Wednesday, January 11, 2012

சாத்தான் வேதம்:இதுவல்ல சுதந்திரம் - தினமணி தலையங்கம்!


     அனைவருக்கும் பேச்சுரிமை என்கிற அடிப்படைக் கோட்பாட்டின்மேல் ஓர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. ஏனைய நாடுகளில் பத்திரிகைகளுக்கு என்று தனியாக சில உரிமைகள் தரப்பட்டுள்ளன.
 கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை, அதிகம் கல்வி அறிவு இல்லாத ஓர் ஏழை நாட்டு மக்களுக்கு அளிக்கும்போது அந்தச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று கவலைப்படாமல், அதனால் உறுதி செய்யப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாம் தகர்த்துக்கொண்டு வருகிறோம் என்பதைப் பார்க்கும்போது மனம் கூனிக் குறுகுகிறது. கையிலே பேனா இருக்கிறது, காட்சி ஊடகம் தனிச் சொத்தாக அமைந்துவிட்டது என்பதற்காகத் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் தரக்குறைவைத் தனிமனித சுதந்திரம் என்கிற அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பின் பின்னால் ஒளிந்துகொண்டு செய்ய முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிகோலுவதாக இருப்பதற்காகத்தானே தவிர, தரக்குறைவான தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்காக அல்ல.

"சீ, இதுவும் ஒரு பிழைப்பா?' என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.
சுதந்திரம் இங்கே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சுதந்திரம் என்கிற பெயரில் பத்திரிகைகள் பொறுப்பற்றதனமாகத் தரம்கெட்ட முறையில் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவது எந்த அளவுக்குக் கண்டிக்கத் தக்கதோ அதே அளவு கண்டனத்துக்கு உரியது வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிப்பதும்!
பத்திரிகைகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள் இவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது "இதுவல்ல சுதந்திரம்' என்பதை!                                                                                                                                                                                                     (
குறிப்பு:- இதில் தினமணிக்கு மட்டும் விலக்கு தர வேண்டும். அதுவும் முஸ்லிம்களுக்கு எதிராக மத துவேஷ கருத்துக்களை எழுதும் போது தினமணியை பாராட்ட வேண்டும், என்று சேர்த்து எழுதியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.) Dinamani - Tamil Daily News Paper,epaper,latest tamil news,politics,tamil movies,Photo Gallery
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment