Monday, June 18, 2012

முர்ஸியின் வெற்றி முழு எகிப்தியர்களின் வெற்றியாகும் – அந்-நூர் கட்சி செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012 02:50 வாசிப்புக்கள்: 97 பகுதி: செய்திகள் - உலக செய்திகள் இஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸியின் வெற்றி முழு எகிப்திய மக்களின் வெற்றியாகும், குறிப்பிட்ட அரசியல் குழுக்களின் வெற்றியில்லை என ஸலபிக்களின் கட்சியான அந்-நூர் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நாதர் பாக்கர் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அதில் தெரிவிக்கையில், ஏப்ரல் 6 இளைஞர் அமைப்புக்கும், கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எகிப்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் மலர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அஹமத் ஷபீக்குக்கு வாக்களித்தவர்களும் எகிப்தியர்களே, ஆகவே நாம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் கட்ட வாக்களிப்பின்போது அந்-நூர் கட்சி ஆப்துல் முன்இம் அபுல் புதூஹை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.



  • PDF
Nader-Bakkar
இஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸியின் வெற்றி முழு எகிப்திய மக்களின் வெற்றியாகும், குறிப்பிட்ட அரசியல் குழுக்களின் வெற்றியில்லை என ஸலபிக்களின் கட்சியான அந்-நூர் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நாதர் பாக்கர் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் அதில் தெரிவிக்கையில், ஏப்ரல் 6 இளைஞர் அமைப்புக்கும், கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எகிப்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் மலர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஹமத் ஷபீக்குக்கு வாக்களித்தவர்களும் எகிப்தியர்களே, ஆகவே நாம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் கட்ட வாக்களிப்பின்போது அந்-நூர் கட்சி ஆப்துல் முன்இம் அபுல் புதூஹை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment