Sunday, March 11, 2012

கோலாக்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம்!

Laboratory experiments showed that 4-MI and a chemical cousin called 2-MI, both of which Coke and Pepsi use to produce their classic caramel colour, were found to be carcinogenic in animal studies.
புதுடெல்லி:புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளை அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கோலாக்களில் கலந்திருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் சந்தையில் அளிக்கப்படும் கோலாக்களின் சேர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவர பெப்ஸியும், கோக்கோ கோலாவும் தீர்மானித்துள்ளன. ஆனால் இக்கம்பெனிகள் இந்தியாவில் சேர்மானங்களின் மாற்றத்திற்கு தயாராகுமா என்பது கேள்விக்குறியாகும்.

Saturday, March 10, 2012

தொகாடியாவின் முஸ்லிம் எதிர்ப்பு உரை: கஷ்மீரில் மோதல், ஊரடங்கு உத்தரவு!

Pravin Togadia
ஸ்ரீநகர்:கஷ்மீரில் எல்லை மாவட்டமான ரஜவ்ரியில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியாவின் விஷம் கக்கும் உரையால் கலவர சூழல் உருவாகியுள்ளது.
வி.ஹெச்.பி ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட தொகாடியா, தனது உரையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் உருவானது. பின்னர் பலரை போலீஸார் கைது செய்தனர். தொகாடியாவின் மீது 153.A பிரிவின் படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய உளவுத்துறை அதிகாரி!


10 Mar 2012

புதுடெல்லி:பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியின் கைதை கண்டித்து டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் உளவுத்துறை அதிகாரியை பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இஸ்ரேல் உறவை இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும் – மணிசங்கர் அய்யர்!

Mani Sankar Aiyar
புதுடெல்லி:இஸ்ரேலுடன் ஏற்படுத்தியுள்ள தூதரக உறவை இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்காட் காந்தி சமாதியில் ‘ஜெருசலத்தை நோக்கிய சர்வதேச பேரணி’யில் கலந்துகொள்வதற்காக லெபனான் தலைநகர் பெய்ரூத்திற்கு செல்லும் இந்திய குழுவினர் மத்தியில் உரை நிகழ்த்தினார் மணி சங்கர் அய்யர்.

உ.பி.மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் தேர்வு!

State president of the Samajwadi Party, Akhilesh
லக்னோ:முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக சமாஜ்வாதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் தேர்வுச் செய்துள்ளது.
அகிலேஷின் பெயரை அவர் முதல்வராக தேர்வுச் செய்யப்படுவதை துவக்கத்தில் எதிர்த்ததாக கூறப்படும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸம்கான் முன்மொழிந்தார். அதனை இதர உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

கஸ்மிக்காக போராடுவோம்: டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன்!

Shauzab and Turab (black shirt) sons of arrested journalist Muhammad Ahmad Kazmi, consoling each other at a press conference along with other senior journalists.
Photo By: Parveen Negi
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது இஃப்திகார் கிலானிக்கு மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமான வழக்காகும் என்றும், சில தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் போலீஸ் கஸ்மியை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் தலைமையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

ஹிந்துத்துவா தீவிரவாதம், பொறுப்பற்ற ஊடகங்கள்: இந்தியாவின் சூப்பர் பவர் கனவு அம்பேல்! ஆய்வில் தகவல்!

India is not a superpower (and may never be) concludes new LSE study
லண்டன்:உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.

Friday, March 9, 2012

இஸ்லாத்திற்கு எதிரான் அவதூறு செய்தி




இஸ்லாத்திற்கு எதிரான் அவதூறு செய்தி 
சொன்ன தோப்பில் முஹம்மது மீரான் 

அவதூறுக்கு  மறுப்பு தெரிவிக்க கேட்டுகொள்கின்றது

உங்கள் புதியவானம்   

Thursday, March 8, 2012

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை!

IMI one of six firms blacklisted by India
டெல்லி:இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal  military  industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் இந்தியா இந்த முடிவினை எடுத்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் வெற்றியின் பின்னணி முஸ்லிம்கள்- மாயாவதி!


Swing of Muslim votes did us in - Mayawati

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு(எஸ்.பி) கிடைத்தததுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி கூறியுள்ளார்.

பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்று இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது – சி.பி.எம்

cpm
புதுடெல்லி:5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாரதீய ஜனதா ஆகமுடியாது என்பது நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ(அரசியல் விவகார குழு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஆஃப்கானில் குண்டுவெடிப்பு:ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பலி!

6 British Soldiers Are Killed in Afghanistan

ஹெல்மந்த்:தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் சாலை அருகே குண்டுவெடித்து ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Wednesday, March 7, 2012

அயோத்தியில் தோற்ற பாஜக !


 அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்னையை வைத்து பாஜக அரசியல் செய்த காலத்திலிருந்தே அயோத்தி பாஜகவின் கோட்டையாக இருந்தது. 1991ல் இருந்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிஜேபியின் லல்லு சிங் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் இளம் மாணவ தலைவரான தேஜ் நாராயண்

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உ.பி. மக்களுக்கு அகிலேஷ் உறுதி

 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவரும், முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் உறுதி கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பர்தா அணிந்து செல்பவர்களை அடையாளம் காண புது சட்டம் அமல்.


 

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பர்தா, ஹெல்மட் அணிந்து செல்பவர்களின் முகத்தை அடையாளம் காண போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சட்டம் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து
செல்கின்றனர். இதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறி வந்தனர்.

இதையடுத்து, பர்தா அணிந்து செல்பவர்கள், ஹெல்மட் அணிந்து செல்பவர்கள் யார் என்று அடையாளம் காண நீதித்துறை மற்றும் போலீசாருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த டிசம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அயோத்தியில் தோற்ற பாஜக, அமேதியில் தோற்ற காங்கிரஸ்





அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல்!




முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல்!லக்னோ: இப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு எதிரான கட்சியான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடும் என முஸ்லிம்கள் பயந்து  முலயாம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று உத்தரப்பிரதேசத்தில் பதவி விலகும் முதல்வரான  மாயாவதி கூறியுள்ளார்.

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு (பா.ஜ.க.) கொண்டாட்டம்!




உத்தர பிரதேசத்தில் 47 இடங்களில் பா.ஜ.க, எப்படி வெற்றி பெற்றது என்பதை "மறுப்பு" தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

உ.பி தேர்தல் : முஸ்லிம் பகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க.


 உத்தர பிரதேசத்தில் காங்கிரசும் பா.ஜ.க.வும், துடைத்தெரியப்பட்டுள்ளது.  என்றாலும், பா.ஜ.க, பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.
100 க்கும் அதிகமான தொகுதிகளில், 2,200 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ், தான் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில், கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில், உ.பி. யில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளில், பாதி அளவு வாக்குகள் கூட பா.ஜ.க. பெற வில்லை. (முழுத்தகவல்களுக்கு http://eciresults.nic.in/Constituencywises0510.htm  பார்த்துக்கொள்ளவும்) ஆனால், முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில், எல்லா கட்சிகளிலும், முஸ்லிம்களையே நிறுத்தியிருந்த இடங்களில் மட்டும் தான், பா.ஜ.க, வெற்றி பெற்றுள்ளது. 

உஸாமாவின் உடல் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது – விக்கிலீக்ஸ்

WikiLeaks Scoop About Bin Laden's Body Is Awfully Thin
லண்டன்:அல்காயிதா தலைவர் உஸாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று விக்கிலீக்ஸின் தகவல் கூறுகிறது.

மேற்கு கரையில் ரெயில் பாதை நிர்மாணிக்கும் இஸ்ரேல்!

Israel seeks to build new rail network in West Bank
டெல்அவீவ்:ஃபலஸ்தீன் பிரதேசங்களில் ஆக்கிரமித்து யூத குடியிருப்புகளை கட்டி வரும் இஸ்ரேல் அதனை தீவிரப்படுத்தும் நோக்கில் மேற்கு கரையில் ரெயில்வே பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளது. 475 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு கரையை முழுவதும் உட்படுத்தும் விதமாக ரெயில்வே பாதையை அமைக்க இஸ்ரேல் போக்குவரத்து துறை அமைச்சர் டிஸ்ராயேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.

அணுசக்தி நிலையங்களில் பரிசோதனை நடத்தலாம் – ஈரான் அறிவிப்பு!


Iran Offers To Resume Nuclear Talks, Allow Inspectors Into Military Site
டெஹ்ரான்:நாட்டின் முக்கிய ராணுவ மையமான பார்ஷின் ராணுவ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட முக்கிய மையங்களில் சோதனை நடத்த சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கு(ஐ.எ.இ.எ) அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஐ.எ.இ.எயில் ஈரான் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானியாவை மேற்கோள்காட்டி ஈரான் செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக 2 தடவை ஐ.எ.இ.எ பிரதிநிதிக்குழு ஈரானுக்கு வருகை தந்த போதிலும் அணுசக்தி நிலையங்களை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈரானின் முக்கிய ஆயுத தயாரிப்பு மையம் இயங்குவது பார்ஸின் ராணுவ காம்பளக்ஸில் ஆகும். அதேவேளையில் சொன்னதையே திரும்ப சொல்வதாக ஐ.எ.இ.எ தலைவர் யூகியோ அமானோவின் மீது ஈரானின் ஐ.எ.இ.எ பிரதிநிதி குற்றம் சாட்டினார்.
அமானோ நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி சுல்தானியா அமானோவை விமர்சித்தார்.
நன்றி தூது ஆன்லைன் 

UP வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் Seventy Muslims were declared winner in the UP 2012 Assembly elections. In 2007 there were 56 Muslim winners.

No.Name of winnersPartyConstituencyWinning Margin













.
1ZAFAR AALAMSamajwadi PartyAligarh23086
.
2HAJI PARVEJ AHMAD (TANKI)Samajwadi PartyAllahabad South414
.
3MEHBOOB ALISamajwadi PartyAmroha21805
.
4ABID RAZA KHANSamajwadi PartyBadaun15413
.
5ATAURREHMANSamajwadi PartyBaheri18
.
6DR. WAQAR AHMAD SHAHSamajwadi PartyBahraich15496
.
7BADLU KHANSamajwadi PartyBangermau6795
.
8MOHD.GHAZIBahujan Samaj PartyBarhapur27375
.
9JAHID BEGSamajwadi PartyBhadohi16241
.
10SHAZIL ISLAMIttehad-E-Millat CouncilBhojipura17948
.
11JAMALUDDIN SIDDIQUISamajwadi PartyBhojpur18629
.
12MHD.IRFANSamajwadi PartyBilari1540
.
13MUSARRAT ALI Bahujan Samaj PartyBilsi8328
.
14NAWAZISH ALAM KHANSamajwadi PartyBudhana10588
.
15MOHD. ALEEM KHANBahujan Samaj PartyBulandshahr6947
.
16MOHD ASHIF JAFRIBahujan Samaj PartyChail1290
.
17ALI YUSUF ALIBahujan Samaj PartyChamraua1846
.
18IQBALBahujan Samaj PartyChandpur15013
.
19NOOR SALEEM RANABahujan Samaj PartyCharthawal12706
.
20ADIL SHEIKHSamajwadi PartyDidarganj2227
.
21KAMAL YUSUF MALIKPeace PartyDoomariyaganj1589
.
22SYED QASIM HASANSamajwadi PartyFatehpur3786
.
23WASEEM AHMADSamajwadi PartyGopalpur30134
.
24KAMAL AKHTARSamajwadi PartyHasanpur32228
.
25MO. ASIFBahujan Samaj PartyHusainganj2851
.
26ABRAR AHMADSamajwadi PartyIsauli13941
.
27NADEEM JAVEDIndian National CongressJaunpur1239
.
28ANEESURREHMANPeace PartyKanth1534
.
29DR. MOH. AYUBPeace PartyKhalilabad5392
.
30SHAHID MANZOORSamajwadi PartyKithore11106
.
31ZAMEER ULLAH KHANSamajwadi PartyKoil599
.
32MOHAMMAD RIZWANSamajwadi PartyKundarki17201
.
33FAREED MAHFOOJ KIDWAISamajwadi PartyKursi23937
.
34MO. JASMIR ANSARIBahujan Samaj PartyLaharpur17672
.
35ZAKIR ALIBahujan Samaj PartyLoni25248
.
36MOHD REHANSamajwadi PartyLucknow West7812
.
37YASAR SHAHSamajwadi PartyMatera2801
.
38MUKHTAR ANSARIQuami Ekta DalMau5904
.
39JAMIL AHMAD QASMIBahujan Samaj PartyMeerapur12733
.
40SULTAN BAIGBahujan Samaj PartyMeerganj7921
.
41SIBGATULLA ANSARIQuami Ekta DalMohammadabad7333
.
42MOHAMMAD YUSUF ANSARISamajwadi PartyMoradabad Nagar20238
.
43SHAMEEMUL HAQSamajwadi PartyMoradabad Rural22736
.
44SHAH ALAM URFA GUDDU JAMALIBahujan Samaj PartyMubarakpur8566
.
45BABBANBahujan Samaj PartyMughalsarai15440
.
46WAHABBahujan Samaj PartyMuradnagar3622
.
47TASLEEMBahujan Samaj PartyNajibabad11583
.
48ASHFAQ ALI KHANSamajwadi PartyNaugawan Sadat3662
.
49ALAMBADISamajwadi PartyNizamabad23843
.
50SHAKIR ALISamajwadi PartyPathardeva4554
.
51NAJEEVA KHAN ZEENATSamajwadi PartyPatiyali27775
.
52ANSAR AHMADSamajwadi PartyPhaphamau5296
.
53SAYEED AHAMADSamajwadi PartyPhulpur7900
.
54RIAZ AHMADSamajwadi PartyPilibhit4235
.
55MOHAMMAD AZAM KHANSamajwadi PartyRampur63269
.
56CHOUDHARI FASIHA BASHIR ALIAS GAJALA LARISamajwadi PartyRampur Karkhana7147
.
57IQBAL MEHMOODSamajwadi PartySambhal30047
.
58BABU KHANSamajwadi PartyShahabad11134
.
59MUHAMMAD RAMJANSamajwadi PartyShrawasti11205
.
60JIAUDDIN RIJVISamajwadi PartySikanderpur28531
.
61HAJI IRFAN SOLANKISamajwadi PartySishamau19663
.
62GHULAM MOHAMMEDSamajwadi PartySiwalkhas3587
.
63NAWAB KAZIM ALI KHAN URF NAVED MIANIndian National CongressSuar13715
.
64DILNAWAZ KHANIndian National CongressSyana1664
.
65AZIMULHAQUE PAHLWANSamajwadi PartyTanda27521
.
66DR. MOHD. MUSLIMIndian National CongressTiloi2710
.
67ABDUL MASHHOOD KHANSamajwadi PartyTulsipur33710
.
68ARIF ANWAR HASHMISamajwadi PartyUtraula1005
.
69SYEDA SHADAB FATIMASamajwadi PartyZahoorabad10478




 

Tuesday, March 6, 2012

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது

Posted on March 5, 2012 by
 

“அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்” என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ”ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம்

மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!


zakia jafri
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.

கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்!

நாட்டுவெடிகுண்டு வெடிப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை அருகில் திடீரென குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

‘பலான’ தொழிலை கைவிட்டு சமூக திருமணத்திற்கு தயாராகும் கிராம மக்கள்!


Mass marriage in Vadia village
அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் வாதியா கிராமம் புதியதொரு சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. குடும்பத்தின் பசியை போக்க விபச்சாரத்தை பரம்பரை தொழிலாக மாற்றிய இக்கிராமத்தின் ஸராணியா பிரிவினருக்கு இம்மாதம் 11-ஆம் தேதி சமூக திருமணத்தை நடத்த தன்னார்வ தொண்டர்கள் தயாராகி வருகின்றார்கள்.

ரைபூரில் பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

ரைபூர்:சத்தீஷ்கர் மாநிலம் ரைபூரில் சரஸ்வதி நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதில் ரவி திருப்தி என்பவரின்  போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான  கிடங்கில் சோதனை செய்த போது, அங்கு பயங்கரமான, சக்திவாய்ந்த ஆயுதங்கள் தயாரிக்க உதவும் பொருட்கள் உள்ள 75 பெட்டிகள் பிடிபட்டன.

எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!


எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!

பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கூடங்குளம்:பிரதமருக்கு அறிவு ஜீவிகள் கண்டனம்!



6
புதுடெல்லி:கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துக்களுக்கு இந்தியாவின் முக்கிய அறிவு ஜீவிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘கூடங்குளம் சலோ’ பேரணி: தேசிய அணு உலை எதிர்ப்பாளர்கள் பங்கேற்பு!

கூடங்குளம் சலோ
புதுடெல்லி/கோவை:கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வருகிற 15-ஆம் தேதி கூடங்குளம் நோக்கி பேரணி நடத்துகின்றனர்.

உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காவும், இஸ்ரேலும்: நோம் சோம்ஸ்கி!

noam chomsky



வாஷிங்டன்:உலகை அமைதிக்கு உண்மையில் அச்சுறுத்தலாக திகழ்வது அமெரிக்காவும், இஸ்ரேலும் என்று சர்வதேச சமூகம் நம்புவதாக பிரபல அமெரிக்க சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் உலகம் முழுவதும் பரப்புரைச் செய்தாலும் மக்கள் அதனை நம்பவில்லை என்று சோம்ஸ்கி கூறுகிறார்.

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!


 
  தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.


ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.


அபுல்கலாம் கூடங்குளம் மக்களுக்கு 500 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, அடுக்குமாடி பசுமை வீடுகள், இன்டர்நெட்டு, பிராடு பேண்டு என்று தேர்தல் வாக்குறுதியை விட கேவலமாக வாக்குறுதிகளை அள்ளி விசினார். ஆனால் இதையெல்லாம்  ஏனோ போபாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஜனாதிபதியாக இருந்தும்  வழங்கவில்லை.  அணு குண்டையும் அதே நேரம் குழந்தைகளையும் நேசிக்கும் ஒரே அதிசய விஞ்சானியின் தம்பிகளாக காயல்பட்டினம் மக்களில் சிலர் மாறி கூடங்குளம் அணு உலை வேண்டும் என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.


கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம்  முஸ்லிம் லீக் கட்சி ( இவர்கள்தான் நாக்பூரில் பிஜேபிக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவு கொடுத்தவர்கள்)  கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்,  குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இதில் பிஜேபியும் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் வருகிற மார்ச் 6  தேதி நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


தமிழக அளவில் உள்ள எந்த கட்சிகளோ, அமைப்புகளோ இந்த ஊரில் மட்டும் தங்களது வீரியத்தை இழந்து விடும் ஒரு அவல நிலைமை தற்போது நிலவி வருகிறது. மாநில அளவிலான மனித நீதி மக்கள் கட்சி, மத்திய அளவிலான SDPI கட்சி, போன்றவற்றின் தலைவர்களும், முக்கிய பொறுப்பாளிகளும் அணு உலை என்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளனர்.  SDPI கட்சியின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். தங்கள் கட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடர்ந்து  கடுமையாக எதிர்க்கும் என்று பல கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.


அதுபோல் மனித நீதி கட்சியின் தலைவரும் ராமநாதபுர எம்.எல்.எ. வுமான ஜாவாஹிருல்லா கூடங்குளம் அணு உலை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் கூடங்குளம் உண்ணாவிரத போராட்ட பந்தலிலேயே பேசினார். மேலும் அதனை தங்களது கட்சியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் கடுமையாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தார். நிலைமை இப்படி இருக்க காயல்பாடினத்தை சார்ந்த இந்த கட்சிகளின் கிளைகள் மட்டும் தலைமையின் கருத்து மாறுபட்டு தங்கள் ஊர் என்கிற ஒரு குறுகிய மாயையில் அணு உலையை திறக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். ஹிந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் முஸ்லிம் லீக்குக்கு இவர்கள் துணை போயி இருக்கிறார்கள்.


இதுபோல் இவர்கள் செய்யும் காரியம்  காயல்பட்டினத்து மொத்த மக்களையும் சுயநலம் கொண்டவர்களாக உலகுக்கு காட்டும் ஒரு விசயமாகும்.  இந்த கட்சிகள், சங்கங்கள் இந்த  நாசகார அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதை ஆதரித்து குரல் எழுப்புவதே இங்கு கண்டனத்துக்கு உரியது. இதே காயல்பட்டினம் மக்கள்தான் dcw என்கிற தாரங்கதார கெமிக்கல் வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தை கடுமையாக் எதிர்த்தார்கள். இதனால் தங்கள் ஊருக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொல்லி  உலகம் முழுவதும் வாழும் காயல்பட்டினம் மக்களை கொண்டு அங்குள்ள இந்திய தூதரகங்களில் மனுக்களை கொடுக்க செய்தார்கள்.


இச்செயலை  நாமும் வரவேற்கிறோம். ஆனால் அதை விட மோசமான ஒன்றுதான் அணு உலை. மேலும் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு வசூலுக்காக வந்த போது ஓடக்கரை ஹிந்து முன்னணியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாரன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த ஓடக்கரை சுகுதான் காயால்பட்டினத்து மக்களுக்கு பல வழிகளில் கேடுகளையும், துயரங்களையும் ஏற்படுத்தியவர். பல சமயங்களில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  காயல்பட்டினத்தில் மதகலவரம் உண்டாக்கியவர் என்று நம்பாபடுபவர். இப்படி இருக்க வசூலுக்கு வந்த அப்பாவி கூடங்குளம் மக்களை இந்த சுகு தாக்கும்போது காயல்பட்டினம் மக்களில் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர்.


நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக நாசகார திட்டம் என்று தெளிவாக தெரிந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா? இதை நியாய உள்ளம் கொண்ட காயல்பட்டினம் மக்கள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட வேண்டும். மனித நீதி மக்கள் கட்சி, மற்றும் SDPI  போன்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் உடனே சம்மந்தபட்ட காயல்பட்டின கிளை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது அணு உலைக்கு எதிரான போராட்டங்களை காயல்பட்டினத்தில் தெரு முனை பிரச்சாரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் முடுக்கிவிடப்பட வேண்டும். நல்ல விசயங்களுக்கு முன்னோடிகளாக திகழும் காயல்பட்டினம் மக்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம்.
 
 நன்றி புதிய தூது

சிரியா:சுதந்திர தேசத்திற்காக உயிரை தியாகம் செய்யும் பாலகர்கள்!

Four children killed in Syrian shelling
டமாஸ்கஸ்:குழந்தை பருவம் – விளையாடவும், சிரிக்கவும், சித்திரங்களை வரைக்கவும் அன்னையரின் மடியில் கிடந்து கதைகளை கேட்பதற்குமான பருவம். ஆனால், சிரியாவில் குழந்தைகளின் நிலைமையோ முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

துருக்கி பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு!

 

Forensic police officers inspect the scene of an explosion

அங்காரா:துருக்கி பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

Monday, March 5, 2012

புனித திருக்குர் ஆன் பிரதி எரிப்பு:அமெரிக்க ராணுவ வீரர்கள் குற்றவாளிகள்! – விசாரணை அறிக்கை!

agreed to have the soldiers who burned copies of the Quran face trial
காபூல்:ஆஃப்கானில் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய நேட்டோ கமிஷன் பல  அமெரிக்க வீரர்களுக்கு பங்கிருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. இத்தகைய வெறித்தனமான செயலை புரிந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
விசாரணை அறிக்கையில் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்று ஆஃப்கானிஸ்தான் உயர் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஜான் அலன் கூறியுள்ளார்.
ஆறு அமெரிக்க ராணுவத்தினருக்கும், ஒரு ஆஃப்கான் குடிமகனுக்கும் சம்பவத்தில் பங்கிருப்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று எ.எஃப்.பி கூறுகிறது.
பக்ராம் ராணுவ தளத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினர் புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்தனர். சம்பவத்தை தொடர்ந்து ஆஃப்கானில் ஏற்பட்ட மக்களின் கொந்தளிப்பில் 6 அமெரிக்க ராணுவத்தினர் உள்பட 40 பேர் கொல்லப்பட்டனர். ஆஃப்கானில் கிளம்பிய கடும் எதிர்ப்பை தொடர்ந்து உயர் அதிகாரிகளை ஆஃப்கானில் இருந்து நேட்டோ வாபஸ் பெற்றது.
உலகம் முழுவதும் முஸ்லிம்களின் உணர்வுகளை கடுமையாக காயப்படுத்திய இந்த வெறித்தனமான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கோரினார்.
நன்றி தூது ஆன்லைன் 

தடை தோல்வியை தழுவினால் ஈரானை தாக்குவோம்! – ஒபாமா மிரட்டல்!

தடை தோல்வியை தழுவினால் ஈரானை தாக்குவோம்!-ஒபாமா மிரட்டல்!
வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை தோல்வியை தழுவினால் அவர்களின் அணுசக்தி நிலையங்களை தாக்க உத்தரவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மிரட்டல் விடுத்துள்ளார்.
அட்லாண்டிக் மேகஸினுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா ஈரானை மிரட்டியுள்ளார்.
“நான் வீம்பாக இதனை கூறவில்லை” என்று தெரிவித்த ஒபாமா, ஈரானை இஸ்ரேல் அவசரப்பட்டு தாக்க கூடாது என்றும் கூறினார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்பது அமெரிக்காவின் உறுதியான கருத்தாகும். ஈரான் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு. அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானை உடனடியாக தாக்குவது அவர்களுக்கு அனுதாபத்தை பெற்றுத் தந்துவிடும் என்பதால் இஸ்ரேல் இத்தகையதொரு அவசர முடிவை எடுக்க கூடாது. இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

லிபியாவில் இஃவான்களின் அரசியல் கட்சி உதயம்!


Muslim Brotherhood forms political party in Libya



திரிபோலி:60 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் நோக்கம் நாட்டின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அய்ர் தெரிவித்துள்ளார்.

கட்சி பிரகடனத்திற்காக திரிபோலியில் நடந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1400க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். 18 நகரங்களில் கட்சி செயல்படுவதாக அய்ர் கூறினார்.

முஅம்மர் கத்தாஃபியை ஆட்சியில் இருந்து வெளியேற்றிய உள்நாட்டுப் போரில் அதிக இழப்புகளை சந்தித்த மிஸ்ரத்தாவைச் சார்ந்த முஹம்மது ஸொவான் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2006-ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் கத்தாஃபியால் சிறையில் அடைக்கப்பட்ட ஸொவான் ஒரு ஹோட்டலின் மேனேஜராக பணியாற்றுகிறார்.

1949-ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் லிபியாவில் செயல்பட்ட போதிலும் கத்தாஃபியின் அரசு அவ்வியக்கத்தின் தலைவர்களை சிறையில் அடைக்கவோ, கொலைச் செய்யவோ, நாடுகடத்தவோ செய்துள்ளது. கத்தாஃபிக்கு எதிராக போராடிய ஏராளமான எதிர்ப்பாளர்களின் தலைவர்களுடைய ஆசிர்வாதத்துடன் இக்கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் இடைக்கால ஆட்சியை நிர்வகிக்கும் என்.டி.சியை சார்ந்த எவரும் இக்கட்சியில் இல்லை.

கத்தாஃபி யுகத்திற்கு பிறகு அமைப்பின் ஏராளமான தலைவர்கள் லிபியாவுக்கு திரும்பியுள்ளது அதன் உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. போரால் சீர்குலைந்துள்ள லிபியாவில் உதவிகள் மற்றும் சமூக சேவைகளில் இஃவானுல் முஸ்லிமீன் கவனம் செலுத்தி வருகிறது.

இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையிலான நீதியும், வளர்ச்சியும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதுதான் கட்சியின் செயல் திட்டங்களில் ஒன்று என அய்ர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை!

britain






லண்டன்:மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் 2030-ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் கிறிஸ்தவ நாடு என்ற பதவியை இழந்துவிடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் வெளியேறுகின்றனர். அதேவேளையில் மதத்தை மறுப்பவர்கள், மதசார்பற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. இவ்வறிக்கையை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டில் மதசார்பற்றவர்கள் கிறிஸ்தவர்களை விட அதிகமாக மாறுவார்கள் என்று லேபர் ஃபோர்ஸ் சர்வே கூறுகிறது.
அதேவேளையில் கிறிஸ்தவம் தளர்ச்சியை சந்தித்த போதும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள், புத்த மதத்தினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 26 லட்சமாக மாறியுள்ளது. ஹிந்துக்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்து ஏழு லட்சத்து 90 ஆயிரமாக மாறியுள்ளது. பெளத்தர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்து 2 லட்சத்து எழுபது ஆயிரமாக மாறியுள்ளது.பிரிட்டனில் 2010-ஆம் ஆண்டு 4.11 கோடி கிறிஸ்தவர்கள் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இக்கால கட்டத்தில் மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்து 1.34 கோடி அதிகமாகி உள்ளது.

ஈரானிய பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் தோல்வி

iran electionஈரானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனியின் ஆதரவாளர்கள் தான் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் ஜனாதிபதி அஹமத் நஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் மதத் தலைவர் கொமைனி.

ஈரானில் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் உள்நாட்டு பொருளாதார விவகாரங்களை மட்டுமே கண்காணிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய விவகாரங்கள் கொமைனியின் கட்டுப்பாட்டில் ஆன்மீக குழுவிடமே உள்ளன.

இதன் படி இத்தேர்தலில் அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் 25 சதவீதத்தினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அஹமத் நஜாதின் சகோதரி பர்வீன் கூட தோற்கடிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் கொமைனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் கொமைனியை மீறி முக்கிய கொள்கைகள் முடிவுகள், திருத்தங்கள் எதையும் அஹமத் நஜாதால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அஹமத் நஜாத் வெல்வது கஷ்டம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2008
ஆம் ஆண்டு தேர்தலில் கொமைனி மற்றும் அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் கூட்டாகவே தேர்தலில் போட்டியிட்டதால் பெரும் வெற்றியை பெற்றனர்.

ஆனால், தற்போது கொமைனியின் ஆன்மீக கருத்துக்களை எதிர்த்து அகமத் நிஜாத் செயல்படுகின்றார் என்றும், நாட்டில் சில முக்கிய அரசியல் திருத்தங்களைக் கொண்டு வரவும், அரசியலையும் மதத்தையும் பிரித்து வைக்க விரும்புகிறார்.

அஹமத் நிஜாத்தின் இச்செயற்பாடு தங்களது ஆன்மீக செயற்பாட்டுக்கு விடுக்கப்படுகின்ற சவாலாக கொமைனி மற்றும் ஈரானிய ஆன்மீகத் தலைவர்கள் கருதுகின்றனர். ஆகையினால், இம்முறை நடைபெற்ற தேர்தலில் அஹமத் நஜாத் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களைக் கோரினர். அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

அணு ஆயுதம் தொடர்பாக
அமெரிக்கா, இஸ்ரேல் அணு ஆயுத விவகாரங்களில் கொமைனிக்கும் அஹமத் நஜாதுக்கும் இடையே ஒரே நிலைப்பாடு தான் உள்ளது. இதனால், இத்தேர்தல் முடிவுகளால் அணு ஆயுத விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் பாராளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், அடுத்த ஓராண்டுக்கு அஹமத் நஜாத் அதிகாரம் குறைக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியாகவே பதவியில் நீடிப்பார்.

இத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களான மிர்ஹோசைன் மெளசாவி, மெஹ்தி கரெளவ்பி ஆகியோரின் கட்சிகள் போட்டியிடவில்லை. இவர்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அஹமத் நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்டமையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்
ஈரானில் நடைபெற்ற பாராளுமன்றத் (மஜ்லிஸ்) தேர்தல், எவ்வித பிரச்சினைகளும் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 290 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஈரானின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4.8 கோடியாகும்.

வாக்குகளை பெற காந்தியின் பெயரை பயன்படுத்தும் ஒபாமா!

Obama invokes Gandhi, Mandela in support for second term
வாஷிங்டன்:அதிபர் தேர்தலில் 2-வது தடவையாகவும் போட்டியிடவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கடும் சவாலை எதிர்கொள்ள காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் பெயரை உபயோகிக்க துவங்கியுள்ளார்.

Saturday, March 3, 2012

கடன் வாங்கிய 300 ரூபாயை திரும்ப கொடுக்காததால் கையை வெட்டிய கொடூரம்!

Bihar youth's hands chopped off for Rs 300
பாட்னா:கடனாக வாங்கிய 300 ரூபாயை திரும்ப அளிக்காததால் இளைஞர் ஒருவரின் கையை வெட்டிய கொடுமையான சம்பவம் பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.
தினக்கூலியாக வேலை பார்க்கும் 20 வயதான ராம்ஸாகர் சந்திரவன்ஷிக்கு தனது காண்ட்ராக்டரிடமிருந்து இந்த துயரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
காண்ட்ராக்டரிடமிருந்து ராம்ஸாகர் ரூ.300 கடனாக வாங்கியிருந்தார். இந்த பணத்தை திரும்ப அடைக்காததால் ராம்ஸாகரிடம் காண்ட்ராக்டர் கூலி இல்லாமல் வேலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் ராம்ஸாகர் அதற்கு மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு கும்பல் ஆட்கள் ராம் ஸாகரை தாக்கி, அவரது கையை வெட்டி எடுத்துள்ளனர். தாக்குதலில் 2-வது கையும் காயமடைந்துள்ளது.
எவ்வித தயவு, தாட்சணியமுமின்றி கும்பல் தன்னை தாக்கியதாக ராம்ஸாகர் கூறுகிறார். தற்போது பாட்னா மருத்துவக்கல்லூரியில் சிகிட்சைப் பெற்று வருகிறார் ராம்ஸாகர். இச்சம்பவம் இட்டுக்கட்டப்பட்டது என்று கூறி போலீசார் ஆரம்பத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்ய தயங்கியதாக ராம்ஸாகர் கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன்