Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, April 20, 2022

பாவடி (பாவோடி)

பாவடி என்றவுடன் நமது ஊர் பெரியவர்கள் பசங்கள் எங்கே என்று கேட்டால்  பாவடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். 

 நாம் என்றாவது  பாவடி என்றால் என்ன கேள்வி கேட்டது உண்டா. அதற்கு பின்னாடி ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.  1900  காலகட்டத்திற்க்கு முன் அனைத்து  வியாபார தொழிலில்களையும் முஸ்லிம்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் நெசவுத்தொழில்.  இன்று பனியன்  ஆடை தொழிலை உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் அதன் முன்னோடிகள் முஸ்லிம்கள்தான். அவர்கள்தான் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வரவைத்து நவீன முறையில் நெசவு தொழிலை செய்து கொண்டிருப்பது  அனைவரும்  அறிந்த உண்மை.

 எழுத்தாளர் டாக்டர் S.M. கமால் எழுதிய  முஸ்லிம்களும் தமிழகமும் என்ற நூலில் நமது ஊர் போகலூர் இல் 50 தறிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நமது ஊர் முஸ்லிம்கள் நெசவுத் தொழிலை செய்தார்கள் என்ற குறிப்புகளை அடிக்கோடிட்டு எழுதியுள்ளார். அதில் எந்த ஊர்களில் பாவடி என்ற தெரு இருக்கிறதோ அந்த ஊரில் நெசவுத்தொழில் இருந்தது என்று ஆதாரமாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பாவடி என்கின்ற தெருதான்.   

 பாவடி என்றால்  நூலுக்கு சாயம் இட்டு  காயவைக்கும் இடம். அந்த இடம் அகலமாகவும் ரொம்ப நீளமாகவும் இருக்கும். நாம் எமனேஸ்வரம் ஊர் சென்று இருந்தால் அங்கே சாயமிடும் காட்சிகளே நாம் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.  நெசவு பணியில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  அதில் ஒன்றுதான் நாம் புதிய பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி உள்ள தெரு அகலமாகவும் நீளமாகவும் உள்ளது அதற்கே தான் பாவடி தெரு நமது சிறுவயதிலிருந்து நம்முடன் தொடர்புடைய இந்த பாவடி தெருவை நாம் அதன் பழமை மாறாமல்  பாதுகாப்பது நமது கடமை.


நமது நிருபர் 

சாமானியன்

போகலூர்

நமது பள்ளிக்கூடம்

 நமது பள்ளிக்கூடம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி. சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் கல்வியின் மீது பற்றும் சமுதாயம் நலன் கொண்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு நினைவாக அவர்கள் பெயரான நூருல்லா என்ற பெயரை நமது பள்ளிக்கு நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

 நமது பள்ளிக்கூடத்து பின் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.  ராமநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யதம்மாள் உயர்நிலைப்பள்ளி  1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹைரத்துல்  ஜமாலியா உயர்நிலைப்பள்ளி பரமக்குடி 1981 துவங்கப்பட்டது.

 நமது பள்ளிக்கூடம் ஆரம்பகாலத்தில் மண் சுவர்   கட்டடத்தில் இயங்கியது. மக்களின் தொடர் முயற்சியாலும் கடும் உழைப்பாலும் செங்கல் கற்களால்  கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள ஓட்டு கட்டடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. நமது நூருல்லா முஸ்லிம் பள்ளிக்கூடம்  மக்களின்  தொடர் முயற்சியால் காங்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளது.

 நமது பள்ளிக்கூடத்தின் படித்த பல நூறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். குறிப்பாக டாக்டர்,  இன்ஜினியர், அரசுத் துறைகள் மற்றும் பல துறைகளில் தங்களை பங்களிப்பை சிறப்பாக ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்கள்  உருவாக காரணமாக இருந்தது நமது நூருல்லா முஸ்லிம்  தொடக்கப்பள்ளி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு இனிமையான காலம் அதில் ஆரம்பப்பள்ளி என்பது தனிச்சிறப்பு அப்படிப்பட்ட சிறப்பு சொந்தமான இருக்கக்கூடிய நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன். நாம் இன்று இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கு அடிப்படை காரணமாக இருந்த நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு நாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்க  கடமைப்பட்டுள்ளோம்.

2013 ஆம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த ஆண்டே நாம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பவள விழா  கொண்டாடி இருக்க  வேண்டும். என்ன காரணங்கள் நம்மை பவள விழா கொண்டாடுவதை தடுத்தது என்று ஆயிரம் கேள்விகள் எழும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உறுதியேற்போம்.


  நமது வீட்டை நாம் எப்படி பராமரிப்போம் அதே போன்று நமக்கு கல்வி தந்த நமது பள்ளிக்கூடத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அங்கு படித்த ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும்  கடமை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை நம் கண்முன் நிறுத்தி  பார்க்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இது எனது பள்ளி எனது கடமை என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒவ்வொரு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கடமையாகும்.

ஆரம்பம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ஒருவரின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்வி தந்த நூருல்லா தொடக்கப் பள்ளிக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் .


நமதுநிருபர்

சாமானியன்

போகலூர்

போகலூர்

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் போகலூர். இதன் பெயர் புகலூர் என்ற பெயரிலிருந்து மருவி போகலூர் ஆகியது. 

தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.

சேதுபதி மன்னர்கள்  கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள்  போகலூரை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.இன்றும் சேதுபதி மன்னர்  அரண்மனையின் சிதிலமடைந்த சுவர்கள்  போகலூரில் காணப்படுகின்றன. 

போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

போகலூர் கிராமம் என்ற முறையில் இருந்தாலும் இன்று 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

அரசு சித்த மருத்துவமையம், 

அரசு கால்நடை மருந்தகம், 


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 

நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி


அரசு அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

கிராம அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகங்கள்,

நூலகம் போன்றவை இந்த ஊரின் சிறப்புகளை பறைசாற்றுகின்றன.

இந்திய தேசம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி இருப்பது என்றால் அது நமது போகலூரில் உள்ள சுங்கச்சாவடி தான் இந்த சிறப்பு அமையும்.

இவ்வளவு  வரலாற்றுக்கு சொந்தமான நமது போகலூர் கூடிய விரைவில் பேரூராட்சி அந்தஸ்தை பெறும் என்பதை நாம் அனைவரும்  எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மக்கள்  நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இதில் விதிவிலக்காக நமது போகலூர் மற்ற கிராமங்களைப் போலில்லாமல்    மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது ஊரில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வாகனம் வழியாக பேருந்து வழியாக எந்த நேரத்திலும்  செல்ல முடியும். கிராமம் என்ற முறையில் இருந்தாலும் போக்குவரத்து முறையில் மற்ற நகரங்களுக்கு சமமாக போக்குவரத்து வசதி பெற்றுள்ளது.


நமது ஊரில் சேதுபதி மன்னரின் நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் ஆவலாக உள்ளது.

நமது கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்.

Tuesday, March 22, 2022

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, March 6, 2015

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண்

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண். இந்த சிறகு முளை
த்த பெண்ணை வாழ்த்துவோம்...
பர்தா எங்கள் உடலுக்கு தான் சிந்தனைக்கு அல்ல என்பதை நிருபித்த சகோதரி செயிதா பாத்திமாவை வாழ்த்துவோம்.







Thursday, March 20, 2014

அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?


    2014இல்   இந்தயாவின் 16வது பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பார்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார் என்று ?

   கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தங்களுக்கு எதிரியான் பா.ஜ.க வந்துவிட கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் 1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் பாபரி மஸ்ஜிட்தை இடிப்பதிலிருந்து தடுத்திருக்கலாம். இடிக்கப்பட்ட பின் பாபரி மஸ்ஜித் பள்ளியை கட்டித்தருவதாக வாக்களித்து இதுவரைக்கும் தனது வாக்குறுதியை நிலைநாட்டவில்லை .

      முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு  போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த  பரிந்துரைகளில்  முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான  பரிந்துரைகளை  பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
     
      இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே குறிக்கோளாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவை பொறுத்தவரை தனது முதல் தேர்தலில் 1980 ல்  ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் கூட வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் முறையே 2,85,120,161,182,144,116 இடங்களை பிடித்தது. 1998,1999 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றியது. 2000 த்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள். பல ஆயிரம் கோடி மதிபிப்லான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டனர்.
    
     இதனை தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் குற்றவாளிகள் தங்கள் வாயினாலே உண்மையை கூறிய வீடியோ வெளியிட்டும், அவர்கள் சுதந்திரமாக உலாவிகொண்டிருக்கிறர்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட முஸ்லிம் சமுகம் தனது வரலாறு தெரியாமல் சிறுமையடைந்தது .                                                                                                                                                          
   வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பர்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார்? என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது இஸ்லாமிய சமுகத்தின் நிலைமையை சற்று பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விகிதாச்சாரத்தில் தலித்களை விட பின்தங்கியுள்ளதாக நீதியரசர் சச்சார் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 1,2  பாராளுமன்ற  உறுப்பினர்கள் தான் முஸ்லிம் உறுப்பினர் உள்ளனர். அதற்கு மேல் முஸ்லிம் பெயர் தாங்கீகலாகத்தான்  உள்ளனர்.

       இந்திய மக்கள் தொகையில் 13% அரசு கணக்கின் படி மொத்தம் உள்ள 543 முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரம்  71 பாராளுமன்ற  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க மக்கள் செறிவு மற்றும் தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுடன் 120  பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியும். மேற்கு வங்கத்தில் 25%, உ.பி 18%, அஸ்ஸாம்  30%, லச்சதிவு  95%, கேரளத்தில் 24%, பீகார் 16% போன்ற மாநிலங்களில் ஆட்சியை கூட பிடிக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமுகம் தனது பலம் தெரியாமல் சிறுபான்மை என்ற எண் ணத்துடன் சிருமையடைந்துள்ளது.

        1998 பா.ஜ.க  அதிமுக  கட்சி 18 பாராளுமன்ற  உறுப்பினர் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. 13 நாட்களே ஆன நிலையில்   அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கியது.  இதனால் பா.ஜ.க ஆட்சி இழந்தது. 2004,2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து முறையே 16,18 இடங்களை பெற்ற திமுக கட்சி தனக்கு தேவையான துறைகளை மந்தரிகளாக தனது பாராளுமன்ற  உறுப்பினர் இடம் பெற செய்தது. 


      இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் 71க்கும் மேற்பட்ட பாராளுமன்ற  உறுப்பினர் முஸ்லிம்கள் பெற்றால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைபெறும் அனிதிகளை தடுப்பது மட்டுமல்லாமல் அன்னத்து மக்களுக்கும் சமநீதியை பெற்று தரமுடியும்.  

   காந்தியடிகள் இந்தியாவில் உமர்(ரலி) போன்று ஆட்சியாலார்த்தான் தேவை என்று கூறியுள்ளார். உமர்(ரலி) போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றால் உமர்(ரலி) போன்று இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை செய்யமுடியும். 

    முஸ்லிம் சமுகம் தனது சக்தியை உணர்ந்து செயல்படும் காலகட்டத்தில் உள்ளது. 
                                                                                                                                                                                                                                                                          - சாமானியன் 







        
        







                                                                                                                      
      

Thursday, May 31, 2012

வெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்!



நமது இந்திய தேசத்தில் இன்றைய நிலை!
மும்பையில் இந்த இடத்தில் மாதம் 200 ரூபாய் வாடகையில் வீடு கிடைக்கும் - தாராவி
மும்பையின் மொத்த ஜனத்தொகையில் 55% இது போன்ற இடத்தில்தான் வாழ்கிறார்கள் 
இதே மும்பையில் 5000 கோடி ரூபாயில் 1 வீடு – ஆண்டில்லா அம்பானியின் வீடு...!
இந்திய ஜனத்தொகை120 கோடி.. இவர்களில் பணமாக ரூ.10 லட்சம் வைத்திருப்பவர்கள் வெறும் 153,000 நபர்கள் தான் (0.013%)... பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஒரு உதாரணம்
விலை வாசி ஏற்றம் – விழி  பிதுங்கும் நடுதர மக்கள்
81 நாடுகளில் பசியால் வாடுபவர்களது கணக்கெடுப்பு
இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது.

சூடான், சிறிலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலை
 
தலீத்களை விட பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் – நீதிபதி ராஜேந்திர சச்சார்
சங்க பரிவாரங்களால் முஸ்லிம்கள் தொடர் அச்சுறுத்தப்படுதல் – வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்...



துப்பாக்கி சுடும் பயிற்சி – இந்த சப்தங்கள் அரசின் காதினுள் நுழைவதில்லை



முஸ்லிம்களுக்கெதிரான மிரட்டல்கள்....

300 மசூதிகளை இடிக்க வேண்டும்... இந்தியாவை ஹிந்து ராஷ்ரா என்று அறிவிக்க வேண்டும்.... – சுப்ரமணிய சுவாமி


இரட்டை நீதி

மாலேகானில் குண்டு வைத்த குற்றவாளிகளுக்கு உதவிய சிவநாரணயன் கல்சங்கரா, ஷியாம் சாகுவிற்கு பெயில்

அநீதியாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் 3 வருடங்களாக இன்னும் சிறையில் வாட்டம்



கேள்வி கணக்கில்லாத போலி என்கவுண்டர்கள் – செய்வதறியாத  முஸ்லிம்கள் 


குண்டு வெடிப்பில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்த ஃபைஸ் உஸ்மானி காவல் நிலையத்தியத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை



முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தினை தீவிரவாதமாகவும் சித்தரித்தல்



நாட்டை ஆண்ட சமூகம்....


100 ஆண்டுகளில் வாழ வழியில்லாத சமூகமானது....!


நாட்டில் புரையோடி கிடக்கும் ஊழல்

தலீத்களின் கண்ணியம் மற்றும் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை



தேவை ஒரு வீரியமிக்க போராட்டம் – களம் இறங்குகிறது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


தென் மாநிலங்களில் கடை கோடி கிராமத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் சேவை 


தற்போது வடஇந்தியாவை நோக்கி.... 18 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் மக்கள் சேவகர்கள்...!


வடஇந்தியாவில் பேராதரவுடன் பாப்புலர் ஃப்ரண்ட்