‘அறபு வசந்தம்’ செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் கருத்துச் சுதந்திரத்திற்கான விருதினை வழங்கியுள்ளது.கருத்துச் சுதந்திரத்திற்கான மேற்படி விருதினை வென்றவர்களுள் டியூனிசியாவில் ஆரம்பித்த மல்லிகைப் புரட்சிக்கு அடிப்படையாய் அமைந்த முஹம்மத் பூஅசீசும் ஒருவராவார். எகிப்தைச் சேர்ந்த அஸ்மா மஹ்பூழ், லிபியாவைச் சேர்ந்தவர்களான அஹ்மத் சுபைர், அஹ்மத் அல் சனூசி ஆகியோர் இவ்விருதை வென்ற ஏனைய வெற்றியாளர்களாவர்.
இந்த விருதுக்காக தெரிவுசெய்யப்பட்ட சிரியாவைச் சேர்ந்த கேலிச்சித்திர ஊடகவியலாளர் அலி இஸ்ஸத் மற்றும் சட்டத்தரணி ரஸான் செய்தூனா ஆகியோர் அந்நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாக விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதுடன் சேர்த்து பரிசுத் தொகையாக 65,000 அமெரிக்க டொலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த விருதினை தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் செயலாளர் நாயகம் கோபி அனான் ஆகியோர் பெற்றுள்ளனர்.
நன்றி http://meelparvai.net
நன்றி http://meelparvai.net
No comments:
Post a Comment