Tuesday, July 24, 2012

எகிப்தின் புதிய பிரதமராக ஹிஷாம் கிந்தில் நியமனம்



mursi-pm-egypt










எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி, கலாநிதி ஹிஷாம் கிந்திலை புதிய பிரதமராக நியமித்துள்ளார். ஒப்பீட்டளவில் இளம் வயதினரான கிந்தில், கடந்த ஜூலை வரை நீர் விவகார அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

முபாறக் வீழ்த்தப்பட்டதன் பின்னர், கடந்த வருடம் ஜூலையில் இருந்து நீர் விவகார அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். ஹிஷாம் கிந்தில் அமெரிக்காவிலுள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் நீர்ப்பாசனத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக நியமிக்கப்படலாம் என பலரும் எதிர்பார்க்கப்பட்டனர். பொருளியல் துறை சார்ந்த ஒருவரை முர்ஸி பிரதமராக நியமிப்பார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இவரது பெயர் அடங்கியிருக்கவில்லை.

சமீபத்தில் அடிஸ்அபாபாவில் நடைபெற்ற ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், ஜனாதிபதி முர்ஸியுடன் கலாநிதி ஹிஷாம் கிந்திலும் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் புதிய அமைச்சரவையை அமைக்குமாறு பிரதமரை ஜனாதிபதி முர்ஸி வேண்டியுள்ளார். புதிய பிரதமர் நியமனம் சில வாரங்களாக தாமதமடைந்திருந்தது.
இஹ்வான் அல்லாத ஒருவரை பிரதமராக நியமிக்கவுள்ளதாக முர்ஸி தேர்தலுக்கு முன்னரே வாக்களித்திருந்தார். அந்த அடிப்படையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
 நன்றி மீள்பார்வை 

இந்துகள் யார் ?