Sunday, January 1, 2012

விமானத் தாக்குதல்: துருக்கி வருத்தம் தெரிவித்தது


இஸ்தான்புல்:ஈராக் எல்லையில் துருக்கி ராணுவத்தின் விமானத் தாக்குதலில் 35 குர்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை ஈராக் எல்லையை ஒட்டிய குர்து கிராமத்தில் நடந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது என்றும், இச்சம்பவத்திற்காக வருந்துவதாகவும் உர்துகான் கூறியுள்ளார். இச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அதிபர் அப்துல்லாஹ் குல் கூறியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த துருக்கி அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில் இச்சம்பவத்தை கண்டித்து குர்து புரட்சி அமைப்பான குர்திஸ்தான் வர்க்கேர்ஸ் பார்டி(பி.கெ.கெ) துருக்கியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டுப் படுகொலைக்கு பதில் அளிக்கவேண்டும். போராட்டத்தின் மூலம் கணக்கை தீர்க்கவேண்டும் என பி.கே.கேயின் ஆயுதப்பிரிவு கமாண்டர் பஹோஸ் எர்தல் அழைப்பு விடுத்துள்ளார்.
முக்கிய குர்து ஆதரவு கட்சியான பீஸ் அண்ட் டெமோக்ரேடிக் கட்சி(பி.டி.பி) இத்தாக்குதலை கண்டித்துள்ளது. தாக்குதல் மூலம் சாதாரண மக்களை கூட்டுப் படுகொலை செய்துள்ளதாகவும், ஜனநாயகரீதியில் இதனை எதிர்க்கவேண்டும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது. இத்தாக்குதல் தவறுதலாக நடந்தது என துருக்கி விளக்கமளித்துள்ளது. ஆனால், குர்து புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஈராக் எல்லையை தாண்டி அத்துமீறி நுழைந்த புகையிலை கடத்தல் காரர்கள்தாம் கொல்லப்பட்டார்கள் என ஆளுங்கட்சியின் தலைவர் ஹுஸைன் ஸெலிக் கூறுகிறார்.
தென்கிழக்கு எல்லையில் குர்து புரட்சியாளர்கள் நடத்தி வந்த ரகசிய நடவடிக்கைக் குறித்து தகவல் கிடைத்ததால் விமானத் தாக்குதல் நடத்தியதாக துருக்கி ராணுவம் கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன் 

எகிப்து:வெளிநாட்டு என்.ஜி.ஒ அலுவலகங்களில் போலீஸ் ரெய்ட்

imagesCA3M6NRN
கெய்ரோ:எகிப்தில் அமெரிக்க அமைப்புகள் உள்பட பதினேழுக்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின்(என்.ஜி.ஒ) தலைமை அலுவலகங்களில் ராணுவமும், போலீசும் சோதனையிட்டன. இவ்விடங்களில் இருந்து ஏராளமான கம்ப்யூட்டர்களும், இதர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பொருளாதார உதவியை பெறும் உள்நாட்டு, வெளிநாட்டு என்.ஜி.ஓ தலைமை அலுவலகங்களில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இவற்றில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு இயங்குவதற்கான போதுமான அனுமதி கூட இல்லை என அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சிகளான டெமோக்ரெடிக், ரிபப்ளிக் கட்சிகளுடன் தொடர்புடைய நேசனல் டெமோக்ரெடிக் இன்ஸ்ட்யூட், இண்டர்நேசனல் ரிபப்ளிக் இன்ஸ்ட்யூட் ஆகிய அமைப்புகளும் இதில் அடங்கும். என்.ஜி.ஓக்கள் எகிப்து சட்டங்களை மீறி செயல்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சோதனை நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் செயல்படும் ஜனநாயக ஆதரவும், மனித உரிமை அமைப்புகளுக்கும் எங்கே இருந்து நிதியுதவி கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்றும் அதிகாரிகள் கூறினர். அதேவேளையில் எகிப்து அதிகாரிகளின் நடவடிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. ரெய்டை கண்டித்து எகிப்தில் ஜெர்மனி தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

ரஷ்யா:பகவத் கீதை தடைக்கோரும் மனுவின் பின்னணி என்ன?


 மாஸ்கோ:ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள டோம்ஸ்க் நீதிமன்றத்தில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை தடைச் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்றம் வரை பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் இதன் உண்மையான பின்னணியை குறித்து செய்தி வெளியாகவில்லை.

டோம்ஸ்க் நீதிமன்றத்தில் தடைச் செய்யக் கோரப்பட்ட நூல் ஹரே கிருஷ்ணா அமைப்பின் கிளையான இஸ்கோனின் ஸ்தாபகர் சுவாமி பக்திவேதாந்தாவின் ரஷ்ய மொழியிலான மொழிப்பெயர்ப்பாகும். ஹரே கிருஷ்ணா அமைப்பு ரஷ்யாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய அமைப்பாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வட்லானா அஹ்மந்த் ஜேவா என்ற பெண்மணி இவ்வியக்கத்தின் தலைவரான பாபாஜி தன்னை மிரட்டி பணம் பறித்ததாக டோம்ஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இஸ்கோன் என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட ஏராளமான புகார்களில் இதுவும் ஒன்று. அவற்றில் ஏழு வழக்குகளில் அரசு தரப்பு வழக்கு பதிவுச் செய்தது.
பாபாஜியின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீஸ் ஏராளமான போதைப் பொருட்களை கைப்பற்றியது. ரஷ்யாவில் தடைச் செய்யப்படாத ஸால்வியா டிவிநோரம் என்ற போதைப் பொருளை உபயோகித்து பாபாஜி தனது ஆதரவாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது ஸ்வட்லானாவின் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானதாகும்.
இவ்வமைப்பைச் சார்ந்த இன்னொரு பெண்மணி இரத்த நாள நரம்பை முறித்து தற்கொலைச் செய்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இஸ்கோன் அமைப்பைச் சார்ந்தவர்கள் பெருமளவில் ஹஷீஸ் என்ற போதைப் பொருளை உபயோகித்ததன் ஆதாரங்களும் வெளியாயின.
1980-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இஸ்கோன் அமைப்புகளில் சிறுவர், சிறுமியரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. 1983-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் ஒரு நீதிமன்றம் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட  ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆகவே ரஷ்யாவில் சர்ச்சையை கிளப்பியது பகவத் கீதை அல்ல. மாறாக சர்ச்சைக்குரிய சாமியார் பக்தி தேவானந்தாவின் மொழிப்பெயர்ப்பான பகவத்கீதை நூலாகும்.
நன்றி தூது ஆன்லைன் 

நைஜீரியா:சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம்

டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி
தோஹா:நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது:
நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதும், இஸ்லாத்தின் உயர்வான கொள்கைகளுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கடுமையான குற்றமாகும். இதர மதத்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். நமது அரசியல் சட்ட அமைப்பில் இதர மதத்தவர்களும் எல்லாவித உரிமைகளுக்கும் தகுதி உடையோர் ஆவர்.
அரபு வசந்தம் வெற்றிப் பெற்ற துனீசியாவில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. எகிப்தில் கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் பயமின்றி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வது அபிமானத்திற்கு உரியது ஆகும். முஸ்லிம், கிறிஸ்தவ, லிபரல், செக்குலர் என வேறுபாடு இன்றி அனைத்து பிரிவினரும் நன்மையின் புது யுகம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எகிப்தின் மிலிட்டரி கவுன்சில் மக்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதிச் செய்து, ராணுவத்திற்கான பொறுப்புகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும்.
பரிசுத்த திருக்குர்ஆனை மனனம் செய்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொண்ட நாடுதான் லிபியா என்பது, அண்மையில் நான் லிபியாவுக்கு சென்றபொழுது புரிந்துக்கொண்டேன். இத்தகைய மகத்தான பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களான லிபியாவின் சாதாரண மக்கள் ஆயுதங்களை அரசு அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். அமைதியும், நிம்மதியும் அமுலில் வருவதற்கான ஒரு அமைப்பிற்காக லிபியாவின் லட்சக்கணக்கான மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மூன்று நாடுகளை தொடர்ந்து சிரியாவிலும், யெமனிலும் புரட்சிகள் வெற்றிப்பெறும். மக்களை நேரில் சந்தித்து சிரியாவில் நடக்கும் காரியங்களை உண்மையாக பதிவுசெய்ய அரபுலீக்கின் கண்காணிப்புக்குழு நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு கர்ழாவி கூறினார்.
நன்றி தூது ஆன்லைன் 

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி

ross-caputi
லண்டன்:ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
‘இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் எந்த காரணத்தை சொல்லி நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோமோ அது வெறும் பொய்யான நம்பிக்கை மட்டுமே. மேலும் அமெரிக்க வீரர்கள் இதுவரை தாம் எதற்க்காக பேர் செய்கிறோம் என்றும் யாரை எதிர்த்து போர் செய்கிறோம் என்றும் இன்னும் புரியாமல்தான் உள்ளனர்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அந்த படையில் இருந்ததால் தனுக்கு அது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் சேவை புரிந்த அமெரிக்கர்களுக்கு ஃபலுஜாவின் மக்கள் மனிததன்மை அற்றவர்களாகவும் அமெரிக்க படைகளை எதிர்த்து போராடுபவர்கள், தீவிரவாதிகள் என்றே நம்பி வருகின்றனர். ஆனால் தாம் மற்றவர்கள் போல் அல்லாமல் தாங்கள்தான் போர் தொடுப்பவர்கள் என்றும் தங்களின் நாடு ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து ஃபலுஜா மக்கள் சண்டையிடுகின்றனர் என்றும் தாம் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒரு ஃபலுஜா வாசியாக இருந்திருந்தால் தன்னுடைய நகரத்தையும் குடும்பத்தையும் காப்பதற்காக வெளிநாட்டு படையினரில் ஒருவரையாவது கொன்று இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான ட்ராவிஸ் மற்றும் பிராட்லி ஆகியோரையும் தாம் ஃபலுஜாவில் இழந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர் அவர்களின் மரணம் வீரமானது இல்லை என்றும் அது துன்பம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் பிறரை கொன்றதும் கொல்லப்பட்டதும் அரசியல் காரணங்களை முன்னிறுத்தியாகும் மேலும் இருவரும் அதற்கு பலியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் மரணம் குறித்து வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில் ஃபலுஜாவில் போராடி உயிர் துறந்த ஈராக் வாசிகளுக்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகளை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுவதில் தாம் முரண்பாடு கொள்வதாகவும் மேலும் தங்களை ஹீரோக்கள் என்று கூறுவதிலும் தாம் முரண்பாடு கொள்வதாகவும் தாங்கள் ஃபலுஜாவில் செய்தது ஹீரோ என்ற சொல்லிற்கே பொருந்தாத செயல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
மேலும் ஃபலுஜாவில் தாங்கள் தாக்குதல் நடத்தி அங்கு வசித்த மக்களின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்றும் மேலும் போர் தொடுத்தவர்கள் பலியானவர்களின் மீது தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதை குற்றம் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று தான் வியட்நாமிலும், ஆஃப்கானிலும் மற்றும் அமெரிக்காவின் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணம் சொல்லப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதே கதைகளைத் தான் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கும் போது கூறி தங்களுடைய தாக்குதலை நியாப்படுத்துகின்றன என்றும் ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யார்? தங்களுடைய பாதுகாப்பிற்காக போராடுபவர்கள் யார்? என்பதை புரிந்துகொள்வதே இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும் என்றும் மேலும் தாம் ஃபலுஜா நகரை இரண்டாவது முறை முற்றுகையிட்டதில் தானும் பங்கு கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் ஃபலுஜா வாசிகள் மட்டுமல்லாது முழு ஈராக் மக்களும் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

குஜராத் இனப்படுகொலை:நீதிக்காக போராட ஸ்ரீகுமாரும், சஞ்சீவ் பட்டும் ஒன்றிணைகிறார்கள்

03VBG_SREEKUMAR_799317f
அஹ்மதாபாத்:குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமாரும், மோடி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டும் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தங்களிடையே நிலவிய பகைமையை மறந்துவிட்டு ஒன்றிணைய தீர்மானித்துள்ளார்கள்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஒன்றாக செயல்பட தயார் என சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் ஒரு காலத்தில் தனது மேல் அதிகாரியான ஸ்ரீகுமாருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தங்களிடையே நிலவும் பகையுணர்வு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதோடு, இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைப்பது இயலாமல் ஆகிவிடும் என பட் குறிப்பிட்டிருந்தார்.
சஞ்சீவ் பட்டின் கோரிக்கையை வரவேற்பதாகவும், இருவருக்கும் இடையேயான பிரச்சனைகள் தன்னை மிகவும் வேதனை அடையச் செய்ததாகவும் ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிரிகளுக்கு எதிராக தீரமாக போராடும் சஞ்சீவ் பட்டைப்போன்ற ஒருவருக்கு எதிராக தான் ஒருபோதும் மோசமாக ஒன்றும் செய்யவில்லை என ஸ்ரீகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான
போராட்டத்தில் தன்னுடைய அனைத்து உதவிகளையும் சஞ்சீவ் பட் எதிர்பார்க்கலாம் என ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு உறுதி அளித்துள்ளார்.
இனப்படுகொலை நிகழ்ந்து 9 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கிய சஞ்சீவ் பட்டின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தை எழுப்பி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நானாவதி கமிஷனுக்கு ஸ்ரீகுமார் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே அறிக்கை போர் துவங்கியது.
நன்றி தூது ஆன்லைன் 

மோடிக்கு மெஹ்பூபா புகழாரம்: ஆதாரம் வெளியீடு

Mehbooba_Mufti_11025
புதுடெல்லி:ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை உயிரோடு கொலை செய்து, முஸ்லிம் பெண்களின் மானத்தை சீரழித்து, வயிற்றில் இருந்த சிசுவை கூட தீயில் பொசுக்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கோரத் தாண்டவத்திற்கு
தலைமையேற்ற நரேந்திர மோடியின் வளர்ச்சி என்ற மாயையில் மயங்கி அவரது அணுகுமுறையை புகழ்ந்து கஷ்மீரின் பி.டி.பி கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஆற்றிய உரையின் பகுதி உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் மெஹ்பூபா மோடியை புகழ்ந்து பேசியதன் ஆதாரம் இந்த இணையதளத்தில் உள்ளது.
மோடியை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து மெஹ்பூபா முஃப்தி மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது உரை உள்துறை அமைச்சகத்தின் இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிசினஸ் விஷயம் தொடர்பாக நரேந்திர மோடியுடன் சந்திப்பை நடத்தியது குறித்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக மெஹ்பூபா தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அந்த இளைஞர், தனது கோரிக்கைக்கு மோடியிடமிருந்து விரைவான பதில் கிடைத்ததாக தெரிவித்தார் என மெஹ்பூபா கூறியிருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களிடம் கூடுதல் நெருங்குவதற்கு உதவும் என மெஹ்பூபா கூறியதுதான் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கிடையே, பா.ஜ.கவை எதிர்க்கும் மெஹ்பூபா கூட மோடிக்கு புகழாரம் சூட்டியதை சுட்டிக்காட்டி சுஷ்மா சுவராஜ் களமிறங்கியுள்ளார். மோடியை புகழவில்லை என மறுப்பு தெரிவித்த மெஹ்பூபாவிற்கு, உள்துறை அமைச்சகத்தின் இணையத்தில் அவரது உரை வெளியிடப்பட்டதை தொடர்ந்து உண்மை வெளியாகி உள்ளது. மெஹ்பூபாவிற்கு கஷ்மீர் அரசியலில் இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
நன்றி தூது ஆன்லைன்