பாஸ்போர்ட்டே இல்லாதவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு! .... - சொந்த மாநிலத்தை விட்டே வெளியே செல்லாதவர் மீது பாகிஸ்தான் தொடர்பு குற்றச்சாட்டு!!

பாட்னா:பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி, ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர், கைது செய்தனர்.
அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது?
அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்?என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள், என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள், என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
ஜமாலி மதரஸா பயிலும் மாணவர்.
பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார்.
ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் நஸருல் ஜமால், தன் மகன் ஜமாலி மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார்.
என் மகன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
இவை அனைத்தும் ஆதாரமற்றது.
அவனுக்கு வயது 24 தான் ஆகிறது.
அவனது வாழ்க்கையில் பீஹார் மாநிலத்தை விட்டு, வெளியூர் சென்றதே இல்லை.
ஒரு முறை எங்கள் சொந்தக்காரர்களை பார்ப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு மும்பை சென்றிருந்தான், என்று ஜமாலியின் தந்தை கூறுகிறார்.
காவல்துறையினர், எனது மகனை கைது செய்ய வந்த போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எனது மகன் பெயரில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டதாக் கூறினர்.
ஆனால் எனது மகனிற்கு பாஸ்போர்டே கிடையாது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் காவல்துறை அவர்களை எதற்காக கைது செய்துள்ளது என்பதை, பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை.
அப்பகுதி காவல்துறையினர் கூறும்போது, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தர்பங்கா மண்டல காவல்துறை அதிகாரி ஆர்.கே மிஸ்ரா கூறும் போது, கைதுசெய்யப்பட்ட இருவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு, என்பதை உறுதியாக கூறமுடியாது.
எதுவாயினும் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் குற்றவாளிகளா இல்லையா என்பது, இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால் இந்த ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர்.
இவர்கள் வெளியிடும் இத்தகைய தவறான செய்திகளால், பல அப்பாவி இளைஞர்களில் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment