சேலம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக நல திட்டப்பணிகள் இறைவனின் கிருபையாலும், நல்ல உள்ளம் கொண்ட தனவந்தர்களாலும் நாடு முழுவது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் சமூகத்தின் அவல நிலையை போக்கி மேம்படுத்துவதற்கான பல்வேறு நலதிட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 18ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம் ஊமலூர் தாலுக்காவிலுள்ள வெள்ளாளப்பட்டி என்னும் கிராமத்தில் 3000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் காசிம் அலி என்பவரின் வீட்டுக்கூறை இடிந்த நிலையைல் மிகவும் சிறமப்பட்டு வந்தார். தனவந்தர்களை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 8100/- ரூபாய் வசூல் செய்யப்பட்டு காசிம் அலி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
விபரம் வருமாறு:
உதவித் தொகை பெற்றவரின் பெயர் - காசிம் அலி
குடும்ப உறுப்பினர்கள் - மனைவி மற்றும் ஒரு பெண் குழுந்தை
வியாபாரம் - பம்பு ஸ்டவ் ரிப்பேர் மற்றும் பழுது பார்க்கும் தொழில்
விலாசம் - மக்கான் மஸ்ஜித் எதிர்புரம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர் போஸ்ட், ஊமலூர் தாலுகா, சேலம் மாவட்டம்
கபுருஸ்தான் இடத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகிறார்.சொந்த நிலம் இல்லாதவர்.
வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். காசிம் அலியின் குடும்பத்தைப்போன்றும் இன்னும் 15 குடும்பங்களின் வீடுகள் மிகவும் மோசமாக இருக்கின்றது. இவர்களுக்காக உதவி செய்ய விரும்புவோர் கீழ் கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
+91-9003734509
ஃபயாஸ்
ஃபயாஸ்
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட்
No comments:
Post a Comment