Monday, February 6, 2012

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கல்வி உதவித்தொகை


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநிலம் சார்பாக ஏழை மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தி வைத்து நடைபெற்றது. ஒரு புதிய சமூக நல இயக்கமாக உருப்பெற்றுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக சமூக மேம்பாட்டுத்துறையினை தொடங்கி அதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிகழ்ச்சியை  சகோதரர் மெளலானா தல்ஹா அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சகோதரர் ஷர்புதீன் தனது வரவேற்புரையில் உதவித்தொகை வழங்குவதற்கான அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினார். தலை நகரத்திலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் ஏ.செய்யது உரையாற்றும்போது தேசம் சந்தித்து வரும் சவால்கள் பற்றியும் அதனை அதனை மாணவ சமுதாயம் தான் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துக்கூறினார். சமூக விடுதலைக்கான செய்தியை மாணவர்கள் சமூக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜாமியா ஹம்தார்தின் பேராசிரியர் முஹம்மது ஆமீர் உரையாற்றும்போது எந்த ஒரு சமூகம் வலிமையடையவேண்டுமென்றால் அது முதலில் கல்வியில் முன்னேர வேண்டும் என்று கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் மெளலானா கலீமுல்லாஹ் ரஷாதி அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்காக‌ பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டு பணிகளை எடுத்துக்கூறினார்.


 கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸுஜமான் உரையாற்றும்போது மாணவ சமூகம் தனது சொந்த சமூகத்தின் நிலையை உணர்ந்து அதனை முன்னேற்றுவதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Thanks chennai popular front

திருவள்ளூர் எஸ்.டி.பி.ஐ சார்பாக குடியரசு தினக் கொண்டாட்டம்

திருவள்ளுவர் மாவட்ட S.D.P.I சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள‌  மன்னுர்பேட்டையில்   63-வது குடியரசு தின விழா சிறப்பாக நடந்து முடிந்தது. S.D.P.I மாவட்ட துணைத்தலைவர் இனாயத்துல்லாஹ் M.B.A  அவர்கள் கொடியேற்றினார்கள்.


அம்பத்தூர் தலைவர் திரு . முஹம்மத் ரசூல் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக 86-வது வார்டு கவுன்சிலர் திரு. M.குரு M.C, மற்றும் H.பீர் மொஹம்மத் Ex .M.C, அம்பத்தூர் எஸ்டேட் T2 காவல்துறை ஆய்வாளர் திரு .M.V மனோகரன் கலந்து கொண்டனர். இதில்  29-வது வார்டு மதிமுக வட்ட செயலாளர் E.பாரூக் மற்றும் தொழில் அதிபர்களான M.S.K. இக்பால், T.சந்திரகுமார், S.வேலாயுதம் ஆகியவர்களும் கலந்து கொண்டனர்.  "குடியரசு"  என்ற தலைப்பில் S.D.P.I திருவள்ளுவர் மாவட்ட தலைவர் A. புஹாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் இலவச நோட்டு, உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் .












ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுதலை


ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.

செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்

சென்னை: சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்





வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.

”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார்.

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர்  அறிவுரை 
கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது 
கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு
 சமூகத்தை அவுரங்கசீப்பின் 

ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள்
 உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை 
பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே
 இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து
 ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் 
தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

நன்றி இந்நேரம்.காம் 










Saturday, February 4, 2012

அதிகரிக்கும் செல்போன் தொடர்பான குற்றங்கள்


                                     mobile crime
புதுடெல்லி:செல்போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி வரும்நிலையில், இதைப் பற்றி கவலை தரும் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

வரும் 2013ம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களில் பதிவாகும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் செல்போன்கள் எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், இணையம் தொடர்பான சைபர் சட்ட வல்லுனருமான பவன் துக்கல் கூறியுள்ளார்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்ற அவர், இப்போது பெரும்பாலான குற்றங்கள் செல்போன் மூலமே நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார். மக்களின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க, தனியாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்

சச்சார் அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் – அலிகர் பல்கலை கழக மாணவர்கள்

அலிகர்:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு பரிந்துரைகளை அளித்துள்ள சச்சார் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தொகையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்புவோம் என பல்கலை கழக மேம்பஸில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய மாநாட்டில் அலிகர் முஸ்லிம் பல்கலை கழக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.

வகுப்புவாத மோதல்களைக் குறித்து பல்வேறு விசாரணை கமிஷன்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் தூசிபடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது நீதித்துறையின் கோரமான முகத்தை காட்டுகிறது என யூனியன் சேர்மன் செய்யத் ஷரீஃப் அஹ்மத் கூறினார்.
 நன்றி தூது ஆன்லைன்