Tuesday, March 6, 2012

ரைபூரில் பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

ரைபூர்:சத்தீஷ்கர் மாநிலம் ரைபூரில் சரஸ்வதி நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதில் ரவி திருப்தி என்பவரின்  போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான  கிடங்கில் சோதனை செய்த போது, அங்கு பயங்கரமான, சக்திவாய்ந்த ஆயுதங்கள் தயாரிக்க உதவும் பொருட்கள் உள்ள 75 பெட்டிகள் பிடிபட்டன.


அந்த பொருட்களால் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் செய்யலாம் என்றும் இந்த பொருட்கள் அனைத்தும் நசேல்ஸ்களால் அனுப்பபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர்.

இந்த சோதனையை ஆந்திரபிரதேஷ், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சிறப்பு புலனாய்வுத் துறையினர் இணைந்து நடத்தினர்.
நாட்டின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு இதில் பங்கு இருக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
நன்றி தூது ஆன்லைன் 
******************* ************************ ************************

No comments:

Post a Comment