6 Mar 2012
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை அருகில் திடீரென குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
சீனிவாசன் என்பவர் ராணுவத்தில்
பணியாற்றுபவர். இவர் சொந்த ஊர் ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டான் கொட்டாய்.
சீனிவாசன் தனது நண்பர் ஒருவருடன் நேற்று(திங்கள்கிழமை) மாலை ஊத்தங்கரை
பகுதியில் உள்ள டீக்கடையில் குடித்துவிட்டு பணம் கொடுத்துவிட்டு திரும்பும்
வேளையில் குண்டு வெடித்துள்ளது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உடல்
சிதறி பலியானார். அவ்வேளையில் சீனிவாசனுடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்..
அவர் வந்த இருசக்கர வாகனத்தின் (டிஎன் 23 ஏகியூ 5727) எண்ணை போலீசார் சோதனை செய்தபோது, அந்த எண் போலி என கண்டுபிடித்துள்ளனர்.
சீனிவாசன் வீட்டில் போலீசார் சோதனை
செய்தபோது, மேலும் 3 குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டு
தயாரிப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சீனிவாசன் உடன் வந்தரை கண்டுபிடித்தால்,
குண்டு வெடித்ததற்கான காரணம் மற்றும் மேலும் 3 குண்டுகள் சீனிவாசன்
வீட்டில் இருந்தது பற்றி தெரிய வரும் என போலீசார் கூறுகின்றனர்.
சீனிவாசன் உடன் வந்தவர், சம்பவ
இடத்திலிருந்து தப்பிச் சென்றதால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் அவரை கண்டுபிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
ஏற்கனவே சென்னை அருகே செங்குன்றத்தை
அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் பசும்பொன் நகரில் கோயில்ராஜ்
என்பருக்கு சொந்தமான கிணற்றில் 5 சக்தி வாய்ந்த பைப் வெடிக்குண்டுகளை
கைப்பற்றியிருந்தனர். கோயில் ராஜும் கைது செய்யப்பட்டார். ஆனால், அதன்
பின்னர் அவருடைய பின்னணி குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை அருகே நடந்த குண்டுவெடிப்பும், ராணுவ வீரரின் வீட்டில்
கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகளும் மேலும் பல சந்தேகங்களை கிளப்புகிறது.
முஸ்லிம்களையும், நக்ஸலைட்டுகளையும்
குறிவைத்து நடத்தப்படும் விசாரணையை ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பக்கமும்
போலீசார் திருப்பினால் இச்சம்பவங்களின் உண்மை நிலவரம் தெரியவரலாம் என
உண்மையை அறிய விரும்புவோர் கருதுகின்றார்கள்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment