Wednesday, March 7, 2012

உஸாமாவின் உடல் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது – விக்கிலீக்ஸ்

WikiLeaks Scoop About Bin Laden's Body Is Awfully Thin
லண்டன்:அல்காயிதா தலைவர் உஸாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று விக்கிலீக்ஸின் தகவல் கூறுகிறது.


பாகிஸ்தானில் அபோட்டாபாத்தில் அமெரிக்க நேவி ஸீல் கமாண்டோக்கள் உஸாமாவை கொலைச் செய்த பிறகு அவரது உடலை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தனியார் அமெரிக்க ஏஜன்சியான ஸ்ட்ராட்ஃபாரின்(Stratfor) ரகசிய இ-மெயில் களிலிருந்து விக்கிலீக்ஸ் இதனை தெரிவிக்கிறது.

உஸாமாவை கொலைச் செய்ததாக ஒபாமா அறிவிப்பை வெளியிட்டு சில மணிநேரங்களில் ஸ்ட்ராட்ஃபார் துணை தலைவர் ஃப்ரைட் பர்டன் அனுப்பிய இ-மெயில் செய்திகளில் உஸாமாவின் உடலை சி.ஐ.ஏ தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறையில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவில் உயர் அதிகாரியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற பர்டன், உஸாமாவின் உடலை அமெரிக்காவிற்கு கொண்டு சென்ற தகவலை எங்கிருந்து பெற்றார் என்பதை இ-மெயிலில் குறிப்பிடவில்லை. இ-மெயிலில் பர்டன் கூறியது நிரூபணமானால் உஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்காவின் அறிக்கை பொய்யாகும். உஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா கூறியது மிகுந்த சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment