Saturday, November 2, 2013

இன்றைய முஸ்லிம்களிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல.
ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர்.
வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.



ஜனநாயகம்  என்பது வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கையிலும் இல்லை ; மெத்தப்படித்தவர்கள் கையிலும் இல்லை. யாருக்கு எவ்வளவு கமிஷன் பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது இந்த ஜனநாயகம் என்ற அதிகார நாயகம் .

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை 
ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?



ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 

1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி


என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில், 

‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார். 

மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,

‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.

 ‘தோமஸ் ஸ்கூப்’ ‘ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார். 

ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். 

ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்

  1990களில் ஜனநாயக வளர்ச்சி பாய்ச்சலாக காணப்படுகின்றது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ கருத்துப்படி, உலகில் ஜனநாயகம் என்பது எந்த ஆட்சி முறையினதும் கடைசி கட்டமாக இருக்கும் அத்துடன் ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மாற்றமடையாது என கூறப்பட்டது. மேலும் 3ம் அலை ஜனநாயகமயப்படுத்தலின் போது இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாடு ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என கூறலாம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஜனநாயகமயப்படுத்தலிலும் அன்று முதல் இன்று வரை இனத்துவ வேறுபாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

ஜனநாயகம் என்றால் என்ன?

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது.  ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. 

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

 இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.
வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வர்க்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.