புதுடெல்லி:வலுவான லோக்பாலுக்கான சண்டை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசு பாராளுமன்றத்தில் லோக்பால் வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. வழக்கம் போல் அன்னாவின் குழு அதை எதிர்த்து வருகின்றது. மேலும் இந்த வரைவு மசோதாவை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பியான்ட் ஹெட்லைன்ஸ் என்னும் பத்திரிக்கை அன்னாவின் குழுவிற்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்ய முயற்சி மேற்கொண்டது. மேலும் நிதியுதவி பற்றி அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அன்னாவின் அமைப்பான பிரஸ்டச்சர் விரோதி ஜன அந்தோலன் நியாஸ், மணிஷின் சிசோதியா அமைப்பு மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைப்பான பி.சி.ஆர்.எப் ஆகிய அமைப்புகளுக்கு ஒரு மனுவை அனுப்பியிருந்தது. மேலும் இந்த அமைப்புகள் பதிவு செய்யப்படாத அமைப்புகள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் அன்னா, மணிஷ் மற்றும் கேஜ்ரிவால் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல ஒளிவு மறைவு இன்மையை பற்றி பொது மேடைகளிலும் மற்றும் தொலைக்காட்சி சேனல்களிலும் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களின் நடத்தைகள் வேறுமாதிரியாக என தெரியவருகிறது.
அன்னாவும், மணிஷும் தங்களது நிதியுதவி குறித்த மனுவிற்கு இன்னும் பதில் அளிக்கவேண்டும் என்று இதுவரை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. பி.சி.ஆர்.எப் மட்டும் எதோ பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக அரை மனதுடன் தங்களின் இணையதளத்தில் அணைத்து விபரங்களும் இருப்பதாக தெரிவித்திருந்தது.
மேலும் கபீரின் அமைப்பிடம் அவர்கள் அலுவலகம் வாங்கியது குறித்தும் மற்றும் நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும் தகவல் அளிக்குமாறும் மனு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் முன்னதாக கபீரின் அமைப்பு குறித்து தகவல் அறியும் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்த தகவல் என்னவெனில் கபீரின் அமைப்பிற்கு ‘போர்ட் அமைப்பு’, ‘டட்ச் தூதரகமும்’ மற்றும் இன்னும் பிற வெளிநாட்டு அமைப்புகளும் நிதியுதவி அளித்து வருகின்றன. மேலும் 2011-ஆம் ஆண்டு மட்டுமே கபீரின் அமைப்பு 1 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘டட்ச் தூதரகமும்’ 20 லட்சம் ரூபாய் அளித்துள்ளது.
எனினும் ‘டட்ச் தூதரகமும்’ பற்றி தனது இணையத்தளத்தில் அந்த அமைப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது வியப்பிற்குரியது என்னவெனில் கபீரின் அமைப்பு பெரும்பாலும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்தே நிதியுதவி பெறுகிறது.மேலும் நிதியுதவி அளிக்கும் அமைப்புகளுக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை.
மேலும் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற போராட்டத்தை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்துதான் நிதியுதவி பெறப்படுகிறது என்று முன்னதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சிங் ஆரோன் கூறியுள்ளார். மேலும் வலுவாக இருக்கும் மத்திய அரசின் ஸ்திரத் தன்மையை குலைக்க வெளிநாட்டு அரசுகள் சதி செய்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும் அன்னாவின் குழு ஊழலுக்கு எதிரான இந்தியா என்பது 120 கோடி மக்களின் போராட்டம் என்று கூறிவருகிறது. ஆனால் உண்மை என்னவெனில் 10000 ரூபாய் நன்கொடை அளித்துள்ள 400 நபர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. மேலும் நிதி அளித்தவர்கள் பட்டியலில் டாடா மற்றும் ஜிண்டால் ஆகிய நிறுவனங்களும் எச்.டி.எப்.சி, கஷ்மீர் பேங்க், கார்மேல் போன்ற தனியார் பள்ளிகளும் மற்றும் பல தனியார் நிருவனங்களுமே ஆகும்.
மேலும் இது வரை 2,52,14,478 ரூபாய் நிதி கிடைதுள்ளதில் அர்விந்த் கேஜ்ரிவால் மட்டுமே தன்னுடைய ஊழல் எதிர்ப்பு அமைப்பிற்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைப்பில் உள்ள அனைவரும் அன்னாவின் குழுவில் உறுப்பினர்கள் என்பதே. இதை வேறுவிதமாக சொல்வது என்றால் இரண்டாம் சுதந்திரப் போர் என்று கூறிக் கொண்டு போராடுபவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு போராடி வருகிறார்கள் என்றும் சொல்லலாம்.
மேலும் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைப்பான பி.சி.ஆர்.எப் நிதியுதவி பெற்றதில் ஊழல் இருப்பதாகக் கூறி விபின் நாயர் என்னும் நபர் தாம் அளித்த 36000 ரூபாய் நன்கொடையை தனுக்கு திரும்ப அளிக்குமாறு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தாம் பணத்தை திரும்ப கேட்டதற்காக பி.சி.ஆர்.எப் உறுப்பினர்கள் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்னா தான் யாரிடமும் நன்கொடை கேட்க மாட்டேன் என்று சொன்னவர் தற்போது தன் ஆதரவாளர்களிடம் நன்கொடை வசூலிக்குமாறு அறிவுறுத்தி வருகிறார். மேலும் பல லட்சம் ரூபாயை சம்பளமாக ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்றும் பீற்றிக் கொள்ளும் தனது அமைப்பினருக்கு கொடுத்துள்ள அரவிந்த் கேஜரிவாலும், மணிஷும் எவ்வாறு நன்கொடை வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகின்றனர் என்பதே தற்போதைய கேள்வி. மேலும் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னாவின் குழுவினர் சம்பளம் வாங்கிக்கொண்டு போராடும்போது பொதுமக்கள் மட்டும் ஏன்? இலவசமாக போராட வேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment