Tuesday, December 11, 2012

கிளி ஜோசியத்தை பாடத்திட்டம்


இந்து முன்னணி அமைப்பின் பத்திரிக்கையான விஜயபாரதம் வார இதழில் (07.12.2012) வெளிவந்த " பாடத் திட்ட குழுக்களில் விஷமிகள்" என்ற தலையங்கம் எழுதிய நண்பருக்கு ஒரு நினைவூட்டல்......

எல்லாம் சரிதான். ஆனால் 1998 - 2004 வரை மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பா.ஜ.க. அரசாங்கம் கல்வியை காவி மயமாக்கியதையும். கிளி ஜோசியத்தை பாடத்திட்டத்தில் திணிக்க முயன்றதையும், அதேபோல் வேதக்கல்வி, ஜோதிட விஞ்ஞானம், புரோகிதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்த்ததையும் தலையங்கம் எழுதிய நண்பர் மறந்து விட்டார் போலிருக்கிறது. கண்ணை மறைக்கும் காவி நிறத்தையும் அவர் நினைவில் கொள்வது சாலப் பொருத்தமாகும்.
அன்புடன் 
வழக்கறிஞர் A. முகமது யூசுப் M.A,B.L.,
மாநில பொதுச்செயலாளர் - NCHRO

மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பு 
Email: yusuffmadurai@gmail.com

Saturday, August 11, 2012

பாக்யராஜின் பதில்களும் உமர் (ரலி) அவர்களும்






சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.


கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?


பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,



"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?"  என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"  என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த  காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.


இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்  பாக்யராஜ் அவர்கள் தான்.

அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ்  நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?



இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.



ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.



கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.



சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.

-  நன்றி வலையுகம் 

Wednesday, August 8, 2012

மேட்டுப்பாளையம் இராணுவ வாகனம் விபத்து மீட்புபணியில் பாப்புலர் ப்ரண்ட்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரவன்காட்டில் உள்ள ராணுவ மையத்தை சேர்ந்த சரவணன் -32 என்பவர் மேகாலய  மாநிலத்தில் மரணமடைந்தார் .அவரின் உடல் கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலை வாங்கி சென்ற ராணுவ வாகனம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நாலு ரோடு அருகில் இன்று மாலை ( 8 - 08 -2012 )   விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற ராணுவ வீரரும் ,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரெட்டி என்ற ராணுவ வீரரும் ,சிவிலியன் ஒருவரும் என மூன்று பேர் மரணமடைந்தனர்.



விபத்து பற்றி கேள்விப்பட்ட மேட்டுப்பாளையம் பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள் மாவட்ட தலைவர் ரசூல் தலைமையில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.கடும் மழைக்கு மத்தியில் விபத்திற்குள்ளான வாகனத்தில் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் தொணடர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன்,இறந்தவர்களின் உடலை மேட்டுப்பாளையம் மருத்துவ மனையில் இருந்து பெற்று மீண்டும் குன்னூரில் கொண்டுபோய் ஒப்படைத்தனர் .

நன்றி http://www.popularfronttn.org - அன்புடன் புதியவானம் 

Tuesday, July 24, 2012

எகிப்தின் புதிய பிரதமராக ஹிஷாம் கிந்தில் நியமனம்



mursi-pm-egypt










எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி, கலாநிதி ஹிஷாம் கிந்திலை புதிய பிரதமராக நியமித்துள்ளார். ஒப்பீட்டளவில் இளம் வயதினரான கிந்தில், கடந்த ஜூலை வரை நீர் விவகார அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

முபாறக் வீழ்த்தப்பட்டதன் பின்னர், கடந்த வருடம் ஜூலையில் இருந்து நீர் விவகார அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். ஹிஷாம் கிந்தில் அமெரிக்காவிலுள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் நீர்ப்பாசனத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக நியமிக்கப்படலாம் என பலரும் எதிர்பார்க்கப்பட்டனர். பொருளியல் துறை சார்ந்த ஒருவரை முர்ஸி பிரதமராக நியமிப்பார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இவரது பெயர் அடங்கியிருக்கவில்லை.

சமீபத்தில் அடிஸ்அபாபாவில் நடைபெற்ற ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், ஜனாதிபதி முர்ஸியுடன் கலாநிதி ஹிஷாம் கிந்திலும் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் புதிய அமைச்சரவையை அமைக்குமாறு பிரதமரை ஜனாதிபதி முர்ஸி வேண்டியுள்ளார். புதிய பிரதமர் நியமனம் சில வாரங்களாக தாமதமடைந்திருந்தது.
இஹ்வான் அல்லாத ஒருவரை பிரதமராக நியமிக்கவுள்ளதாக முர்ஸி தேர்தலுக்கு முன்னரே வாக்களித்திருந்தார். அந்த அடிப்படையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
 நன்றி மீள்பார்வை 

இந்துகள் யார் ?



Monday, June 18, 2012

முர்ஸியின் வெற்றியால் எகிப்தில் மகிழ்ச்சி ஆரவாரம்



  • PDF
Egypt-Elction-5
இஹ்வான்களது வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிச் செய்தியால் எகிப்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியுள்ளது. உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியவாதிகள் இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஹ்ரீர் சதுக்கத்திலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஒன்றுகூடிய முர்ஸியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பதாகைகளையும் எகிப்தின் தேசியக் கொடியையும் அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முர்ஸியின் வெற்றி இராணுவ ஆட்சியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான மக்கள் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இராணுவத்திற்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் வீதியில் இறங்கி இந்த மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி மீள்பார்வை 
Egypt-Elction-6
Egypt-Elction-4
Egypt-Elction-5
Egypt-Elction-2
Egypt-Elction-1

முர்ஸியின் வெற்றி முழு எகிப்தியர்களின் வெற்றியாகும் – அந்-நூர் கட்சி செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012 02:50 வாசிப்புக்கள்: 97 பகுதி: செய்திகள் - உலக செய்திகள் இஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸியின் வெற்றி முழு எகிப்திய மக்களின் வெற்றியாகும், குறிப்பிட்ட அரசியல் குழுக்களின் வெற்றியில்லை என ஸலபிக்களின் கட்சியான அந்-நூர் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நாதர் பாக்கர் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அதில் தெரிவிக்கையில், ஏப்ரல் 6 இளைஞர் அமைப்புக்கும், கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எகிப்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் மலர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அஹமத் ஷபீக்குக்கு வாக்களித்தவர்களும் எகிப்தியர்களே, ஆகவே நாம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் கட்ட வாக்களிப்பின்போது அந்-நூர் கட்சி ஆப்துல் முன்இம் அபுல் புதூஹை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.



  • PDF
Nader-Bakkar
இஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸியின் வெற்றி முழு எகிப்திய மக்களின் வெற்றியாகும், குறிப்பிட்ட அரசியல் குழுக்களின் வெற்றியில்லை என ஸலபிக்களின் கட்சியான அந்-நூர் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நாதர் பாக்கர் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் அதில் தெரிவிக்கையில், ஏப்ரல் 6 இளைஞர் அமைப்புக்கும், கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எகிப்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் மலர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஹமத் ஷபீக்குக்கு வாக்களித்தவர்களும் எகிப்தியர்களே, ஆகவே நாம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் கட்ட வாக்களிப்பின்போது அந்-நூர் கட்சி ஆப்துல் முன்இம் அபுல் புதூஹை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி மீள்பார்வை 

Thursday, May 31, 2012

வெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்!



நமது இந்திய தேசத்தில் இன்றைய நிலை!
மும்பையில் இந்த இடத்தில் மாதம் 200 ரூபாய் வாடகையில் வீடு கிடைக்கும் - தாராவி
மும்பையின் மொத்த ஜனத்தொகையில் 55% இது போன்ற இடத்தில்தான் வாழ்கிறார்கள் 
இதே மும்பையில் 5000 கோடி ரூபாயில் 1 வீடு – ஆண்டில்லா அம்பானியின் வீடு...!
இந்திய ஜனத்தொகை120 கோடி.. இவர்களில் பணமாக ரூ.10 லட்சம் வைத்திருப்பவர்கள் வெறும் 153,000 நபர்கள் தான் (0.013%)... பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஒரு உதாரணம்
விலை வாசி ஏற்றம் – விழி  பிதுங்கும் நடுதர மக்கள்
81 நாடுகளில் பசியால் வாடுபவர்களது கணக்கெடுப்பு
இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது.

சூடான், சிறிலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலை
 
தலீத்களை விட பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் – நீதிபதி ராஜேந்திர சச்சார்
சங்க பரிவாரங்களால் முஸ்லிம்கள் தொடர் அச்சுறுத்தப்படுதல் – வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்...



துப்பாக்கி சுடும் பயிற்சி – இந்த சப்தங்கள் அரசின் காதினுள் நுழைவதில்லை



முஸ்லிம்களுக்கெதிரான மிரட்டல்கள்....

300 மசூதிகளை இடிக்க வேண்டும்... இந்தியாவை ஹிந்து ராஷ்ரா என்று அறிவிக்க வேண்டும்.... – சுப்ரமணிய சுவாமி


இரட்டை நீதி

மாலேகானில் குண்டு வைத்த குற்றவாளிகளுக்கு உதவிய சிவநாரணயன் கல்சங்கரா, ஷியாம் சாகுவிற்கு பெயில்

அநீதியாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் 3 வருடங்களாக இன்னும் சிறையில் வாட்டம்



கேள்வி கணக்கில்லாத போலி என்கவுண்டர்கள் – செய்வதறியாத  முஸ்லிம்கள் 


குண்டு வெடிப்பில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்த ஃபைஸ் உஸ்மானி காவல் நிலையத்தியத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை



முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தினை தீவிரவாதமாகவும் சித்தரித்தல்



நாட்டை ஆண்ட சமூகம்....


100 ஆண்டுகளில் வாழ வழியில்லாத சமூகமானது....!


நாட்டில் புரையோடி கிடக்கும் ஊழல்

தலீத்களின் கண்ணியம் மற்றும் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை



தேவை ஒரு வீரியமிக்க போராட்டம் – களம் இறங்குகிறது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


தென் மாநிலங்களில் கடை கோடி கிராமத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் சேவை 


தற்போது வடஇந்தியாவை நோக்கி.... 18 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் மக்கள் சேவகர்கள்...!


வடஇந்தியாவில் பேராதரவுடன் பாப்புலர் ஃப்ரண்ட்