Wednesday, February 22, 2012

கேரளா:கண்ணூரில் சி.பி.எம்.-முஸ்லிம் லீக் மோதல் தொடர்கிறது: கம்யூ. தொண்டருக்கு வெட்டு!


22 Feb 2012

தளிப்பரம்பு(கேரளா):முஸ்லிம் லீக்கின் முன்னணி அமைப்பான எம்.எஸ்.எஃபின் உள்ளூர் தலைவர் அப்துல் ஷுக்கூரின் கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் மற்றும் டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்தும் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தளிப்பரம்பு அரியல் என்ற இடத்தில் மார்க்சிய கம்யூ. தொண்டர் அரிவாளால் வெட்டப்பட்டார். சிகிட்சைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கொல்லப்பட்ட அப்துல் ஷுக்கூரின் உடல் அரியல் ஜும்மா மஜ்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அப்துல் ஷூக்கூரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த கெ.எம்.ஷாஜி எம்.எல்.ஏவின் காரின் மீது கல்வீச்சு நடந்தது. முஸ்லிம் லீக் தலைவர்கள் பயணித்த வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. முஸ்லிம் லீக் மற்றும் சி.பி.எம் உறுப்பினர்களின் வீடுகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு போலீஸ் க்ரேனேடு பிரயோகித்தது. மாவட்டத்தின் பல இடங்களில் தடை உத்தரவு நீடிக்கிறது. அப்துல் ஷுக்கூர் கொலை தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட சி.பி.எம் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

கோவை : முஸ்லிம் கடைகள் மீது இந்து முன்னணி தாக்குதல்! - திடீர் பதட்டம்!!



கோயமுத்தூர்: பிப்ரவரி 22,   கூடங்குளம் அணு உலையை திறக்க கோரி, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில், ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் இன்று (22ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் வழக்கம்போல் கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பல இடங்களில் வணிகர்கள் கடைகளை திறந்தனர். இதற்கிடையில், ஆவாரம்பாளையம் ரோடு, சலீவன் வீதி, சவுரிபாளையம், கிராஸ்கட் ரோடு, செல்வபுரம், இடையர் வீதி, டி.பி.ரோடு உள்ளிட்ட பகுதியில் முஸ்லிம்கள் நடத்தும்,  பேக்கரி, ஓட்டல்கள் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசிவிட்டு தப்பினர்.  இதில் கடைகளின் ஷோ கேஸ் கண்ணாடிகள் உடைந்தன.  கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு, தாக்குதல் நடத்தினர்.  நகரில், 11 இடங்களில் பேக்கரி, ஓட்டல்கள் மீது தாக்குதல் நடதத்ப்பட்டது.   கடையை திறக்க வந்த நகை கடை உரிமையாளர்களும் தயக்கத்துடன் திறக்காமல் காத்திருந்தனர்.

 சில மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொருவராக கடைகளை திறக்க துவங்கினர். மதியத்துக்கு மேல் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒருசில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

நன்றி தூது ஆன்லைன் 

Tuesday, February 21, 2012

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்






 பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். 
”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. 


ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார். 



தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார். 



2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார். 



மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார். 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவி செய்த முஸ்லிம் தொண்டு நிறுவனம்



அஹமதாபாத்: "நரோடா பாட்டியா" கடந்த 2002 ஆம் ஆண்டு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். அப்பாவி முஸ்லிம்களில் பெண்கள் குழந்தைகள் என 90ற்கும் மேற்பட்டவர்கள் சங்கப்பரிவாரங்களால் காட்டுமிராண்டித்தனமான‌ முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் இவ்வூரில் தனது அக்கம்பக்கத்தினராக இருந்த இந்துக்களுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டை சீரமைப்பதற்கு முஸ்லிம்களே உதவிசெய்துள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி (ஐ.ஆர்.சி) மூலமாக‌ 70ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. அதிக முஸ்லிம்கள் அந்த பகுதியை விட்டு சென்றுவிட்டனர். கலவரத்தின் போது வெளியேறிய பெரும்பாலான இந்துக்கள் மீண்டும் தங்களுடைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர்.

வத்வா, துதேஷ்வர் போன்ற பகுதிகளில் இதுவரை 500ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி உதவி செய்துள்ளது. பல மாதங்களுக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது இந்து நண்பர்களை கண்டு கொண்டார்கள்.

லதா செளத்ரி (வயது 40)  என்ற பெண்மணி கூறும்போது தானும் தன்னுடைய குடும்பத்தினரும் கலவரத்தின் போது நரோடா பாட்டியாவிலிருந்து கோக்கரா என்னும் இடத்திற்கு சென்றுவிட்டதாக கூறினார். ஆனால் சில மாதங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் வீடு கலவரக்காரர்களால் சூரையாடபட்டதாக கூறினார்.

ஹன்ஸா திவாரி (வயது 50) என்ற பெண்மணி கூறும்போது: நரோடா பாட்டியாவில் முஸ்லிம்களின் வீட்டை கலவரக்காரர்கள் தீ வைத்து கொழுத்திய போது தனது வீடும் அதில் பாதிக்கப்பட்டதாக கூறினார். இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி தனது வீட்டை சீரமைத்து கொடுத்த பின்பு தாங்கள் சந்தோஷமாக வீடு திரும்பியதாக கூறினார். எங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நல்லுறவு இருந்து வருகிறது. இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி செய்த உதவியினால் தான் எங்களால் வீடு திரும்ப முடிந்தது எனக்கூறினார்.

ராதேஷ் ஷியாம் ஷர்மா (வயது 45) என்கிற டெய்லர் கூறும்போது: நான் பிறந்ததிலிருந்தே நரோடா பாட்டியாவில் தான் வசித்து வருகிறேன். எங்களுக்கு முஸ்லிம்களுக்குமிடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. ஐ.ஆர்.சி தான் எங்களுக்கு உதவி செய்து எங்களுடைய வீட்டை சரி செய்து கொடுத்தது எனக்கூறினார்.

ஐ.ஆர்.சியின் தலைவர் ஷகீல் அஹமது அன்ஸாரி  கூறும்போது: இவர்கள் அனைவரும் சாதாரண இந்துக்கள். இவர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வராத நிலையில் நாங்கள் உதவி செய்ய தீர்மானித்து, அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தோம் என்று கூறினார்.

Thanks chennai popular front

சென்னையில் பைப் வெடிக்குண்டுகள் பறிமுதல்: ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதியா?


சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தையடுத்துள்ள எடப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் கோயில்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பைப் வெடிக்குண்டுகள்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்டது எடப்பாளையம். அங்குள்ள பசும்பொன் நகரில் கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சக்திவாயந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சோழாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கிணற்றுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.

இதுகுறித்து கிணற்றின் உரிமையாளர் கோயில் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றுக்குள் இருந்து சக்திவாய்ந்த பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க தலைவர் அத்வானி ஜனசேதனா யாத்திரை செல்லும் வழியில் பைப் குண்டு கைப்பற்றப்பட்டது. அப்பாவி முஸ்லிம்களின் பழியை போட்டு போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்பொழுது கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை போலீஸார் முஸ்லிம்கள் மீது பழி போடுவார்களா?அல்லது வழக்கை மூடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட சங்க்பரிவார தீவிரவாதிகள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் சில சம்பவங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மீது பழியை போட பைப் வெடிக்குண்டுகளை சங்க்பரிவார ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பதுக்கி வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவேண்டும். முன்னர் தென்காசியில் நடந்த அனுபவத்தை போலீசார் மறந்து இருக்கமாட்டார்கள்.

நன்றி: தூதுஆன்லைன்

பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கிறதாம்!


    சென்னை: 16.02.2012 அன்று காலை "டைம்ஸ் நவ்" ஆங்கில செய்தி சேனலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பயங்கரமான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறதாம்! பயிற்ச்சி என்னவென்றால்? காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்டால் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பயிற்ச்சி அளிப்பதாக டைம்ஸ் நவ் சேனலில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்


வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் பா.ஜ.க விடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இந்த முறையும் உத்திர பிரதேச தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.