11 Jan 2012
புதுடெல்லி:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலை வழக்கு தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கூட்டாளியும், முன்னாள் குஜராத் மாநில உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் சி.பி.ஐ விசாரணை
நடத்தியது.
நடத்தியது.
குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் கொலைச்செய்த சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயின் கொலைவழக்கில் முக்கிய சாட்சியான பிரஜாபதி 2006-ஆம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
நேற்று காலை சி.பி.ஐ தலைமையகம் சென்ற ஷாவிடம் சி.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொண்டது. ஆனால் என்கவுண்டர் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஷா மழுப்பியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment