால் நமக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காது. இந்த  சூழ்நிலை வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஏற்படாமல் இருக்க  நமது பிள்ளைகளுக்கு குறைந்தது டிகிரி முடித்தபின் இரண்டு ஆண்டுகளாவது அரசு வேலைக்கு முயற்சி செய்ய உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும்.

 மாற்றம் ஒன்றே மாறாதது அது நமக்காக இருக்கட்டும். நமது சமூகத்தின் முன்னேற்றம் ஒரு பகுதியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளது.  அதனை செயல்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.


                   நமது நிருபர்

                   சாமானியன்

                   போகலூர்

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்

Friday, October 12, 2018

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.
'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.
'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

ஹெச்.ஆர். (HR) அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.
'மேய் ஐ கம் இன் சார்...'
'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

'தேங்க்யூ சார்...'
'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.
'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

'தேங்க்யூ சார்...'
'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி *தாடி வைக்கக் கூடாது.* தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.
'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'
'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.

'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.
'இல்லை சார்.. அப்படி இல்லை..'
'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'

'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'
'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கன்னமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால் தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள் தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும் தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு வாரத்தில் வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.
இரண்டு வாரங்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது. 
- onthisday

Friday, March 6, 2015

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண்

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண். இந்த சிறகு முளை
த்த பெண்ணை வாழ்த்துவோம்...
பர்தா எங்கள் உடலுக்கு தான் சிந்தனைக்கு அல்ல என்பதை நிருபித்த சகோதரி செயிதா பாத்திமாவை வாழ்த்துவோம்.







Thursday, April 10, 2014

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்

dinamani 10.4.2014


முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்  

தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் 

ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி !

மௌனம் ஏன், ஆங் சான் சூ கீ ?

 மோடி அலைக்கு இனி வேகமிருக்காது 

Saturday, March 10, 2012

கஸ்மிக்காக போராடுவோம்: டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன்!

Shauzab and Turab (black shirt) sons of arrested journalist Muhammad Ahmad Kazmi, consoling each other at a press conference along with other senior journalists.
Photo By: Parveen Negi
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது இஃப்திகார் கிலானிக்கு மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமான வழக்காகும் என்றும், சில தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் போலீஸ் கஸ்மியை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் தலைமையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

Friday, March 9, 2012

இஸ்லாத்திற்கு எதிரான் அவதூறு செய்தி




இஸ்லாத்திற்கு எதிரான் அவதூறு செய்தி 
சொன்ன தோப்பில் முஹம்மது மீரான் 

அவதூறுக்கு  மறுப்பு தெரிவிக்க கேட்டுகொள்கின்றது

உங்கள் புதியவானம்   

Sunday, February 19, 2012

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!


Stone, son of Oscar-winning director Oliver Stone

டெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

Monday, January 23, 2012

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்


காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.
இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால் மூடி மறைக்க கூடிய சதி வேலைகளும் முதன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இசுலாமியர்கள் தேச விடுதலைக்கு இயற்றிய தொண்டு வெளிச்சத்திற்கு வராமல் தடை செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்இந்திய இசுலாமியர்கள் தேசிய எழுச்சியின் தொடக்கம் முதல் இந்திய விடுதலைக்கான தியாக தீபத்தை எற்றுவதில் பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தேசியம் மற்றும் ஆங்கிலேய விரோத எண்ணங்கள் விதைக்கப்படுவதில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இதில் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கே உரிய முற்போக்கு தன்மையுடன் முதன்மையான முறையில் தங்கள் தியாகத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முஸ்லிம்களின் தியாக செயல்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது.
இந்திய சமயசார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட சில சகோதரர்கள் வெளிக்கொணர படாத இந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற புனித நோக்கோடு அல்லும் பகலும் வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க, காணாமல் போன வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று, இந்திய சமயசார்பின்மை நிலைநாட்ட உதவிட வேண்டும் என்ற நோக்கோடு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.
தமிழக ஆங்கிலேயே சிப்பாய்கள் ஆங்கில அரசிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களின் ஆணைக்கு இணங்கி அமைதியான முறையில் செயல்பட்டதாக நீண்ட நாட்களாக நம்பப்படுகிறது. சென்னை ஆவணகாப்பகத்தில் இருக்க கூடிய ஓரு ஆவணம் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகின்றது. தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 9வது பட்டா¬யன் படையை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆங்கில அரசு 1775ல் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை எற்க மறுத்து இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியவர் மக்தும் சாஹிப் என்பது ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து, கேப்டன் கெல் என்கிற ஆங்கில அதிகாரி 900 சிப்பாய்கள் முன்னிலையில் மக்தும் சாஹெப்பை இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டிய இந்த தகவல் ஆவண காப்பகத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1806ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் திப்பு சுல்தானின் வாரிசுகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இயற்றிய குறிப்பிடத்தக்க பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றதன் காரணமாக ஆங்கில அரசு இசுலாமியர்களை சந்தேகத்துடன் நோக்கினார்கள் என்பது ஃர்ம்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த புரட்சியில் பங்கேற்றதன் எதிரொலியாக ஆங்கில இராணுவத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல இசுலாமியர்கள் சென்னையிலும் வேலூரிலும் சிறை வைக்கப்பட்டனர். சிலர் காடுகள் நிறைந்த தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1806ல் எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும், பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.
புரஹா ஷா என்கின்ற பக்கீர் வேலூரில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வேலூரில் தங்கி இருந்த மௌல்விகளுக்கும், பக்கீர்களுக்கும் ஆஜ்மீர் நகரில் இருந்த ஆங்கில அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த தொடர்பும், வேலூர் முஸ்லிம்கள் 1839ல் கிளர்ச்சி செய்ய தீட்டிய திட்டமும் வெளியானது. அதே போல் அதே கால கட்டத்தில் வேலூர் பக்கீர் காதர் மீரா என்பவர் கைது செய்யப்பட்டபோது வேலூர் முஸ்லிம்களுக்கும், சென்னை பல்லாவரத்தில் இருந்த ஆங்கில எதிர்ப்பு சிப்பாய்களுக்கும் இருந்த தொடர்பும் அவர்கள் சதித்திட்டத்திற்காக இணங்கி செயல்பட்டது தெளிவானது. அதே வேளையில் வேலூரில் ஆங்கில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகத்ததற்காக லத்தீப் சாஹிப் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ¬ல் வேலூரில் இருந்து வெளிவந்த சுல்தானா அக்பர் என்கின்ற தினசரி பத்திரிக்கை ஆங்கில விரோத கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பதிய செய்தது. ஆக வேலூர் முஸ்லிம்கள் 1806 க்கு பிறகும் ஆங்கில அரசுக்கு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் தேசியம் செழித்து வளர வித்திட்டன என்பது உறுதியாகிறது.
1857 புரட்சியின் பாதிப்புகள் தமிழகத்தை எட்டவில்லை என நீண்ட நாட்களாக போதிக்கப்பட்டு வந்தது. இதனால், சமீபகாலமாக தமிழகத்திலும் 1857ன் எழுச்சியின் பிரதிபழிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் தமிழக முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்பது அறிந்து பெருமை பட வேண்டிய செய்தி மட்டும் ஆல்ல அதை இசுலாமிய சகோதரர்களிடம் கொண்டு சென்று இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் இசுலாமியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1857 புரட்சியின் போது சென்னையில் ஆற்காடு நவாப் அவர்களின் தலைமையிடமாக கருதப்பட்ட திருவல்¬லிக்கேணியில் புரட்சியின் தாக்கம் தென்பட வாய்ப்புகள் இருந்ததாக கருதிய ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குலாம் கௌஸ் மற்றும் ஷேக்மன்னு என்கின்ற இரண்டு நபர்கள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணத்தை வழியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டனர். அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் குசா முஹம்மத் ஆவ்குர்ஹா ஹøசைன் என்பவர் வேலூர் மற்றும் புங்கனூர் பகுதிகளில் 1857 புரட்சிக்கு ஆட்களை திரட்டிய காரணத்தால் மார்ச் 1857ல் கைது செய்யப்பட்டார் ஆகஸ்டு 1, 1857ல் சேலம், புட்நூல் தெருவில் ஆய்யம் பெருமாள் சாரி என்பவரின் வீட்டுக்கு முன் ஆங்கில ஆட்சி அன்றைய தினம் வீழ்ந்துவிடும் என்ற செய்தியை எதிர்பார்த்து பலர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் ஓருவராக இருந்த ஹைதர் என்பவர் இவ்வளவு நேரம் சென்னையில் இந்திய தேசிய கொடி எற்றப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1857 புரட்சியின்போது செங்கல்பட்டில் அருணகிரி மற்றும் கிருஷ்ணா என்கின்ற இருவர் இந்த பகுதியில் மக்களை திரட்டி கலகம் விளைவித்து கொண்டிருந்தனர். செங்கற்பட்டில் எற்பட்டிருக்க கூடிய இந்த எழுச்சியை ஓருங்கிணைக்க சென்னையில் இருந்து சுல்தான் பக்ஷ் என்பவர் செங்கல்பட்டு சென்றார். இந்த தகவல்களையும் சுல்தான் பக்ஷின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் செங்கற்பட்டு மாஜிஸ்ரேட் சென்னை மாகாண அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முஸ்லிம் 1857 புரட்சிக்கு முன்னரும், புரட்சியின் நேரத்திலும் மட்டும் இல்லாமல் புரட்சிக்கு பின்னரும் தொடர்ந்து ஆங்கில எதிர்ப்புணர்வை பல இன்னல்களுக்கிடையே கடைப்பிடித்துதான் பரப்பியும் வந்தனர்.
1869ல் கூட வேலூர் நகரத்தில் கலவர சூழ்நிலை இருந்ததாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 20 வது பட்டாயன் வேலூரில் தங்கி இருந்த ஐரோப்பியர்களை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு இருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளக் கூடிய உரிமை வழங்கப்பட்டது என்பது அரசு உவணங்களில் பதிவாகியுள்ளது.
ஆக இசுலாமியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் தொடக்கம் முதல் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு கட்டங்களிலும் தங்களின் வீரத்தை விதைத்து போராடி, தியாகித்து, இரத்தம் சிந்தி அந்த இயக்கத்தை வளர்த்து இருக்கின்றனர். இதில் தமிழக முஸ்லிம்கள் முண்ணணியில் இருந்தார்களேயல்லாமல், இரண்டாம் இடத்தில் இருக்கவில்லை. இது முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டிய, அறிந்து பெருமைப்பட வேண்டியதன்றோ!
-ஆபுல் பாசல்
source : tmmk.in

Thursday, January 19, 2012

உம்ரா 2012


எமி​ரேட்ஸ் இந்தியா ஃப்​ரேட்டர்னிட்டி ஃ​போரம் (EIFF) 
ஏற்பாடு ​செய்யும்

உம்ரா 2012


அ​ரைப் படுக்​கை வசதியுள்ள ​சொகுசுப் ​பேருந்து
ஹரமுக்கு அருகில் தங்குமிடம்
கட்டணம் : 1000/- திர்ஹம்


உம்ரா ​செல்ல விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 31ம் ​தேதிக்குள் கீழ்க்கண்ட எண்​ணைத் ​தொடர்பு ​கொண்டு100 திர்ஹம் முன்பணம் ​செலுத்தி முன்பதிவு ​செய்து​கொள்ளுமாறு அன்புடன் ​கேட்டுக்​கொள்கி​றோம் :
055 – 9753530
முன்பதிவு ​செய்து​கொண்டவர்கள் பிப்ரவரி 8ம் ​தேதிக்குள் தங்கள் பாஸ்​போர்ட்டுடன் 3 ​போட்​டோக்க​ளையும் ​கொடுத்து, மீதித் ​தொ​கை​யையும் ​செலுத்த ​வேண்டும்.
பாஸ்​போர்ட்டும், விசாவும் கு​றைந்தது 6 மாத காலஅளவு ​கொண்டதாக இருக்க ​வேண்டும்.
இப்படிக்கு,
செயலாளர்
எமி​ரேட்ஸ் இந்தியா ஃப்​ரேட்டர்னிட்டி ஃ​போரம் (EIFF)
நன்றி M.S. Abdul Hameed msahameed@gmail.com

Thursday, January 5, 2012

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


அஸ்ஸலாமு அழைக்கும்
                      
               இணையத்தள சகோதரர்க்கு இதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்



பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Saturday, December 24, 2011

சிறுபான்மை இடஒதுக்கீடு ஒரு மோசடி


செய்திகளும்உண்மைகளும்
சிறுபான்மை ஒதுக்கீடு ஒரு மோசடி - பிரதமருக்கு கறுப்புக்கொடி : தமுமுக, போராட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மத்திய அரசின், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், 4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும், என நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும்.
அக்டோபர் 2004ல் மத்திய அரசு, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், மத மற்றும் மொழி சிறுபான்னைமயினருக்கான, தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம், மே 2007ல் தனது அறிக்கையை சமர்பித்தது.
இந்த ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை, மன்மோகன் சிங் அரசு தாமதப்படுத்தியது.
இந்த ஆணையத்தின் அறிக்கை, பத்திரிகைகளில் வெளியான பிறகு, டிசம்பர் 2009ல் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது, சிறுபான்மையினருக்கு, 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென, மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது.
மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு, மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும்.
அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள்.
இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை, என்றும் ஆணையம் தெரிவித்தது.
இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால், மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான, 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென, பரிந்துரைச் செய்தது.
ஆனால் தற்போது மத்திய அரசு, மிஸ்ரா ஆணையத்தின் இந்த இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல், இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது.
இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும்.
இத்தகைய இடஒதுக்கீட்டினால், எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை.
மிஸ்ரா ஆணையம், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு, தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும், மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது.
மன்மோகன் சிங் அரசு, முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும், 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை, உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும், மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும், தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு, சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை, தமுமுக நடத்தும்.

பிரதமருக்கு கறுப்புக்கொடி : த.மு.மு.க, வின் செயல், அபத்தமானது - ஆபத்தானது !

அரசியல்வாதிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்களாகத் தான் இருப்பார்கள், என்ற கருத்தில், யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
மேலும் இந்த ஓதிக்கீட்டில், பல சிறுபான்மை மதங்களை இனைத்ததோடல்லாமல், மொழி சிறுபான்மையினர், என்ற ஒரு பிரிவினரையும், இதில் இணைத்துள்ளதை ஏற்க முடியாது.
சிறுபான்மை மொழியான, சமஸ்கிருதம் பேசுகிறோம் என்று சண்டாள பேர்வழிகள்,(இவர்கள் ஒரு பக்கம் சிறுபான்மை சலுகைகள் கூடாது என்பர்,மறு பக்கம் மொழி சிறுபான்மையினர் என சொல்லிக் கொண்டு, பின்வாசல் வழியாக அனைத்தையும் அபகரிக்கும் கூட்டம்)காஞ்சி சங்கராச்சியார் உட்பட அவாள்கள் பலர் மொழி சிறுபான்மை ஒதுக்கீடு, என்ற பெயரால், பல்லாயிரம் கோடிகளையும், பல சலுகைகளையும், காலம் காலமாக அனுபவித்து வருவது, நாட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
என்றாலும், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள, 4.5% என்ற இந்த ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்காது, என்றாலும் நான்கில் ஒரு பங்கு, என்ற அளவில் பயன் உண்டாகும், என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தவிர, என்ன மாதிரியான விஷயங்களுக்கு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், என்பதெல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் முல்லை பெரியாறு, கூடங்குளம் போன்ற விஷயத்திற்காக, தமுமுக, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், ரசிக்கும்படியாகவும், மத்திய அரசை வழிக்கு கொண்டு வரும் வகையிலும், அது அமையும்.
தவிர, தமுமுக, வைக்கும் கோரிக்கையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஒதிக்கீட்டை, உடனடியாக வாபாஸ் வாங்க வேண்டும், பிறகு, மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்ற கோரிக்கையில், எத்தனை ஆபத்து உள்ளது என்பதை, தமுமுக தலைமை சிந்திக்க வேண்டும்.
இந்திய முஸ்லிம்களின் இந்த பின்னடைந்த நிலைக்கு என்ன காரணம், இந்த தேசத்தை, வெள்ளைக் காரனிடமிருந்து மீட்பதற்காக முஸ்லிம்கள் எந்தளவிற்கு தியாகம் செய்தனர், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள்..., முஸ்லிம்கள், ஆங்கிலேயர்களின், ஆங்கில மொழியை எதிர்த்தனர்.
ஆங்கிலேய அரசின் வேலை வாய்ப்புகளை இழந்தனர்
அவர்களின் மூலம் கிடைத்த கல்வியை பெற தவறினர்.
இந்த சரித்திரங்கள் எல்லாம், பல தீய சக்திகள் மறைக்க முற்பட்ட போதும், உண்மை பல வகையிலும், பல வரலாற்று ஆசிரியர்கள் மூலம் அவ்வப்போது வெளிவந்துள்ள, பல ஆதாரங்களையும் திரட்டி, மக்கள் மன்றத்தில் வைத்து மக்களின் நல்லாதரவையும் பெற வேண்டும்.
அத்துடன் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் மூலம், நமது கோரிக்கைகளை நிறைவேற்ற, நிர்பந்திக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் இது போன்ற ஆரோக்கியமான பல வழிகள் இருக்கும் போது-பல பொறுப்பான பணிகள் இருக்கும் போது, (பொன்னை வைத்து பார்க்கும் இடத்தில், பூவை வைத்துள்ள மத்திய அரசை எதிர்த்து, இப்போது) இது போன்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் அபத்தமானது.
இந்த ஒதுக்கீட்டை உடனடியாக, வாபாஸ் வாங்க வேண்டும் என்பது, அதைவிட ஆபத்தானது.




நன்றி மறுப்பு .இன் 

Wednesday, December 21, 2011

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?



அன்பு சகோதரர்களே! நாம் இதுவரை அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த போதும், அதன் பிறகும் எத்தனை எத்தனையோ கலவரங்களை சந்தித்திருக்கிறோம். அந்த கலவரங்கள் அனைத்திலும் பெரும் இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமான உயிர் சேதம், பொருட்சேதம். இதில் 90மூ இழப்பு முஸ்லிம்களுக்கே. இப்படி நாம் இழந்த உயிர்கள் 4.5 லட்சத்திற்கும் மேல். இழந்த பொருட்கள் கோடான கோடி ரூபாய். 4.5 லட்சம் முஸ்லிம்களை மட்டும் நாம் இழக்கவில்லை. அவர்கள் வழி சந்ததிகளையும் பிறப்பிற்கு முன்பே இழந்திருக்கிறோம். இந்த இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் இந்தியாவில் மாபெரும் சக்தியாக நாம் இருந்திருப்போம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மாபெரும் சக்தியாக
உருவெடுத்துவிட கூடாதென்று பாசிச சக்திகள் இந்தியாவை பாகிஸ்தான் என்றும், இந்தியா என்றும் பிளந்து போட்டார்கள். மேலும் இந்தியாவில் தன் ஆதிக்கத்தின் கீழே முஸ்லிம்களை வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்களை தலையெடுக்க முடியாமல் தாழ்த்தி வைத்திருக்க வேண்டும் எனவும் திட்டமிட்ட பாசிச சக்திகள் முஸ்லிம்களை அனைத்து துறையிலும் வளரவிடாமலேயே பார்த்து கொள்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சூழ்ச்சியால் நம்மால் எந்த துறையிலும் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் இன்று நம் சொந்த நாட்டிலேயே தவித்து கொண்டிருக்கிறோம்.  . ஆனால் நம்மை வளரவிடவில்லை இந்த சக்திகள்.மேலும் நம்மை வகுப்புகலவரங்கள் ஏற்படுத்தி நம்மை கூட்டங்கூட்டமாக கொலை செய்கிறார்கள். இப்படியாக முஸ்லிம்களை அழித்து இந்தியா இந்து ராஜ்யமாக்கிட அனைத்து வேலைகளையும் ஓசையில்லாமல் செய்து வருகிறார்கள். இந்து ராஜ்யத்தில் ஒவ்வொரு குடிமகனும் இந்துவாக இருக்கவேண்டும் அல்லது இந்து கடவுளர்களை ஏற்று அவர்களுக்கு சிரம் தாழ்த்திட வேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் அவா. இதை ஏற்காதவர்களை வெட்டி சாய்ப்பது கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை என்று நினைக்கிறார்கள்.
எனவே, இவர்கள் எந்த முஸ்லிமையும் இந்திய நாட்டில் முஸ்லிமாக வாழ அனுமதியளிப்பதில்லை. அப்படி வாழ விரும்பினால் அவன் ஒரு முஹம்மதிய இந்துவாக வாழ்ந்து கொள்ளலாம் நம் ஜனாதிபதி ஏபிஜே.அபுல் கலாம் மாதிரி. இல்லை நான் ஒரு முஸ்லிமாகத்தான் வாழ்வேன் ஒரு முஸ்லிமாகவே மரணிப்பேன் என்பது நம் ஆசையாக இருந்தால், மேலே நாம் குறிப்பிட்ட அனைத்தும் நமக்கு நிகழும். அதனை எதிர்கொள்ளவதற்கு அனைத்து ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்வது இன்றைய இந்திய முஸ்லிமின் கட்டாய கடமை.
இதனை ஒரு முஸ்லிம் எடுத்து கூறி எச்சரிக்கை செய்தால், சக முஸ்லிம்கள் எச்சரிக்கை செய்யும் அந்த நபரை – முஸ்லிமை தீவிரவாதி எனவும், ‘உன் போன்ற ஆட்களால் தான் முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது’ எனவும் கூறி அலட்சியம் செய்கின்றனர்.
ஆனால் இன்று முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தவர்களும், இந்து, இந்தியா டூடே போன்ற பத்திரிக்கைகளும் கூட, ‘இந்த நிலை தொடர்ந்தால், முஸ்லிம்களுக்கு தற்காப்பு நடவடிக்கையை தவிர வேறில்லை’ என்று கூறுகின்றன.

பாலஸ்தீனில் யூதர்கள் ஆக்கிரமித்த போதும் முஸ்லிம்கள் இதையே சொன்னார்கள். எச்சரிக்கை செய்தவர்களை அலட்சியம் செய்தார்கள். இன்று அவர்களின் நிலை மிகவும் கவலைகிடமானதாக உள்ளது.
போர் மேகங்களால் சூழப்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் இன்னும் இதனை உணர்ந்ததாக தெரியவில்லை. உறக்கம் இன்னும் கலையவில்லை.எங்கேயோ நடக்கும் பிரச்சனை தானே, என்று இன்றும் வாழாவிருக்கிறோம். ஒரு முனையில் பற்றவைத்த நெருப்பு மறுமுனை வரை வரும் என்பதை நாம் அறிவோம்.நாட்டின் ஒரு பகுதியில் நம் சகோதரன் கொல்லப்படுகிறான். நம் சகோதரிகளும் பெண்பிள்ளைகளும் வயது வித்தியாசமின்றி நடு ரோட்டில் முழு நிர்வாணப்படுத்தி கற்பழிக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள், இரண்டே இரண்டு நாள் குழந்தை உட்பட தீயில் வீசியெறியப்பட்டார்கள். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவளின் வயிறை பிளந்து, குழந்தையை சூலாயிதத்தால் குத்தி வெளியே எடுத்து தன் வீரத்தை வெளிபடுத்தினார்கள் கோழைகள். முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்து கொண்டு ஊரைவிட்டு விரட்டியடித்தார்கள். கோடீஸ்வரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாக ஆனார்கள் ஒரே இரவில்.
அங்கே கொல்லபட்டவன் நம் சகோதரன் இல்லையா? கற்பழிக்கப்பட்டது நம் சகோதரிகள் இல்லையா? எத்தனை பாசத்துடன் வளர்த்த குழந்தைகள் எல்லாம் தீயிட்டு கொளுத்தப்பட்டனவே, அதனை தன் கண்ணால் கண்ட பெற்றோர்கள் எப்படி துடித்திருப்பார்கள். தன் பெற்றோரை, உற்றார் உறவினரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் தான் என்ன?

இதே சம்பவம் நாளை நம் வீட்டில் நடந்தால் பேசாமல் இருந்திடுவோமா? ஆனால் நாம் இன்று பேசாமல் இருக்கிறோம் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. பாசிச சக்திகளின் திட்டங்கள் என்ன என்பதை இப்போது நாம் நன்றாக உணர்கிறோம். உணர்ந்தும் நாம் உறக்கத்தில் இருக்கின்றோம்.நடைபாதையில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கல்லை எடுத்து ஓரமாக போடுவது ஈமானின் கிளைகளில் கடைசியானது என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.மனிதர்களுக்கு தீங்கிழைக்க கூடியது ஒரு சிறு கல்லாக இருந்தாலும், அந்த கல்லிடமிருந்து மனித சமுதாயத்தை காப்பது ஒரு முஸ்லிமின் கடமை. ஆனால் இங்கு நடப்பது மனிதர்களை காயப்படுத்துவது அல்ல, நம் சகோதர, சகோதரிகளை உயிருடன் எரிப்பது. இதிலிருந்து முஸ்லிம்களை காப்பது யாருடைய கடமை? அல்லாஹ்வே வந்து அவர்களை காப்பானா? அப்படி அவனே வரவேண்டும் என்றால், கல்லும் முள்ளும் குத்தி கீறும் போது வந்து காத்திருக்க வேண்டுமே. ஏன் வரவில்லை? நிச்சயமாக அல்லாஹ் வந்து அவர்களை காக்கமாட்டான். மாறாக ஒவ்வொரு முஸ்லிமும், பாதிக்கபடும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். அதற்கான பயிற்சிகளில் சிறிய ஒரு பயிற்சி தான் நடைபாதையில் கிடந்து மக்களுக்கு தீங்கிழைக்கும் கல்லையும், முள்ளையும் அகற்றுவது.
குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் அவர்களிடன் ஈமான் இல்லை என்று சிரமமில்லாமல் ஒரு பதிலை கூறி நழுவ பார்க்கிறோம். அல்லது முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை என்று ஓட்டம் எடுக்கிறோம்.முஸ்லிம்களை ஒற்றுமைபடுத்த நாம் செய்த முயற்சி என்ன என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்த்தோமா?
அவர்களிடம் இருக்கும் ஒரு சில வேற்றுமையை பெரிதுபடுத்தி அதனை வளர்க்கிறோம்.

நாம் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?நாம் அனைவரும் ரசூல்(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராக ஏற்று கொண்டுள்ளோம் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?ஐவேளை தொழுகிறோம் இது ஒற்றுமை இல்லையா?ரமலானில் மட்டும் நாம் கடமையான நோன்பை நோற்கிறோம் இது ஒற்றுமை இல்லையா?ஹஜ்ஜின் போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை பார்த்து உலகமே ஆச்சரியப்பட வில்லையா?ஏன், மரணத்தின் போது கூட ஒரே மாதிரி அடக்கம் செய்யப்படுவதில் நமக்குள் இருக்கும் ஒற்றுமை புலப்படவில்லையா?
ஆயிரம் விஷயங்களில் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை விடுத்து, ஒரு சில விஷயங்களில் வேறுபடுவதால், நாம் ஒற்றுமையின்றி பிரிந்து கிடக்கிறோம் என்பதாகிவிடுமா? நிச்சயமாக நம் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகவே இருக்கிறது. தனித்தன்மையை இன்றளவும் விட்டு கொடுக்காமல் காத்து வருகிறது.

நாம் ஒற்றுமையாக இல்லை என்ற எண்ணம் தான் நம்மை பிரித்து பிளந்து போட்டுவிட்டது. இந்த எண்ணத்தை வீசியெறிந்தால் நிச்சயமாக நமக்குள் இருக்கும் ஒற்றுமை நமக்கு புலப்படும்.நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால், ஒற்றுமையை பற்றியோ, ஈமானை பற்றியோ எள்ளளவும் கவலைப்படாமல் தன்னையும், தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சியும் செய்வோமா, மாட்டோமா? நிச்சயமாக செய்வோம். இன்று குஜராத் நாளை நம் பகுதி. இல்லை, நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று யாராலும் கூற முடியாமா? நடந்தால் நம்மை காத்துக்கொள்ளஎன்னசெய்யபோகிறோம்? என்ன செய்து வைத்திருக்கிறோம்? லட்ச லட்சமாக செலவழித்து கட்டப்பட்ட நம் மாளிகை, பாசிச கரங்களால் தவிடு பொடி ஆவதிலிருந்து தடுத்து நிறுத்த என்ன செய்து வைத்திருக்கிறோம்? நம் பெண்கள் பாசிஸ்ட்டுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கவா? நம் மாளிகைகள் கரசேவைகாரர்கள் பயிற்சி எடுக்கவா? ‘இது யோசிக்கும் நேரமல்ல, செயல்படுத்தும் நேரம்’ என்ற ஜார்ஜ் புஷ்ஷின் வர்ணனை நமக்குத்தான் பொருந்தும்.
அடுத்ததாக, ஜீவ மரண போரட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மசாயில் பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு அதனை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.பெரும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவிடாமல் இஸ்லாமியர்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தி நம்மை தடுத்துவருகிறது. இப்படி கூறுவதால் முஸ்லிம் தலைவர்களை குறை கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம். நம் தலைவர்களையும் சேர்த்தே இந்த விஷயத்தில் திசை திருப்புகிறார்கள். இவர்களிடம் சின்ன பிரச்சனைகளை கிளப்பிவிட்டால் அதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவார்கள், நம் வேலைகளை இலகுவாக செய்து முடித்திட இது ஏதுவாக இருக்கும் என ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கி தவிப்பது நம் இளைய சமுதாயம்.
நாம்உலகம்முழுவதும்அழிக்கப்படுவதற்கும்,அவமானப்படுத்தப்படுவதற்கும் காரணம், நமக்கென்று ஒரு தலைமையில்லாது போனதே. முஸ்லிம்களுக்கு தலைமை – அமீர் – இல்லாத ஒரு நேரமே கிடையாது என்பதை நாம் ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும், சகாபாக்கள் வாழ்விலிருந்தும் படித்த பாடம். இருவர் பிரயாணம் சென்றாலும் அதில் ஒருவரை அமீராக தேர்தெடுத்து கொண்டு பிரயாணம் செய்ய பணிக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் தனக்கென்று ஒரு தலைமையில்லாமல் தவித்து கொண்டிருக்கிறது. பல இன்னல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாகி நிற்கிறது. (இஸ்லாமிய தலைமையை – கிலாபத் பற்றிய அதிக விளக்கம் பெற விடியல் வெள்ளி என்ற மாத இதழின் அக்டோபர் 1999ல் வெளியான கிலாபத் சிறப்பிதழ் மற்றும் இலக்கியச்சோலை வெளியீடான ‘கிலாபத்’ என்ற புத்தகத்தை படிக்கவும்)
நமக்கென்று ஒரு தலைமை – கலீபா – இருந்த நாட்களில் கடைகோடி குடிமகனும் நிம்மதியாக வாழ்ந்தான் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வரலாறு.
கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் – இஸ்லாமிய ஆட்சி காலத்தில் – ரோம் வெற்றி கொள்ளப்பட்டது. எங்சியிருந்த ஒரு பகுதியில் ஒரு பெண் அவமானப்படுத்தபடுகிறார் ரோம ஆட்சியாளர்களால். அவள் கலீபாவுக்கு இந்த சம்பவத்தை கொண்டு செல்வேன் என்று கூறிய போது,’இங்கிருந்து கலீபாவுக்கு முறையிட்டால், உன் கலீபா வந்து உன்னை எப்படி காப்பாற்றுவார்’ என்று கூறி நகைத்தனர் அந்த ரோமர்கள். இந்த செய்தி கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு சிறுது நாட்கள் கழித்து எடுத்து செல்லப்பட்டது. கலீபா அவர்கள் உடனே படை நடத்தி சென்று எங்சியிருந்த பகுதியை வெற்றிகொண்டு அங்கே இஸ்லாத்தை கொண்டு அமைதியை நிலைநாட்டி திரும்பினார்கள். கடைசி குடிமகனும், குடிமகளும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.கடைசி குடிமகனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக இஸ்லாம் இந்த மண்ணை ஆளவேண்டும். இது தான் வரலாறு தரும் படிப்பினை. இஸ்லாமிய ஆட்சியை இந்த மண்ணில் நிலைநாட்டிட அதிகமதிகம் பங்காற்றிட வேண்டியவர்கள் இளைஞர்கள்.
ஓ இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் !!!
ஓ இளைய சமுதாயம் எதையும் சாதிக்க வல்லமை பெற்றது.
ஓ இளைஞர்களே நாளை இஸ்லாம் உங்களை கொண்டு தான் பாராள போகிறது.
ஓ இளைஞர்களே நீங்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் முதுகெழும்பு
ஓ இளைஞர்களே எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்த வரலாற்றின் சொந்தங்களே!
ஓ வீர சிங்கங்களே நாளைய தலைமுறையின் வரலாற்று புருஷர்களே!
ஓ பத்ரில் குறைஷிகளை மண்ணை கவ்வ வைத்தோம் அப்போது நாம் வெறும் 313 பேர்தான். ஆனால் குறைஷிகளோ 1000 பேர்.
ஓ ரோம, பாரசீக வல்லரசை வென்றவர்கள் நாம். முஸ்லிமின் வீரத்தை உலகமே மெச்சியது.
ஓ இளைஞர்களே இளைஞர்களே புறப்படுங்கள் புதியதோர் சரித்திரம் படைக்க.
ஓ இளைஞர்களே, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டிட வேண்டியவர்கள் நீங்கள். இஸ்லாத்தை கொண்டு அமைதியை ஏற்படுத்த விரைந்திடுங்கள். புதியதோர் சமுதாய புணரமைப்புக்கு வித்திடுவோம் புறப்படுங்கள். இது உங்களால் முடியும். உங்களால் மட்டும் தான் முடியும்.http://mysteryoftheinquity.files.wordpress.com/2011/05/mahdi41.jpg?w=479

இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் -
யூதர்களால் 100 வருடங்கள் திட்டம் தீட்டி, முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடிகிறது,
கிருஸ்தவர்களால் 120 ஆண்டுகள் திட்டம் தீட்டி, ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் அழிக்கமுழகிறது,சங்பரிவார கும்பலால் 200 வருடங்கள் திட்டம் தீட்டி, இந்தியாவை இந்து ராஜ்யமாகிட கடும் முயற்சி எடுக்க முடிகிறது, முயற்சியில் வெற்றியும் பெற முடிகிறது,ஆனால் முஸ்லிம்களான நம்மால் மட்டும் எதையுமே சாதித்திட இயலாதா?
யூத, கிருஸ்தவ, இந்துக்களால் தங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கிட முடிகிறது. ஆனால் நம்மால் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்திட ஒரு சிறு பகுதியை கூட இந்த பூமியில் உருவாக்கிட முடியாதா? அதற்கு திராணியற்றவர்களா நாம்?
இளைஞர்களே நீங்கள் நினைத்தால் ஒரு பகுதியல்ல இந்த உலகம் முழுவதும் தீன் கொடியேற்றி அல்லாஹ் வழங்கிய சட்டத்தினை அமுல்படுத்தி அமைதியை நிலைநாட்டிட முடியும். கொடுமைக்காரர்களின் குரல்வலையை நெரித்திட முடியும். நீங்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளையும் அல்லாஹ் செய்திட போதுமானவன்.
நீங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் பூமியில் அக்கிரமக்காரர்களால் செய்யப்படும் குழப்பங்களை தடுத்து நிறுத்துவது உங்கள் கடமையில்லையா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பது உங்கள் கடமையில்லையா? திப்புவின் மண்ணில் பிறந்த சிங்கங்களே முஸ்லிமின் வயிற்றில் பிறந்த நீங்கள் கோழைகளல்ல என்பதை நிரூபியுங்கள். அங்சுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்தான், ஆர்எஸ்எஸ்காரன் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.

ஆதாரங்களுக்காக எடுத்தகொள்ளப்பட்ட பத்திரிக்கைகள்
1. விடியல் வெள்ளி (ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, 2002)
2. ஓற்றுமை (மார்ச் 16-31,2002)
3. உணர்வு (மார்ச் – ஏப்ரல்)
4. மில்லி கெஸட்
5. அரப் நியூஸ் (யுசயடி நேறளஇ ளுயரனi யுசயடியைn னுயடைல)
6. ரியாத் டெய்லி (சுலையனா னுயடைலஇ ளுயரனi யுசயடியைn னுயடைல)
7. நியூஸ் வீக் (நேறளறநநமஇ யுஅநசiஉயn றுநநமடல)
8. யு Pசநடiஅiயெசல சுநிழசவ ழக ளுயுர்ஆயுவு (குயஉவ குiனெiபெ வுநயஅ) ï ர் 4 ð ñ Pசநஎழைரள ர்ழஅந ஊழவெநவெள நேஒவ வுழி