ஜனநாயகம் நான்கு தூண்களால் அமைந்தது.
1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்
2. நிர்வாகத்துறை
3. நீதித்துறை
4. ஊடகத்துறை
இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக
1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்
2.நிர்வாகத்துறை
3. நீதித்துறை
மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.
1. மக்களுக்கான திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது
2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.
3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க நீதித்துறை உள்ளது
4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.
இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.
மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.
நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும் செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.
நமது நிருபர்
சாமானியன்
போகலூர்
No comments:
Post a Comment