Monday, December 26, 2011

இஸ்ரேலுடனான உடன்படிக்கைகளை நாம் மதித்து நடப்போம் - அந்நூர் கட்சியின் பேச்சாளர்


Yusri Hammad




இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கையை தமது கட்சி மதித்து நடக்கும் என எகிப்தின் ஸலபி கட்சியான அந்நூர் கட்சியின் பேச்சாளர் யுஸ்ரி ஹம்மாத் இஸ்ரேலிய இராணுவ வானொலி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"உடன்படிக்கைகளுடன் நாம் முரன்படமாட்டோம் மாற்றமாக முன்னைய அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளை மதித்து நடப்போம்" என எகிப்திலிருந்து இஸ்ரேலின் இராணுவ வானொலிச் சேவைக்கு தொலைபேசியுடாக வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"உடன்படிக்கைகளின் ஷரத்துக்களில் ஏதேனும் திருத்தங்களைச் செய்யவேண்டும் என எகிப்திய மக்கள் விரும்பினால் அதற்கான வழி பேச்சுவார்த்தையும் கலந்துரையாடலுமாகும்" எனத் தெரிவித்திருக்கும் அவர் "நாங்கள் எல்லா உடன்படிக்கைகளையுமே மதித்து நடப்போம்" எனவும்‌ தெரிவித்துள்ளார்.
எகிப்துக்கு வரும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்‌விக்குப் பதிலளித்த அவர் "எகிப்துக்கு வரும் எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் வரவேற்கப்படுவார் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ வானொலி சேவையொன்றுக்கு எகிப்தின் ஸலபிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேட்டியளித்திருப்பது தனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது என தனது பெயரை குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்திஸ்தாபனத்திடம் தெரிவித்திருக்கின்றார்.
இது சந்தேகமேயின்றி எகிப்தில் நடப்பவை குறித்து எம்மை ஆழமாகச் சிந்திக்கவைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment