Wednesday, January 11, 2012

ஷஹ்லா மஸூத் கொலை:AIIMS ஃபாரன்சிக் குழுவினர் இன்று போபால் வருகை

ஷஹ்லா மஸூத்
புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலை வழக்கில் கிடைத்த ஆதாரங்களை பரிசோதிப்பதற்கு ஆல் இந்தியா இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸின்(AIIMS) ஃபாரன்சிக் வல்லுநர்கள் இன்று போபாலுக்கு வருகை தருகின்றனர்.

இவ்வழக்கில் அரசின் பல்வேறு தடவியல்(forensic) குழுக்களும், போலீசாரும் சேகரித்த ஆதாரங்களை பரிசோதிக்க AIIMS தடவியல் வல்லுநர் குழு ஷஹ்லா மஸூத் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிடும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இக்குழுவினருடன் சி.பி.ஐ அதிகாரிகளும் உடனிருப்பர். உள்ளூர் போலீஸ் உள்பட வழக்குடன் தொடர்புடைய அனைவருடனும் வல்லுநர் குழு சந்திப்பு நடத்தும் என அதிகாரிகள் கூறினர்.
முன்பு மத்திய ஃபாரன்சிக் துறையின் அதிகாரிகள் போபாலுக்கு சென்று ஆதாரங்களை பரிசோதித்தனர். 2011 ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஷஹ்லா மஸூத் போபாலில் அவருடைய வீட்டிற்கு அருகே வைத்து மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment