Tuesday, April 3, 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம்

நிதிஷ் குமார்
பாட்னா:டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை மாநில அரசிடம் தகவல் அளிக்காமல் கைது செய்தது குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை குறித்து முதல்வர்கள் மாநாட்டில் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனைக் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினரும் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவருமான சந்திரசேகர் சட்டமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் நிதிஷ் குமார் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மாநில காவல்துறையிடம் தகவல் அளிக்காமல் கைது செய்வது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் புது டெல்லியில் நடக்க இருக்கும் முதல்வர்கள் மாநாட்டில் இந்த பிரச்சனையை கிளப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையும் டெல்லி காவல்துறையும் வழக்கம் போல் குண்டுவெடிப்புகளில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி பீகார் மாநிலத்தில் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment