11 Jan 2012
கராக்கஸ்:ஏகாதிபத்தியத்தின் பைத்தியம் கூடுதல் பலம்பெற்று வருகிறது. இதற்கு எதிராக ஈரான் மக்களுடன் ஒத்துழைப்போம் என வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக ஆதரவுகோரி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதிற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார் சாவேஸ்.
அஹ்மத் நஜாதை தனது சகோதரர் எனகூறிய சாவேஸ், ’அமெரிக்கா நம் இருவரையும் பிசாசுகள் என அழைக்கிறது’ என்பதை நினைவூட்டினார். இந்த இரண்டு பிசாசுகளும் ஒன்றிணையும் போது அமெரிக்காவிற்கு பைத்தியம் அதிகரிக்கவே செய்யும் என சாவேஸ் கிண்டலாக தெரிவித்தார்.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த நஜாத், இதே குற்றச்சாட்டைஎ ழுப்பித்தான் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது என சுட்டிக்காட்டினார். எந்த நாட்டின் வசம் குண்டுகள் இருக்கின்றன என்பது தென் அமெரிக்க நாடுகளுக்கு தெளிவான விழிப்புணர்வு உண்டு.
ஈரானின் வளர்ச்சித் திட்டங்களில் மிரண்டுபோன அமெரிக்கா பொய்ப் பிரச்சாரத்தை நடத்துகிறதுஎன அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment