Monday, March 5, 2012

தடை தோல்வியை தழுவினால் ஈரானை தாக்குவோம்! – ஒபாமா மிரட்டல்!

தடை தோல்வியை தழுவினால் ஈரானை தாக்குவோம்!-ஒபாமா மிரட்டல்!
வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை தோல்வியை தழுவினால் அவர்களின் அணுசக்தி நிலையங்களை தாக்க உத்தரவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மிரட்டல் விடுத்துள்ளார்.
அட்லாண்டிக் மேகஸினுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா ஈரானை மிரட்டியுள்ளார்.
“நான் வீம்பாக இதனை கூறவில்லை” என்று தெரிவித்த ஒபாமா, ஈரானை இஸ்ரேல் அவசரப்பட்டு தாக்க கூடாது என்றும் கூறினார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்பது அமெரிக்காவின் உறுதியான கருத்தாகும். ஈரான் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு. அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானை உடனடியாக தாக்குவது அவர்களுக்கு அனுதாபத்தை பெற்றுத் தந்துவிடும் என்பதால் இஸ்ரேல் இத்தகையதொரு அவசர முடிவை எடுக்க கூடாது. இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment