Sunday, December 4, 2011

லிபியாவின் எதிர்காலம் ஒளிமயமானதாகவே இருக்கும் - ஸனூஸி பிசைகிரி


சனிக்கிழமை, 19 நவம்பர் 2011 00:26
வாசிப்புக்கள்: 176

  • PDF
sanoosi - 2தமிழில் - ஏ.டபிள்யூ.எம். பாஸிர்
லிபிய சர்வதிகாரம் வீழ்ந்தபின் அங்கு புதியதொரு சூழலுக்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. கடாபிக்குப் பின்னரான லிபியாவின் கள நிலவரங்கள்நாடு எதிர்கொள்ளும் சவால்கள்லிபியாவில் சர்வதேசத்தின் இருப்புபுதிய லிபியாவை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் மற்றும் இன்னும் சில விடயங்கள் குறித்து லிபிய தேசத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும்,ஆவாளரும்அரசியல் சேயற்பாட்டாளருமான ஸனூஸி பிசைகிரி அவர்களுடன் அல்-முஜ்தமஃ சஞ்சிகை மேற்கொண்ட நேர்காணலின் சில பகுதிகளை மீள்பார்வை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
கடாபியின் முடிவை லிபிய மக்களும் அறபு மக்களும் சர்வ தேசமும் எப்படிப் பார்க்கின்றனர்?
பல தசாப்தங்களாக ஆட்டிப்படைத்த கொடுங்கோன்மையிலிருந்து லிபியா விடுபட்டுள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர். சுதந்திரம் முடக்கப்பட்டுசெல்வங்கள் சிதறடிக்கப்பட்டுஅறிவீனமும் பிற்போக்குத் தனமும் மூளைகளை ஆக்கிரமித்திருந்த காலப்பிரிவு முடிந்து லிபிய மக்களின் கோரிக்கைகள் சாத்தியமாகின்ற புதிய சிவில் தேசத்தை அமைக்க முடியுமான புதியதொரு காலப்பிரிவு வந்திருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
கடாபியின் முடிவோடு லிபி யாவின் கஷ்டங்களும் முடிந்து விட்டதா?
நிச்சயமாக மிக அண்மையில் அது சாத்தியமே இல்லை. அரசியல் உறைநிலையும்,விளையாட்டுத்தனமான பொருளாதாரமுமாக காணப்பட்ட நான்கு தசாப்தங்களும் விட்டுச் சேன்ற வடுக்கள் மிகப் பெரியவை. அதேபோன்று பல மாதங்களாக நீடித்த யுத்த நடவடிக்கைகள் ஏற்படுத்திய பாதிப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல. கடாபியினால் லிபிய மக்கள் பட்டகஷ்டங்கள் அவரின் மரணத்தின் பின்னரும் சிலகாலங்களுக்குத் தொடரலாம்.
தூரநோக்கில் லிபியா எதிர் கொள்ளும் என நீங்கள் கருதுகின்ற சவால்கள் எவை?
பொதுவாக சில பிரச்சினைகள் அங்குள்ளன. பின்னடைவுஜனநாய வாழ்வு தொடர்பான குறைவிழிப்புணர்வுசிவில் செயற்பாடுகளின் பலயீனம் போன்றவை. அவற்றோடு கோத்திர முரண்பாடுகள்முரண் சிந்தனைப் போக்குகள்புரட்சி வெடித்ததன் பின் முன்னைய அதிகார வர்க்கம் கோத்திரங்களுக்கும்பிரதேசங்களுக்கும் வழங்கிய அதிகாரங்களினால் சமூக பிணைப்பில் ஏற்படுத்திவிட்ட இறுக்கமான போக்குகள். இவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு இயந்திரத்தை உள்ளடங்கலாக நாட்டின் நிறுவனங்கள் அனைத்தினதும் வீழ்ச்சி என் பவற்றையும் குறிப்பிடலாம். சிவில் நிறுவனங்களின் இடங்களை அவர்களின் அனுபவக்குறைவு மற்றும் முறன் செல்நெறிகள் காரணமாக பாதுகாப்புத் தரப்பினர் நிரப்பியிருக்கின்றனர். அதேவேளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் பெரும் எண்ணிக்கையில் பரவியுள்ளது.
லிபியாவில் தற்போது நிகழ்வது புதியதொரு சூழல் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடையாளங்கள் என்னஅவற்றின் கதாநாயகர்கள் யார்?
அனைவரது உரிமைகளை உள்வாங்கியஅரசியல் நிறுவனங்களை ஏற்படுத்துவதை வலியுறுத் துகின்றநாட்டின் சேல்வங்களை நேரிடையாக பங்கீடு சேயும் ஜனநாயக தேசத்திற்கான அத்தி வாரத்தை ஏற்படுத்த முனையும் சமூக அரசியல் இயங்கு தளத்தையே புதிய சூழலின் அடையாளங்கள் மையப்படுத்தி இருக்கின்றன.
தற்போதைய சூழலின் கதாநாயகர்களாக தினமும் அதிகரித்து வரும் லிபியாவின் மிகச்சிறந்த எதிர்காலத்தைத் தேடும் இளைஞர் கூட்டம் விளங்குகின்றது. அவர்கள் புதிய லிபியாவில் முக்கியமான பணிகளைத் தொடர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். மாநாட்டு மண்டபங்களிலும்,பொது மாநாடுகளிலும் அவர்களை நீங்கள் காணலாம். அங்கே விரிவுரைகளை ஏற்பாடு செய்யும் இடங்களை அவர்களே பிடித்திருக்கிறார்கள். சஞ்சிகைகளை வெளியிடுவதிலும்சிவில் அமைப்புக்களை உருவாக்குவதிலும் பெரும் பங்கினை அவர்கள் வகிக்கின்றனர். இடைக்காலப் பேரவை மற்றும் நிறைவேற்று சபையின் கொள்கைகள் தீர்மானங்களை சிறப்பாக அமுல்படுத்துவதிலும் அவர்களே முன்னிற்கின்றனர்.
எட்டு மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் எனச் சொல்லப்படுகின்ற தேர்தல் வரைக்கும் இடைக்காலப் பேரவையினால் லிபியா தொடர்ந்து ஆட்சி செய்யப்பட முடியும் என நம்புகிறீர்களா?
யாப்பின் 30வது சரத்து இடைக்கால கட்டத்திற்கான சட்டவிதிகளை வரைந்திருக்கிறது. அவ்விதிகளுக்கேற்ப அதன் காலஅளவு சுமார் இரு வருடங்களாகும். லிபியா முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து 8 மாத காலத்திற்குள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரை தற்போதைய இடைக்காலப் பேரவை இருக்கும். அப்பாராளுமன்றமே இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும். யாப்பை தயாரிப்பதற்கான ஸ்தாபக சபையை ஏற்படுத்தும். குறிக்கப்பட்ட காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் திணைக்களத்தையும் அதுவே உருவாக்கும்.
லிபியாவை மீளக்கட்டி யெழுப்பும் பணியில் இராணுவ ரீதியான சர்வதேசத்தின் பிரசன்னம் என்னவாக இருக்கும்சிலர் மீளக் கட்டியெழுப்பும் பணியில் ஐ.நா. வின் கண்காணிப்பை லிபிய தலைமைத்துவத்தின் குறையாகக் கருதுகின்றனர். கிடைக்கவிருக்கும் சில நலன்களை வைத்து லிபிய மக்களுக்கு உதவியளித்த தரப்புக்கள் சூரையாடிக் கொள்ள முனையும் ஒரு முயற்சி அங்கு நடக்கின்றது என்பது சரிதானா?
லிபியாவில் நேரடி வெளிநாட்டு இராணுவப் பிரசன்னம் இருக்கும் எனச் சொல்லுவோரும் அதனை மறுப்போரும் சிறு தொகையினரே. நாம் அதனை ஒப்படைத்தாலும் நாம் அதற்கான அடிப்படைக் கொள்கை பற்றிப் பேசுவோம். மீளக் கட்டியெழுப்புதல் எனும் விவகாரத்தைப் பொறுத்தவரை அது வரவேற்கத்தக்கதொரு போட்டியாகும். சில வெளிநாட்டு அவதானிகள் அதனை பொருளாதார யுத்தம் என வர்ணித்திருக்கின்றனர். ஆனால்இதுவரை மீளக் கட்டியெழுப்புதல் தொடர்பான பெரிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை. சூரையாட முனையும் முயற்சியைப் பொறுத்தவரையில் இடைக்கால சபையும் நிறைவேற்று சபையும் அதனை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. ஆயினும் புதிய தேசத்தை அமைப்பதற்கான கோரிக்கைகளுடனும் அரசியல் பிரிவுகளின் பங்களிப்புடனும் தொடர்புபடுகின்ற சர்வதேச தரப்புக்கள் சிலரிடம் இருந்து அழுத்தங்கள் காணப்படும் என்பதை நான் தூரமாகப் பார்க்கவில்லை. அவற்றினுள் இஸ்லாமியவாதிகள் உள்ளடங்குவதோடு பொருளாதார சலுகைகளும் காணப்படலாம்.
கோத்திர சபையை உருவாக்கி லிபியாவை மூன்று பகுதிகளாக பிரிக்கும் ஸ்தாபன ஒழுங்கை ஏற்படுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களாஅதன் விளைவாக வரும் அபாயங்கள் எவை?
ஆய்வின் அடிப்படையிலேயே இதற்கு பதிலளிக்க வேண்டும். லிபியாவின் தற்போதைய அரசியல்,சமூகபுவியியல் நிலமைக்கும் மற்றும் குடிசன மதிப்பீட்டுக்கும் ஏற்றவாறு அதிகம் பொருந்திவருகின்ற அரசியல் ஒழுங்கு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை அப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. சிலர் விடுத்திருக்கும் கோரிக்கைகள் பெப்ரவரி 17 புரட்சியின் இலக்குகள் மற்றும் அதன் சூழலுக்குப் பொருத்தமில்லாத மேலோட்டமான புரிதல் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டவை. லிபியாவின் ஏனைய குழுக்களிடமிருந்து வெளிவந்த கோத்திர நிலைப்பாடுகளின் பிரதிபலனாகவே இவை வந்துள்ளன.
சிலர் ஆயுதங்களை உடனே களையுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இன்னும் சிலர் புரட்சியின் இலக்குகள் கவனம் எடுக்கப்படாதிருக்கக்கூடும் என்ற கருதுகோளில் மக்களால் தெரிவுசேயப்படும் அரசாங்கத்திடமே தவிர வேறு எவரிடமும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம் என அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும் சிலர் லிபியாவின் ஆயுதங்களை அழித்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உங்களது பார்வையில் சரியான நிலைப்பாடு எது எனக் கருதுகிறீர்கள்சுதந்திரத்திற்கு உயிரைப் பணயம் வைத்து போராடிய போராளிகளின் முடிவு என்ன?
இவ்விடயங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் அதனுடன் தொடர்புபடவே முடியாதவை. இவை ஆயுதம் தரித்தவர்களை உள்வாங்கும் சக்திபெற்ற பாதுகாப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதுடன் தொடர்புபட்டவை. இது இன்னும் உருவாக்கப்படவில்லை. அப்படி சில இருப்பினும் அவை பலவீனமானவை. இங்கு சில தெரிவுகள் உள்ளன. சமூக சக்திகளையும்சமூக நிறுவனங்களையும் ஆயுதங்களை ஒப்படைத்து அவற்றை விற்பதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதில் பங்கு கொள்ளச் செய்யலாம்... பிரச்சினை சிந்தனைகளிலில்லை. அதற்குரிய மூலோபாயத்தை வகுத்து அதனை செயற்படுத்துவதில்தான் சவால் இருக்கிறது.
லிபியாவின் எதிர்காலத்தை எப்படி காண்கிறீர்கள்நாளைய லிபியாவின் இஸ்லாத்தின் வகிபாகம் என்ன?
லிபிய மக்களின் எதிர்பார்க்கைகளின் மட்டத்தில் நின்று பார்த்தால் கிட்டிய எதிர்காலம் பிரகாசமற்றதாக இருக்கலாம். இந்நிலைமாறும் காலப்பிரிவு பாதையில் தடங்களை ஏற்படுத்தும் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கலாம். எனினும் நீண்ட காலத்தில் லிபியாவை மிகவும் நேரிடையாகவே நான் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment