அகமதாபாத்: பிப்ரவரி 3, நரேந்திர மோடி குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அமைப்பு (எஸ்.ஐ.டி) மோடி அரசாங்கத்தை வழக்கிலிருந்து காப்பாற்ற, கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக, முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீ குமார், பகிரங்கமாக தெரிவித்துள்ளார். குஜராத்தில், கலவரம் நடந்த 2002 ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்ற, சூழ்நிலை அவசரம் கருதி ,வாய்மொழி உத்தரவும், அதை தொடர்ந்து சில நிமிடங்களில் FAX மூலம் முறையான உத்தரவுகளை பிறப்பித்தும் கூட, எனது உத்தரவுகளை CRPF கமாண்டர் செயல் படுத்த வில்லை.
கலவர பாதிப்பில் அபயம் தேடி வந்த முஸ்லிம் மக்களை காப்பாற்ற, தான் 28 /02 /2002 அன்று CRPF கமாண்டருக்கு உத்தரவிட்டதாகவும், ஆனால் அதற்க்கு முந்தய தினமான 27/02/2002 அன்று மாலை, நரேந்திர மோடி, உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில், அவர்களை காப்பாற்றக்கூடாது.
ஹிந்துக்களுக்கு, அவர்களின் கோபம் தீரும் வரை கலவரங்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டும், என்றும் கண்டிப்பான முறையில் வாய்மொழி உத்தரவு போட்டு விட்டதாக, கூட்டத்தில் கலந்துக் கொண்ட பல ஐ.பி.எஸ்.
அதிகாரிகளும் உறுதி செய்தனர். இது போன்ற முழுமையான ஆதாரங்களை திரட்டி, எஸ்.ஐ.டி, க்கு கடந்த 2008 மே மாதம் முதல் இது வரை 9 ஆவணங்களை சமர்ப்பித்தும், அவர்கள் மோடியை காப்பாற்றும் முயற்சியிலேயே தீவிரம் காட்டுகின்றனர். எந்த சக்திகள் மோடியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்கின்றன என்று எனக்கு புரியவில்லை, என்றும் முன்னாள் DGP ஸ்ரீ குமார், வேதனை தெரிவித்துள்ளார். இது வரை தனது எந்த முயற்சியின் மூலமும் நீதி கிடைக்காததால், நேரடியாக மக்கள் மன்றத்தில் முறையிட முடிவு செய்து விட்டேன். எனவே ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதால், இந்த ஆதாரங்களை மக்கள் மன்றத்திலேயே சமர்ப்பிக்கிறேன் ........சுதந்திர இந்தியாவில் முன்னாள்" DGP " க்கே இந்த நிலையா?
நன்றி மறுப்பு
No comments:
Post a Comment