Wednesday, December 7, 2011

பாராளுமன்றத்தில் தனித்து ஆதிக்கம் செலுத்த நாம் விரும்பவில்லை – இஹ்வான் தலைவர்


புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 14:33
வாசிப்புக்கள்: 161
பகுதி: செய்திகள் - 
உலக செய்திகள்


Badi Ikhwan leaderபாராளுமன்றத்தில் இஹ்வான்கள் தனித்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற மிகைப்படுத்தப்பட்ட கருத்து பரப்பப்படுகிறது. ஆனால், நாம் பாராளுமன்றத்தை தனியாக நின்று கட்டுப்படுத்த மாட்டோம். கூட்டுச் சேர்ந்து செயற்படவே விரும்புகிறோம் என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவரும் பொது வழிகாட்டியுமான பேராசிரியர் முஹம்மது பதீஃ தெரிவித்துள்ளார்.
‘‘இஸ்லாம் எப்போதும் மக்கள் சார்பானதே. ஏனைய சக்திகளுடன் இணைந்து புதிய எகிப்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். எம்முடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பை, ஆரம்பத்தில் 45 கட்சிகளுக்கு ‘ஜனநாயக கூட்டணி‘ மூலம் நாம் வழங்கினோம். அது எமது கூட்டுச் சேர்ந்து பணியாற்றும் நோக்கத்திற்கு போதிய சான்றாகும்‘‘ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தின் எதிர்கால அரசியல் முறை எவ்வாறு அமையும் என்ற வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. சிலர் பாராளுமன்ற முறைக்குப் பயப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகள் செல்வாக்குச் செலுத்துவர் என்பதே இவர்களது அச்சத்திற்குக் காரணம்.
வேறு சிலர் ஜனாதிபதி முறைக்கு அஞ்சுகின்றனர். ஏனெனில், அது தனி ஒரு நபரின் கையில் அதிகாரத்தைக் குவித்துவிடும்.
‘‘நாங்கள் அரை ஜனாதிபதி முறையை விரும்புகிறோம்‘‘ என பதீஃ தெரிவித்துள்ளார். இஹ்வான்கள் முன்மொழிந்துள்ள இந்த அரை ஜனாதிபதி முறை பிரான்ஸில் உள்ளது போல, பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் சம அதிகாரத்தை வழங்குவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் வரும் ஜூன் மாதம் அளவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment