Tuesday, April 3, 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம்

நிதிஷ் குமார்
பாட்னா:டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை மாநில அரசிடம் தகவல் அளிக்காமல் கைது செய்தது குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை குறித்து முதல்வர்கள் மாநாட்டில் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சேதுக் கால்வாயை முடக்கும் ஜெயாவின் பித்தலாட்டம்: கருணாநிதி கண்டனம்

p12-fea
சென்னை:2001, 2004-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறிவிட்டு, 2009-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், “இப்போது திட்டமிட்டுள்ளபடி சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்காது.” என்று கூறும் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கவின் இரட்டை வேடம் குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி:உயர் அதிகாரப் பதவிகளில் முஸ்லிம்கள் நியமனம்: பா.ஜ.க கொதிப்பு!


ஜாவேத் உஸ்மானி மற்றும் ஸஃபர்யாப் ஜீலானி








லக்னோ:கடந்த மாதம் மூத்த முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜாவேத் உஸ்மானி உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின்(BMAC) கன்வீனர் ஸஃபர்யாப் ஜீலானி உ.பி மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Monday, April 2, 2012

சீன முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்…!

சீன முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்…! உலக வரலாறை படிப்போம் சில மணித்துளிகள் செலவழித்து , உண்மையே தெரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துவோம் !! சீனாவில் இஸ்லாம் அறிமுகம் : நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால...் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மூன்றாம் கலீஃபா ஹஜ்ரத் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் அதாவது கி.பி. 650ல் இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழு சீனாவிற்கு அனுப்பப்பட்டது