Saturday, March 10, 2012

தொகாடியாவின் முஸ்லிம் எதிர்ப்பு உரை: கஷ்மீரில் மோதல், ஊரடங்கு உத்தரவு!

Pravin Togadia
ஸ்ரீநகர்:கஷ்மீரில் எல்லை மாவட்டமான ரஜவ்ரியில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியாவின் விஷம் கக்கும் உரையால் கலவர சூழல் உருவாகியுள்ளது.
வி.ஹெச்.பி ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட தொகாடியா, தனது உரையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் உருவானது. பின்னர் பலரை போலீஸார் கைது செய்தனர். தொகாடியாவின் மீது 153.A பிரிவின் படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

தொகாடியாவை கைது செய்ய கோரி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் நிலைமை சீர்குலைந்தது. போலீஸ் காலவரையற்ற தடை உத்தரவை பிறப்பித்தது. தொகாடியாவை கைது செய்யவேண்டும் என்று தெஹ்ரீ-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலி ஷா கிலானி கோரிக்கை விடுத்துள்ளார். தொகாடியாவுக்கு மனநோய் என்றும் அவருக்கு சிகிட்சை தேவை என்றும் ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாஸீன் மாலிக் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment