Tuesday, March 6, 2012

‘பலான’ தொழிலை கைவிட்டு சமூக திருமணத்திற்கு தயாராகும் கிராம மக்கள்!


Mass marriage in Vadia village
அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் வாதியா கிராமம் புதியதொரு சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. குடும்பத்தின் பசியை போக்க விபச்சாரத்தை பரம்பரை தொழிலாக மாற்றிய இக்கிராமத்தின் ஸராணியா பிரிவினருக்கு இம்மாதம் 11-ஆம் தேதி சமூக திருமணத்தை நடத்த தன்னார்வ தொண்டர்கள் தயாராகி வருகின்றார்கள்.


ஸராணிய பிரிவைச் சார்ந்த ஏராளமான இளம்பெண்கள் திருமணம் மூலம் சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகின்றார்கள்.

அஹ்மதாபாத்தில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தில் தராத் ப்ளாக்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் வாதியா. இங்கு பெரும்பாலான மக்களூக்கு தெரியாத பழங்குடியின மக்கள்தாம் ராஜஸ்தானில் இருந்து குடியேறிய ஸராணியா. இவர்களுக்கு இடையே பெண்கள் பல தலைமுறைகளாக விபச்சாரத்தை குலத் தொழிலாக கடைப்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  இவர்கள் தங்களது வாழ்க்கை தேவையை நிறைவேற்றி வருகின்றார்கள்.

சமூக அழுத்தங்கள், வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் இக்கிராமத்தில் ஸராணியா பழங்குடி இன பெண்கள் அறிந்தோ அறியாமலோ தங்களது உடல்களை விற்பனைப் பொருளாக மாற்றி வருகின்றார்கள். குடும்பத்தில் உள்ள ஆண்களோ இந்த வருமானத்தின் மூலம் வாழ்க்கையை நடத்துவது மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும் அழைத்து வரும் கொடுமை நிலவுகிறது.

விசார்த சமுதாய் சமர்த்தன் மஞ்ச்(வி.எஸ்.எஸ்.எம்) என்ற சமூக அமைப்பு கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக முயற்சி செய்ததன் விளைவு இக்கிராமத்தில் உள்ள ஸராணியா பெண்களுக்கு திருமணம் சாத்தியமானது. பாரம்பரிய தொழிலாக நடத்தி வரும் விபச்சாரத்திலிருந்து இப்பெண்களை மீட்பதற்கே திருமணம் நடத்துவதற்கான முயற்சி.

ஒரு பெண் திருமணம் புரிந்தாலோ அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்டாலோ அவரை விபச்சாரத்திற்கு நிர்பந்திக்க கூடாது என்பது ஸராணியா இனத்தவர்களின் கொள்கையாகும் என்று வி.எஸ்.எஸ்.எம்மின் ஒருங்கிணைப்பாளர் மிட்டல் பட்டேல் கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment