11 Jan 2012
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் நகரில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை தார்மீக(Moral) போலீசாக செயல்பட்டதாகக் கூறி ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட 40 இளைஞர்கள் மீதும் கடுமையான குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதுக்குப் பின் அவர்களை காவல்துறையினர் அவர்களை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து தங்களை “பின்லேடன் குழு” என்றுக் கூறிக்கொண்டு ஹிந்து இளைஞர்களுடன் ஊர் சுற்றும் முஸ்லிம் இளம்பெண்களை மிரட்டுவதாகவும். இதுப்போன்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான குற்றப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் நடந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது “ஸ்ரீனிவாச ராவ் என்னும் 2-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் சில பொருட்கள் வாங்க நிஜாமாபாத் நகருக்கு வந்துள்ளார், வந்த இடத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவி நஜ்மாவை பேருந்து நிறுத்தத்தில் சந்தித்துள்ளார் மேலும் பேருந்து வர தாமதம் ஆனதால் அருகில் இருந்த ஐஸ் கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு வந்த சில முஸ்லிம் இளைஞர்கள் எதற்காக தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஊர் சுற்றுகிறாய் என்று கேட்டு ஸ்ரீனிவாசனை அடித்துவிட்டு பின்னர் நஜ்மாவை ஒரு ஆட்டோவில் அழைத்து போய் அவரது விடுதியில் விட்டுள்ளனர்.” என்று கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 6 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர் என்றும் காவல்துறை ஆய்வாளர் கூறியுள்ளார்.
மேலும் அவர் மாஜிஸ்ட்ரேடிடம் அளித்துள்ள ரிப்போர்டில் இவர்களை தண்டிக்காமல் விட்டுவிட்டால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த இளைஞர்கள் மீது வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக ஒன்றிணைதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்களை சும்மத்தியுள்ளனர்.
‘முஸ்லிம் இளைஞர்களை ஒடுக்க அதிகப்படியான பலத்தை காவல்துறையினர் பிரயோகிக்கின்றனர். மேலும் காவல்துறையினர் தங்களை நீதிபதிகளாக நினைத்துக் கொள்கின்றனர்’ என்று முஸ்லிம் அமைப்புகள் கூறியுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிர்வாணமாக அடைத்து வைத்து அவர்களை மனதாலும் உடலாலும் சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று சிட்டிசன் ரைட்ஸ் கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இளைஞர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு எதிராக போராடவும் சிட்டிசன் ரைட்ஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
மேலும் மாநில மனித உரிமை ஆணையத்திடம் காவல்துறையின் அராஜகம், மனித உரிமை மீறல், மத ரீதியான போக்கு குறித்தும், முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகள் குறித்தும் புகார் அளித்துள்ளது.
“இது போன்ற கைது சம்பவங்கள் நிஜாம்பாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிஜேபி அடைந்தவுடன் தான் நிகழ்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் லக்ஷ்மி நாராயணன் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று சிட்டிசன் ரைட்ஸ் கமிட்டியின் தலைவர் ஹலீம் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 6 மாதங்களில் இதுபோன்று 40 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் ஹலீம் தெரிவித்துள்ளார்.
‘ஹிந்துத்துவா அமைப்புகளால் பயிற்சி அளிக்கப்பட்டு ஹிந்து இளைஞர்களின் மூலம் முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்படுவதால் சில இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் சமூகப் பெண்கள் மற்ற மத இளைஞர்களுடன் பார்க்கும் போது ஆத்திரப்பட்டு இது போன்ற செயல்களில் சில நேரங்களில் ஈடுபடுவது உண்மை என்றாலும் இது போன்ற சிறிய தவறுக்காக காவல்துறை அவர்கள் மீது 15 பிரிவுகளில் கிரிமினல் வழக்குகளை புனைவதும், அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதும், அவர்களின் மதங்களை கொச்சைப் படுத்துவதையும் பார்க்கும்போது இது அனைத்தும் முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றும் ஹலீம் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment