Tuesday, March 22, 2022

நமது சமூகத்தின் முன்னேற்றம்

 நமது ஊரில் 1980 களுக்கு முன் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. 1980களில் நமது மக்களின் கல்வி  என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இதற்கு இடைப்பட்ட பகுதியில் இடைநிறுத்தம் ஆக இருந்தது.  ஒரு சிலரே மட்டுமே  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை பட்டம் கல்வி பயின்றார்கள் .  இன்றைக்கு வெளிநாட்டு வேலை என்றால் நமது நினைவுக்கு வருவது துபாய் தான்.  அதேபோன்று அந்த காலகட்டத்தில் கல்வியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்று மளிகைக்கடையில் வேலை செய்தார்கள்.

1990 பின் கல்வியில் இடைநிறுத்த செய்யப்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் கடைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். 1990களில் படித்த மாணவர்கள்  டிப்ளோமா,  ஐடிஐ போன்ற தொழில் கல்வி பயின்றார்கள்.  தொழில் கல்வியின்  பயனாக வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  

சமூகத்தில் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம் 2000 பின்  மாணவர்களின் கல்வித்தரம் டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தது. என்னதான் இளநிலை பட்டம் படித்தாலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. தற்போது நமது ஊர் இளைஞர்கள் அரசு வேலையில் பணிபுரிய தூங்கி விட்டார்கள். குறிப்பாக காவல் துறை மற்றும் அரசு துறைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதைத் தவிர்த்து விட்டு வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும் துபாய், சவுதி போன்ற நாடுகளில் ஏதாவது  உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் நமக்கு வேலை இழக்க நேரிடும் இங்கே வந்து நாம் வேலையை தேடுவோம் என்றால் நமக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காது. இந்த  சூழ்நிலை வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஏற்படாமல் இருக்க  நமது பிள்ளைகளுக்கு குறைந்தது டிகிரி முடித்தபின் இரண்டு ஆண்டுகளாவது அரசு வேலைக்கு முயற்சி செய்ய உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும்.

 மாற்றம் ஒன்றே மாறாதது அது நமக்காக இருக்கட்டும். நமது சமூகத்தின் முன்னேற்றம் ஒரு பகுதியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளது.  அதனை செயல்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.


                   நமது நிருபர்

                   சாமானியன்

                   போகலூர்

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்