| செய்திகளும் | உண்மைகளும் | |
| 2 பாகிஸ்தானியர் உள்பட 6 இந்திய முஜாஹிதீன்கள் கைது!... -முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் ஊடகங்கள்! புது தில்லி, நவ.30: முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தில்லி, சென்னை மற்றும் மதுபானியில் 6 பேரை தில்லி போலீஸôர் கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்திய முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தில்லி, பெங்களூர், புணே உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சதித் திட்டத்துக்கு பிரதான மூளையாகச் செயல்பட்ட இம்ரான் என்பவர் தப்பி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த அமைப்பினருக்கு நிதி உதவி செய்வது, பிற உதவிகளை ஒருங்கிணைத்து அளிப்பது உள்ளிட்ட பணிகளை இம்ரான் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி தில்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு வெளியே காரில் வெடி குண்டு வைத்தது இம்ரான் என்றும் போலீசார் தெரிவித்தனர். இத்தகைய சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டிய தஹ்ரீர் என்ற பயங்கரவாதியையும் போலீசார் தேடி வருகின்றனர். 2008-ம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தஹ்ரீர் முக்கிய கருவியாக செயல்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். போலீசார் கைது செய்துள்ளவர்களில் சிலர் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடி விபத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏப்ரல் 17, 2010-ம் ஆண்டு குண்டு வைத்தது, காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும் முன்பாக ஜும்மா மஸ்ஜித்துக்கு வெளியே செப்டம்பர் 19, 2010-ல் குண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் இவருக்கு தொடர்பிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அப்சல், அஜ்மல் ஆகியோர் போலி பாஸ்போர்ட் வழக்கு தொடர்பாக மதுபானியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவர் அப்துர் ரெஹ்மான் மற்றும் முகமது இர்ஷாத்கான் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். முகமது சித்திக், ஜாபர் ஆகியோர் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவர் இருவராக தாக்குதல் நடத்துவது என்கிற ரீதியில் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜும்மா மசூதி வெடிச் சம்பவம் தொடர்பாக இப்போதுதான் முதல் முறையாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் முதலாவதாக சித்திக் (27) தில்லியில் ஆனந்த் விஹார் பஸ் நிலையத்தில் நவம்பர் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 9 மி.மீ. துப்பாக்கி, 14 தோட்டாக்கள், கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ன. 2 போலி பாஸ்போர்ட் மற்றும் பொய்யான அடையாள அட்டை ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. இதில் விவேக் மிஸ்ரா என்ற பெயரில் தேசிய மாணவர் படை (என்சிசி) யில் இருப்பது போன்ற அடையாள அட்டையும் அடங்கும். | பாஸ்போர்ட்டே இல்லாதவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு! .... - சொந்த மாநிலத்தை விட்டே வெளியே செல்லாதவர் மீது பாகிஸ்தான் தொடர்பு குற்றச்சாட்டு!! பாட்னா:பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி, ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர், கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்?என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள், என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள், என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது. ஜமாலி மதரஸா பயிலும் மாணவர். பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். டாக்டர் நஸருல் ஜமால், தன் மகன் ஜமாலி மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார். என் மகன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இவை அனைத்தும் ஆதாரமற்றது. அவனுக்கு வயது 24 தான் ஆகிறது. அவனது வாழ்க்கையில் பீஹார் மாநிலத்தை விட்டு, வெளியூர் சென்றதே இல்லை. ஒரு முறை எங்கள் சொந்தக்காரர்களை பார்ப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு மும்பை சென்றிருந்தான், என்று ஜமாலியின் தந்தை கூறுகிறார். காவல்துறையினர், எனது மகனை கைது செய்ய வந்த போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எனது மகன் பெயரில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டதாக் கூறினர். ஆனால் எனது மகனிற்கு பாஸ்போர்டே கிடையாது. கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை எதற்காக கைது செய்துள்ளது என்பதை, பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை. அப்பகுதி காவல்துறையினர் கூறும்போது, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தர்பங்கா மண்டல காவல்துறை அதிகாரி ஆர்.கே மிஸ்ரா கூறும் போது, கைதுசெய்யப்பட்ட இருவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு, என்பதை உறுதியாக கூறமுடியாது. எதுவாயினும் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று கூறினார். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் குற்றவாளிகளா இல்லையா என்பது, இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் வெளியிடும் இத்தகைய தவறான செய்திகளால், பல அப்பாவி இளைஞர்களில் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது. | |
http://www.maruppu.in/
No comments:
Post a Comment