10 Jan 2012
புனே:சர்வதேச கஷ்மீர் பண்டிட்களின் இளைஞர் அணியின் இரண்டு நாள் மாநாடு புனேவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தனி நாடு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தனி நாட்டின் மூலம் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
கஷ்மீர் பண்டிட்களின் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் புலம் பெயர்ந்துள்ள கஷ்மீர் பண்டிட்களை கண்டறிந்து அவர்களை முன்னேற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக வாழ்ந்த பண்டிட்களின் தியாகத்தை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பநுண் பண்டிட்களின் தேசிய செய்தி தொடர்பாளரான கமல் ஹக் கஷ்மீர் பண்டிட்கள் புலம் பெயர்ந்துள்ளதால் தங்களின் நாட்டிற்கு அவர்கள் அந்நியர்கள் போல் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் கஷ்மீர் வாகினியின் செய்தி தொடர்பாளரான கேமா கௌல் பண்டிட் இளைஞர் அணியினர் விரைவாக தங்களின் இலக்கை அடைய தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கஷ்மீரில் பண்டிட்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்துள்ள போதிலும் அவர்கள் தனி நாடு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment