உத்தர பிரதேசத்தில் காங்கிரசும் பா.ஜ.க.வும், துடைத்தெரியப்பட்டுள்ளது.
என்றாலும், பா.ஜ.க, பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.
100 க்கும் அதிகமான தொகுதிகளில், 2,200 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே
பெற்றுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ், தான் போட்டியிட்ட பெரும்பாலான
தொகுதிகளில், கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில், உ.பி. யில்
காங்கிரஸ் பெற்ற வாக்குகளில், பாதி அளவு வாக்குகள் கூட பா.ஜ.க. பெற வில்லை.
(முழுத்தகவல்களுக்கு http://eciresults.nic.in/Constituencywises0510.htm
பார்த்துக்கொள்ளவும்) ஆனால், முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில், எல்லா
கட்சிகளிலும், முஸ்லிம்களையே நிறுத்தியிருந்த இடங்களில் மட்டும் தான்,
பா.ஜ.க, வெற்றி பெற்றுள்ளது.
உதாரணத்திற்கு, 2 தொகுதி நிலவரம் மட்டும்
இங்கு தரப்படுகிறது. மீரட் :-
லக்ஷ்மி காந்த். (பா.ஜ.க.) 68,068 ரபீக் அன்சாரி. (SP)
61,862 யூசுப் குறைஷி. (காங்) 31,862 சலீம் அன்சாரி. (BSP)
13,159. தெற்கு மீரட் :- ரவீந்தர். (பா.ஜ.க.) 71,512 ராஷித் அகலாக். (BSP) 61,762 ஹாஜி ஆதில். (SP) 49,089 மன்சூர் சைபீ. (காங்) 25,139 குறிப்பு:-
ஒட்டு மொத்தமாக பார்க்கையில், முஸ்லிம்கள் மிகவும் விவேகத்துடன் செயல்
பட்டு, முலாயம் சிங்கை வெற்றி பெற வைத்துள்ளனர். ஆட்சியாளராக செயல் பட
வேண்டிய காங்கிரஸ் கட்சி, பார்வையாளராக மட்டுமே செயல் பட்டு, குஜராத்
உள்ளிட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை தடுக்க வில்லை, என்பது முஸ்லிம்களின்
ஆதங்கம். இட ஒதுக்கீட்டில் கூட, முஸ்லிம்களுக்கு திருப்தி இல்லை. இது
போன்ற பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு, முஸ்லிம்கள் காங்கிரசுக்கு
வாக்களிக்க வில்லை. ஒரு வேலை முஸ்லிம்கள், தங்கள் வாக்குகளை
காங்கிரசுக்கும் சமாஜ்வாடிக்கு, சம அளவில் பிரித்து போட்டிருந்தால்,
மீண்டும் பா.ஜ.க., மற்றும் பி.எஸ்.பி., கூட்டணி ஆட்சி தான் வந்திருக்கும்.
No comments:
Post a Comment