Sunday, December 25, 2011

துருக்கி பிரான்சிலிருந்து தனது தூதரை அழைத்துக் கொண்டது - உலக முஸ்லிம்களை யூஸுப் அல் கர்ளாவி அழைப்பு


Turkey Ambassedor
ஆர்மேனிய மக்களுக்கு எதிரான சட்டத்தை பிரான்ஸ் நிறைவேற்ற உள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டிற்கான துருக்கி தூதுவர் தஷின் பர்கோவ்குலுவை துருக்கி அரசாங்கம் தனது சொந்த நாட்டிற்கு அழைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆர்மினிய மக்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனையாக ஒரு ஆண்டு சிறை மற்றும் 45ஆயிரம் யூ‌ரோவும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தன்னுடைய தூதர‌ை திரும்ப அழைத்து கொண்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த துருக்கி நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரான்ஸ் நாடு வரலாற்று தவறை செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு இது போன்ற சட்டம் ஒன்றை பிரான்ஸ் நாட்டின் சோசலிஸக்கட்சி கொண்டு வந்தது. கீழ்சப‌ை உறுப்பினர்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த போதிலும் செனட் சபை இந்த சட்டத்தை ஒதுக்கியுள்ளது.
எதிர்வரும் 2012ல் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள நிகோலஸ் சர்கோஸி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
kardavi
அதேநேரம், அனைத்து முஸ்லிம்களையும் துருக்கிக்கு ஒத்துழைக்குமாறு யூஸுப் அல் கர்ளாவி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆர்மினிய மக்களுக்கு எதிராக பிரான்ஸ் நிறைவேற்றவுள்ள சட்டத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் அனைவரும் துருக்கிக்கு ஆதரவு வழங்குமாறு யூஸுப் அல் கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை டொஹா கட்டாரில் நடாத்திய குத்பாப் பிரசாங்கத்தின்போது அவர் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment