Wednesday, March 7, 2012

மேற்கு கரையில் ரெயில் பாதை நிர்மாணிக்கும் இஸ்ரேல்!

Israel seeks to build new rail network in West Bank
டெல்அவீவ்:ஃபலஸ்தீன் பிரதேசங்களில் ஆக்கிரமித்து யூத குடியிருப்புகளை கட்டி வரும் இஸ்ரேல் அதனை தீவிரப்படுத்தும் நோக்கில் மேற்கு கரையில் ரெயில்வே பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளது. 475 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு கரையை முழுவதும் உட்படுத்தும் விதமாக ரெயில்வே பாதையை அமைக்க இஸ்ரேல் போக்குவரத்து துறை அமைச்சர் டிஸ்ராயேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.


மேற்கு கரையில் யூதக் குடியிருப்புக்களை பரஸ்பரம் இணைக்கவும், கிழக்கு மேற்குகரையில் இதைப் போன்றதொரு போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் இந்த ரெயில்பாதையை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மேற்கு கரையில் ஜனின் குடியிருப்பு மையமும், தெற்கு மேற்கு கரையில் ஹெப்ரானும் பரஸ்பரம் இணைக்கப்படும்.

அமெரிக்காவில் புஷ் அதிபராக பதவியில் இருந்த வேளையில் குறிப்பிட்ட ரெயில் பாதை அமைப்பதற்கான ஆலோசனை துவங்கியது என்று ஸ்டாப் த வால் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் தாவூத் ஹமுதிஹ் கூறுகிறார்.

ரெயில்வே பாதை நிர்மாணிப்பதை ஒருபோதும் அங்கீகரிக்க இயலாது என்று ஃபலஸ்தீன் போக்குவரத்து துறை அமைச்சர் மாஹிர் நஈம் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment