Wednesday, March 7, 2012

அணுசக்தி நிலையங்களில் பரிசோதனை நடத்தலாம் – ஈரான் அறிவிப்பு!


Iran Offers To Resume Nuclear Talks, Allow Inspectors Into Military Site
டெஹ்ரான்:நாட்டின் முக்கிய ராணுவ மையமான பார்ஷின் ராணுவ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட முக்கிய மையங்களில் சோதனை நடத்த சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கு(ஐ.எ.இ.எ) அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஐ.எ.இ.எயில் ஈரான் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானியாவை மேற்கோள்காட்டி ஈரான் செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக 2 தடவை ஐ.எ.இ.எ பிரதிநிதிக்குழு ஈரானுக்கு வருகை தந்த போதிலும் அணுசக்தி நிலையங்களை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈரானின் முக்கிய ஆயுத தயாரிப்பு மையம் இயங்குவது பார்ஸின் ராணுவ காம்பளக்ஸில் ஆகும். அதேவேளையில் சொன்னதையே திரும்ப சொல்வதாக ஐ.எ.இ.எ தலைவர் யூகியோ அமானோவின் மீது ஈரானின் ஐ.எ.இ.எ பிரதிநிதி குற்றம் சாட்டினார்.
அமானோ நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி சுல்தானியா அமானோவை விமர்சித்தார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment