Monday, December 19, 2011

ஹமாஸ் - இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் பூர்த்தி


event





கடந்த ஒக்டோபரில் ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி பலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது என ஹமாஸின் அரசியல் பீட உறுப்பினரான ஸாலிஹ் அல் ஆரூரி தெரிவித்துள்ளார்.
கெய்ரோவில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியே கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான இறுதி தினமாகும் எனத் தெரிவித்திருக்கும் ஸாலிஹ் அல் ஆரூரி அதற்கு முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலிய படைவீரர் கிலாட் ஷாலிட்டுக்குப் பதிலாக 1027 பலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் உடன்பட்டிருந்தது. இதற்கமைய இஸ்ரேலிய சிரைகளில் இருந்து முதற்தொகுதியாக 447 கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். தற்போது விடுவிக்கப்படவுள்ள இரண்டாவது தொகுதியில் 550 பலஸ்தீனக் கைதிகள் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி http://meelparvai.net

No comments:

Post a Comment