Tuesday, March 6, 2012

உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காவும், இஸ்ரேலும்: நோம் சோம்ஸ்கி!

noam chomsky



வாஷிங்டன்:உலகை அமைதிக்கு உண்மையில் அச்சுறுத்தலாக திகழ்வது அமெரிக்காவும், இஸ்ரேலும் என்று சர்வதேச சமூகம் நம்புவதாக பிரபல அமெரிக்க சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் உலகம் முழுவதும் பரப்புரைச் செய்தாலும் மக்கள் அதனை நம்பவில்லை என்று சோம்ஸ்கி கூறுகிறார்.


‘ஈரானின் விருப்பங்கள் என்ன?’ என்பது குறித்து சோம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இதனை அவர் கூறுகிறார்.
ஊடகங்களும், அமெரிக்க அரசும் தீவிரமான பிரச்சாரத்தை துவக்குவதற்கு முன்பு ஈரானுக்கு எரிசக்திக்கான அணுசக்தியை தயாரிக்க உரிமை உண்டு என்று பெரும்பாலான அமெரிக்க மக்களும் நம்பினர்.

ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும், அணிசேரா இயக்கத்தின் 120 நாடுகளும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான கொள்கையை எதிர்ப்பவர்கள் என்று சோம்ஸ்கி கூறுகிறார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அரபு நாடுகளின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் ஆதரிக்கின்றார்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. இது உண்மை என்றாலும், அந்நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலோர் இதற்கு எதிரானவர்கள். இவ்விவகாரம் குறித்து சர்வதேச அளவில் விவாதிக்க அமெரிக்க அரசு தயாராகவேண்டும். அமெரிக்காவையும், இஸ்ரேலையும் உலகத்தின் அச்சுறுத்தலாக அரபு மக்கள் கருதும் வேளையில், இஸ்ரேல் தான் அனைத்து பிரச்சனைகளுக்குமான உறைவிடம் என்று பெரும்பாலான ஐரோப்பியர்கள் நம்புகின்றனர். இவ்வாறு நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment