Wednesday, December 28, 2011

பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவுக்கு எகிப்தில் அமோக வரவேற்பு


hamas-ihvan











பலஸ்தீனப் பிரதமரும், ஹமாஸ் அமைப்பின் முன்னணித் தலைவருமான இஸ்மாயில் ஹனிய்யா எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினரைச் சந்தித்து மத்திய கிழக்கு அரசியல் நிலவரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிராந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு எகிப்து சென்றுள்ள இஸ்மாயில் ஹனிய்யாவை, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பொது வழிகாட்டியான (முர்ஷிதுல் ஆம்) பேராசிரியர் முஹம்மத் பதீஃ, கெய்ரோவிலுள்ள தலைமையகத்தில் வரவேற்றுள்ளார்.
2007 ஆம் ஆண்டு காஸா எல்லையை இஸ்ரேல் மூடியதன் பின்னர் ஹமாஸ் அமைப்பினர் இவ்வாறான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அங்கு உரையாற்றிய முர்ஷிதுல் ஆம் முஹம்மத் பதீஃ, ‘‘எமது நாட்டிற்கு வருகை தந்துள்ள பலஸ்தீனப் பிரதம மந்திரியும் எமது சகோதரருமான உங்களை வரவேற்பதில் பேருமகிழ்ச்சியடைகிறோம். இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைமையகம் தொடர்ந்தும் பலஸ்தீன மீட்சிக்காக தனது முழு ஆதரவை வழங்கி வருகின்றது‘‘ என்றார்.
இதனை அடுத்து இஸ்மாயில் ஹனிய்யா சூடான், தூனிஸியா, கட்டார், பஹ்ரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தின்போது பல தலைவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்.

hamas-misir-haniyehhaniyeh-arab-lig
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment