Sunday, November 13, 2011

முஸ்லிம்களுக்கு 5 மனைவிகள் 25 பிள்ளைகள் - பிரவீன் தொகாடியா



அஹமதாபாத்: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சாமியார்களின் பிரிவான‌ விஷ்வ ஹிந்து பிரிஷத்தின் (வி.ஹெச்.பி) மூன்று நாள் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரானா நகரில் நடைபெற்றது. இமாம் ஷாபா தர்கா அருகே வைத்து நடைபெற்ற இம்மாநாட்டில் வி.ஹெச்.பி.யின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான விஷப்பேச்சுக்களை அள்ளி தெளித்திருக்கிறார்.

முஸ்லிம்கள் இறைவனின் ஆணைப்படி தியாகத்திருநாளில் குர்பானி கொடுத்து கொண்டாடிய இச்சமயத்தில் பிரவீன் தொகாடியா மாடுகள் அறுக்கப்படுவதை ஒரு போதும் பொருத்துக்கொள்ளமாட்டோம் என்று பேசியுள்ளான்.


குஜராத்திலிருந்தும் நாட்டின் இன்ன பிற பகுதியிலிருந்தும் வி.ஹெச்.பி.யின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என்று குஜராத் ஆளுனருக்கு கோரிக்கை வைத்திருந்தும் நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை வி.ஹெச்.பி தனது நிகழ்ச்சியை நடத்தியது.


வி.ஹெச்.பி. நடத்திய இந்த நிகழ்ச்சியால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.காரணம் இவர்கள் பேசிய பேச்சு ஸ்பீக்கர் மூலம் வெளியில் இருந்த மக்களின் காதுகளிலும் விழுந்தது.  இந்நிலையில் தனக்கே உரித்த பாணியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான தனது விசமத்தனமான பேச்சுக்களை பிரவீன் தொகாடியா என்ற கொடியவன் கட்டவிழ்த்துவிட்டான்.

இந்துக்களுடைய வரலாறும் இந்துக்களுடைய கலாச்சாரமும் 6000 கோடி வருடங்களுக்கு முன்பாக இந்த தேசத்தில் இருந்து வருகிறது. இந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் 1400 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தார்கள்? இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரேபியாவில் இருக்கின்ற முஸ்லிம்களின் புனித ஸ்தலத்தையும், வாடிகனில் இருக்கின்ற கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலத்தையும் கைபற்ற வேண்டும்.
முஃமீன் (இறை நம்பிக்கையாளன்) என்று முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தையை நையாண்டி செய்து விட்டு, இந்துக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், இந்துத்துவ கொள்கையை பரப்புவதற்கும் இந்துக்கள் ஜாதி வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று  கூறியுள்ளான்.


இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து நம்முடைய பலத்தை இவ்வுலகத்திற்கு உணர்த்த வேண்டும், அதற்கு இதுவே சரியான தருணம். கோத்ராவில் நடந்த சம்பவம் தான் இந்துக்களை ஒன்றினைத்து அதன் பலம் என்ன என்பதை மாநிலத்திற்கு உணர்த்தியது.

இந்த தேசத்தில் அட்டூழியங்களை அரங்கேற்றும் முஸ்லிம்களை இந்த மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. கலவர எதிர்ப்பு மசோதா சட்டத்தின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

ஜிஹாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய ஜிஹாதிகள் நாடுமுழுவதும் எல்லா இடங்களிலும் பரவி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவர்களுக்கு முன்பாகவும் மத்திய அரசு மண்டியிட்டுவிட்டது. எனவே தான் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து வீதிக்கு வந்து தங்களுடைய பலத்தை வெளிக்காட்ட வேண்டும்.

தொடர்ந்து முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டையும் அவதூறையும் அள்ளித் தெளித்த பிரவீன் தொகாடியா மேலும் உளறிய வார்த்தைகள் இதோ:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சிரமத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறான். இதற்கு காரணம் நாட்டின் ஜனத்தொகை கூடுவதால் தான். பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்கள் மீது அதை அரசாங்கம் உடனடியாக திணிக்க வேண்டும். முஸ்லிம்கள் 5 மனைவிகளை கட்டிக்கொண்டு 25 பிள்ளைகள் பெறுவதை தடுத்து நிறுத்தாத வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே போன்று வங்காளதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருவியுள்ள லட்சக்கணக்கானவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனால் இந்த அரசாங்கமோ அவர்களை தன்னுடைய மருமகனைப்போல பாவித்து வருகிறது.


இந்தியாவில் 12% முஸ்லிம்கள்,  2.5% கிறிஸ்தவர்கள் தான் வாழ்கிறார்கள். 
ஆனால் 80% அதிகமாக வாழும் இந்துக்கள் இரண்டாம் தார குடிமக்களாக‌ நடத்தப்பட்டுவருகின்றனர். இதை இனிமேல் அவர்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் இந்துக்கள் அவமானப்படுத்தப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள், ஆனால் இந்த அரசாங்கமோ அவர்கள் ஹஜ்ஜு செய்வதற்காக மாணியம் வழங்கி வருகிறது.  என்று கூறினான்.

ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை முஸ்லிம்கள் சரியாக பயன்படுத்தாவிட்டால் அதை அவர்களிடமிருந்து பரித்து விட வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை பசுக்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடைக்காமல் போய்விடும். இந்தியாவில் புனித பசுக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பசுவை தாயாக அறிவிக்க வேண்டும். பசுக்கள் கொல்லப்படுவதை எல்லா ரீதியிலும் தடைசெய்து அதற்கு பாதுகாப்பளிக்க வேண்டும். 


மோடியின் உண்ணாவிரதம், அத்வானியின் ரதயாத்திரை போன்ற விவகாரங்களைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப முயற்சித்தும் அவர்களுக்கு விடையளிக்காமல் நைசாக நழுவி சென்றுவிட்டான் பிரவீன் தொகாடியா.


நிகழ்ச்சியின் போது நடந்த‌ முக்கிய அம்சங்கள்:

அஹமதாபாத் என்ற பெயரை எப்படியாவது ஆமதாவாத் என்று மாற்றிவிடவேண்டும்  என்பதற்காகவே அஹமதாப்பத்திற்கு பதிலாக ஆமதவாத் என்று மேடையில் பேசிய அனைவரும் உச்சரித்து வந்தனர். ஆனால் மூடர்கள் அவர்கள் அடித்த பேனரிலேயே அஹமதாபாத் என்றே எழுதியுள்ளார்கள்.

பேசும் போது மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்களை கூறிவிட்டு அமரும் போது பிரவீன் தொகாடியா சோகமாகவே காணப்பட்டான். (இதற்கு காரணம் பின்னர்தான் தெரியவந்தது. தொடர்ந்து படியுங்கள்)

விஜயபாதை என்ற கையேடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இலவசாமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் போன்ற வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளே குஜராத்தில் உள்ள பல இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு சென்றுவிட்டனர். பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் கேட்டதற்கு முதலைமைச்சர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ளார்கள். நரேந்திர மோடியின் அரசபையிலிருந்து ஒருவர்கூட இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

பிரவீன் தொகாடியாவின் இந்த பேச்சை கேட்டவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு அருகிலுள்ள ஷா பாபாவின் தர்காவிற்கும் விஜயம் செய்துள்ளனர்.
ஆக மொத்தத்த்ல் வி.ஹெச்.பி நடத்திய இந்த  நிகழ்ச்சிக்கு அவர்களின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கூட வரவேற்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?



மாலேகான்: கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபே-பராத் இரவு அன்று மாலேகானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். மஹாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு 9 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு ஆதாரமும் இல்லாதிருந்தும் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தங்களுடைய உறவினர்களையும் தன் சமூக மக்களையும் குண்டு வைத்து கொல்வார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் இஸ்லாமோஃபோபியா என்ற கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லலாம். தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு மிக இலகுவாக ஆகிவிட்டது. எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அந்த குண்டுவெடிப்பில் யார் உயிரிழந்தாலும் முதலில் சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக போலீயான ஆதாரங்களை திரட்டுவது போன்ற அக்கிரமமான வேலையைத்தான் காவல்துறையினர் சில காலமாக செய்து வருகிறார்கள்.





இதே போன்ற நிலைதான் ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போதும் நிகழ்ந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நேரத்தின் போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு உடனே 27 முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணைக்கூட நேர்மையாக நடைபெறவில்லை. இரயில் எரிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மெளலானா ஹாஜி உமர் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை என்ற போதிலும் சில முஸ்லிம் இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை அதிகாரிகள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பதிவிக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.


கடந்த 2006ஆம் ஆண்டு நந்தித்தில் பஜ்ரங்தளைச்சேர்ந்த இரு தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியனான ராஜ்கொந்தவார் என்பவனின் வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்துச்சிதறி பலியானார்கள். இத்தகைய செயலில் ஈடுபட்டது இந்துத்துவ இயக்கங்களைச்சார்ந்தவர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் நேர்மையாக நடந்து கொண்ட ஹேம்ந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி புலன் விசாரணையில் ஈடுபட்டு மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், சுவாமி தயானந்த பாண்டே, முன்னால் இராணுவ அதிகாரி என பல ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தார். ஆனால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே படுகொலை செய்யப்பட்டார்.

இது நாள் வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதனால் உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பினும் அவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து என்றோ விலகிவிட்டார்கள் என்றும் அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை மறுத்துவருகிறது. குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று என்னதான் ஆர்.எஸ்.எஸ் கூவினாலும் அசிமானந்தாவின் வாக்குமூலம் அவர்களுக்கு செருப்படியாய் விழுந்திருக்கிறது. அசிமானந்தாவ் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஊழியன் என்றும், வி.ஹெச்.பி.காக பல ஆண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்ற உண்மையை அவர்களால் மறைக்கமுடியவில்லை. தாமே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இன்ன பிற சம்பங்களிலும் ஈடுபட்டதாக நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்தார் அசிமானந்தா. இன்னும் சில ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியர்களையும் காட்டிக்கொடுத்தார்.


ஒரு குற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட 6 வருடங்களாக சிறையில் தனது இளமையை துலைத்துவிட்டு தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் அந்த 9 முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை நிலை என்னவாகும்?


தொடர்ந்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் ஈடுபட்டுவருகிறார்கல் என்பது தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் எங்கு குண்டுவெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்களையே குறி வைத்து கைது செய்வது சரியான் முறைதானா? 


எப்போது இத்தகைய நிலை மாறும்? 


சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசு வெறும் வாய்ஜாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதற்காக எத்துனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது? வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கக்கூடிய "சமூக நல்லிணக்கம்"  என்று செயல்வடிவம் பெறும்?


தாங்கள் ஈடுபட்டு வரும் இந்த ஒரு தலைபட்சமான செயல்பாடுகளினால் உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே வருகிறார்கள். இதனால் தேசத்திற்கே ஆபத்து என்பதை எப்போது இந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள்போகிறார்கள்?


மதத்தின் பெயரால் அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை முடக்கப்போவது யார்?

இத்தகைய கேள்விகளுக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது......?

கட்டுரை : முத்து

Friday, November 11, 2011

ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா

கொலம்பசையும் ,மார்கோ போலவையும் தெரிந்த பலருக்கு இந்த பெயர் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.ஆனால் இவரின் சாதனைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை பிரயங்களிலேயே செலவிட்டவர்.
1304 ஆம் ஆண்டு மொரோக்காவில் பிறந்தவர் தான் இப்னு பதுதா இவரது இயற்பெயர் 
ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா என்பதாகும்.இவரின் பயணக் 
குறிப்புக்கள் "rihla" என்ற என்ற நூலில் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தன்னுடைய பயணத்தில் வட ஆப்ரிக்கா முதல் மேற்கு ஆப்ரிக்கா ,
 தெற்கு ஐரோப்பா ,கிழக்கு ஐரோப்பா ,மத்திய கிழக்கு நாடுகள் ,இந்தியா துணைகண்டம் ,
மத்திய ஆசியா, தெற்கு ஆசியா ,சீனா என கிட்டத்தட்ட 121000 கிலோமீட்டர் அதாவது 75000
 மயில்கள் பயணம் செய்துள்ளார் அதுவும் எந்தவிதமாக வகான வசதிகளும் இல்லாத அந்த
 நாளிலும் கூட குதிரை மற்றும் கப்பல் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
தன்னுடைய இளம் வயதில் மார்க்க கல்வியை முடித்த இவர் 1325 ஆம் ஆண்டு தன்னுடை
 21 ஆம் வயதில் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.மக்காவிற்கு
செல்வது என்பது இப்பொழுது நாம் செல்வதை போல விமான வசதிகள் எல்லாம் கிடையாது.
மொரோக்காவில் இருந்து மக்கா செல்லவேண்டும் என்றால் அந்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட
 பதினாறு மாதங்கள் ஆகும்.ஆனால் இப்னு பதுதா தான் மக்கா சென்று தனது நாடான
 மொரோக்கவிர்க்கு திரும்ப கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகியது.உலகின் இஸ்லாமிய
 ஆட்சி எங்கெல்லாம் இருந்ததோ மேலும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற இப்னு
 பதுதா 1348 ஆம் ஆண்டு தனது முதல் நீண்ட ஹஜ் பயணத்தை முடித்து சிரியா வந்து சேர்ந்தா
ர் அப்பொழுது தான் அவருக்கு தெரியும் தனது தந்தை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
 இறந்தது.இந்த சோகத்தின் காரணமாக தனது நாடான மொரோகவிர்க்கு திரும்ப தீர்மானித்தார்.
சிரியாவிலிருந்து பாலஸ்தீனம் வழியாக கிட்டத்தட்ட ஒரு வருட பயணத்திற்கு பின்னர் 
மொரோக்கோ வந்து சேர்ந்தார்.தந்தை இறந்த சோகத்தில் இருந்த இப்னு பதுதாவிர்க்கு 
மேலும் ஒரு அதிர்சியாக மொரோக்கோ வந்து சேருவதற்கு ஆறு மதத்திற்கு முன்பே தனது
 தாயும் இறந்த செய்தி மேலும் அதிர்சியை உண்டாக்கியது.சில நாட்கள் தனது சொந்த ஊரான
 தன்ஜிரில் தங்கி இருந்த இப்ன் பதுதா பின்னர் தனது பயணத்தை ஸ்பைனில் இஸ்லாமிய
 ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த மூர் வம்சத்தின் அல் அந்தலூஸ் அல்ஹம்ரா உள்ளிட்ட 
அனைத்து பகுதிகளையும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இப்படியே கிட்டத்தட்ட தனது
 வாழ்நாளின் பெரும்பகுதியை பயணத்தில் செலவழித்த இபின் பதுதா 1368 ஆம் ஆண்டு
 மரணமடைந்தார்.
வரலாற்றில் பல தியாகங்களை செய்த சமூகம் இஸ்லாமிய சமூகம் ஆனால் இன்
று
 நமது வரலாறே நமக்கு தெரிவதில்லை.மருத்துவம் புவியியல் கணிதவியல் அறிவியல்
 இன்னும் எத்தனையோ தளங்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்திய இஸ்லாமிய சமூகத்தின்
 நிலை மிக வருத்தத்திர்க்குரியதாகவே உள்ளது.ஐரோப்பா உலகின் இருண்ட கண்டம் என
 அழைக்கப்பட்ட அந்நாளில் உலகிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்கள்
 முஸ்லிம்கள்.பல நூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புக்களுக்கு பின்னர்
 தான் ஐரோப்பியர்கள் அறியவிலில் கால் பதித்தனர் என்பது வரலாற்று உண்மை.
வரலாற்றை மறந்த சமூகம் நிட்சயம் வாரலாற்றை படைக்க முடியாது.நாம் 
வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது பல உள்ளன.