Wednesday, December 7, 2011

துருக்கியுடன் உறவைப் பலப்படுத்த எகிப்திய ஸலபித் தலைவர் விருப்பம் கலாச்சார சுற்றுலாத்துறைக்கு ஆதரவு


புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 10:42
வாசிப்புக்கள்: 108
பகுதி: செய்திகள் - 
உலக செய்திகள்

  • PDF
misir-salafiஎகிப்திய தேர்தலில் இரண்டாவது நிலையில் இருக்கும் ஸலபி போக்குள்ள அந்நூர் கட்சியின் தலைவர் கலாநிதி இமாதுத்தீன் அப்துல் கபூர், துருக்கியுடனான உறவை பலப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
துருக்கிக்கும் எகிப்துக்கும் இடையில் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன எனவும், இருநாட்டு மக்களிடையே அன்புணர்வும் நட்பும் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அனுபவங்களிலிருந்து தாம் பயன்பெற முடியும் எனவும் அவர் ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின்போது குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தினது பொருளாதார, அரசியல், சமூக ரீதியான பலமான வளர்ச்சி மூலம் இஸ்ரேலின் பிராந்திய நிலையைப் பலவீனப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘நாம் சுற்றுலாத்துறைக்கு எதிரானவர்கள் அல்ல. கலாச்சார சுற்றுலாத்துறையையே ஆதரிக்கிறோம். அதனையே நாம் தூண்டவேண்டும்‘‘ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment