Saturday, March 10, 2012

உ.பி.மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் தேர்வு!

State president of the Samajwadi Party, Akhilesh
லக்னோ:முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக சமாஜ்வாதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் தேர்வுச் செய்துள்ளது.
அகிலேஷின் பெயரை அவர் முதல்வராக தேர்வுச் செய்யப்படுவதை துவக்கத்தில் எதிர்த்ததாக கூறப்படும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸம்கான் முன்மொழிந்தார். அதனை இதர உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு வெற்றிப் பெறச் செய்ததில் அகிலேஷுக்கு முக்கிய பங்கு உள்ளது. 38 வயதான அகிலேஷ் உ.பியிலேயே மிகவும் வயது குறைந்த முதல்வர் ஆவார். அகிலேஷின் பெயரை முதல்வர் பதவிக்கு குறிப்பிட்டவர் அவரது தந்தை முலாயம்சிங் ஆவார். ஆனால், முலாயமின் சகோதரர் ஷிவ்பால் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவரை முலாயம்சிங் சமாதானப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
அகிலேஷ் வருகிற திங்கள் கிழமை முதல்வராக பதவி பிரமாணம் செய்யவிருக்கிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment