Tuesday, March 22, 2022

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்

No comments:

Post a Comment