10 Jan 2012
ஜெருசலம்:வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இரண்டு தின சுற்றுப் பயணமாக மத்தியக் கிழக்கின் பயங்கரவாத நாடான இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆவார். ஜோர்டானுக்கு சென்ற கிருஷ்ணா சாலை வழியாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
இஸ்ரேலில் இந்தியாவின் தூதர் நவதேஜ் ஸர்னாவும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இணைந்து கிருஷ்ணாவை வரவேற்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஷிமோன் பெரஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன் ஆகியோருடன் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார்.
பாதுகாப்பு, விவசாயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்துவதுதான் கிருஷ்ணாவின் சுற்றுப்பயண நோக்கமாகும். இஸ்ரேலில் உள்ள ஹோலாகாஸ்ட் நினைவிடம் மற்றும் இந்திய சன்னியாசி மடங்களுக்கும் கிருஷ்ணா செல்கிறார். இதற்கு முன்பு பா.ஜ.கவின் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேலுக்கு சென்ற வெளியுறவு துறை அமைச்சராவார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment